Nov 1, 2015

உளவுத்துறையா! நடுநிசி நாய்களா?

.க.இ.கவின் மைய கலைக் குழுத் தோழர் கோவன் மக்கள் அதிகாரம் அமைப்பிற்காக “மூடு டாஸ்மாக்கை” என்று பாடிய குற்றத்திற்காக தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்டது மிகவும் கண்டனத்திற்கு ஊறியது. 

மக்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் இது. நடுராத்திரியில் யூனிபார்ம் இல்லாமல் குண்டர்கள் போல் வந்து வீட்டு கதவை தட்டி, காரணம் சொல்லாமல் தோழரை தர தர வென்று இழுத்து சொல்லும் அளவுக்கு இந்த காவல்துறை (நடுநிசி நாய்கள்)  குண்டர்கள் நடந்து கொண்டார்கள். தமிழகத்தில் மக்கள் ஆட்சி நடக்கிறதா? இல்லை ராணுவ ஆட்சி நடக்கிறதா? தமிழ்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது இந்தியாவை ஹிந்து பாசிசம் கபளீகரம் செய்கிறது என்றால் தமிழகத்தை பார்பன ஹிந்துத்துவா பாசிசம் கபளீகரம் செய்து வருகிறது. 

அரசை, ஜெயாவை எதிர்த்து கேள்வி கேட்க்க, போராட்டம் நடத்த உரிமை மறுக்கப்படுவது ஜனநாயகத்தின் குரவலையை நெறிக்கும் செயலாகும். மது ஒழிப்பு எதிராக பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், மாணவர்கள் என்று தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை நடுநிசி நாய்களை கொண்டு அராஜகமாக ஒடுக்கும் இந்த சர்வாதிகார ஆட்சியை மக்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்து கெட்ட சபதம் மேற்கொள்ள வேண்டிய தருணம் இது. தோழர் கோவன் மதுவுக்கு எதிராக பாடியதை கொலை குற்றமாக கருதி அவரை தேசியபாதுகாப்பு சட்டம் என்கிற கருப்பு சட்டத்தில் கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். ஒவ்வொரு தமிழனும் தோழர் கோவனின் படலை அங்கீகரிக்கிறோம். முடிந்தால் எங்கள் எல்லோரையும் கைது செய்யுங்கள். தோழர் கோவன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் செய்யவேண்டும் இல்லையேல் வரும் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மக்கள் சாவுமணி அடிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.                                    
 * நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்* 

No comments: