செப் 10/2015: உலக இந்தி மாநாட்டை எதிர்த்தும் இந்தித் திணிப்புக்கு எதிராகவும் வரும் செப் 10 ஆம் நாளில் இந்தி அல்லாத தேசிய இனங்கள் மாபெரும் ட்விட்டர் பரப்புரையில் ஈடுபட உள்ளன. அனைவரும் பங்குபெற அழைக்கிறோம்!
இந்த பரப்புரையில் பங்கு கொள்பவர்கள் கட்டாயம் ட்விட்டர் கணக்கு வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் உடனடியாக ஒரு ட்விட்டர் கணக்கும் தொடங்கலாம். பரப்புரையில் கலந்து கொள்பவர்கள் செப் 10 ஆம் தேதி காலை 9 மணி முதல் இந்தித்திணிப்புக்கு எதிராக இந்த குறியீட்டை #StopHindiImperialism பயன்படுத்தி உங்கள் செய்தியை இந்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். என்ன பதிவிடுவது என்று தெரியவில்லை என்றால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று ஏதேனும் ஒரு பதிவை தேர்வு செய்து ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவிட வேண்டும்.
இணைப்பு: https://docs.google.com/…/11oEhZTdO1B1ptNUGvB2bD62oV58V…/pub
இந்தித் திணிப்புக்கு எதிரான படத்தொகுப்பு : https://drive.google.com/open…
தமிழில் இணைப்புக்கு : https://docs.google.com/…/1LcDlMPkSvulDtS9ElYoaDFseWq…/edit…
இப்பரப்புரை வெற்றி பெறுவது நம் கைகளில் தான் உள்ளது. ட்விட்டர் இணையதளத்தில் முதல் குறியீடாக நம் செய்தி வருமென்றால் நாடு முழுவதும் நம் செய்தி பரவும். இந்திய அரசின் காதுகளுக்கும் எட்டும். இந்தித்திணிப்பை தடுப்போம், தமிழ் மொழி உட்பட அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்குவோம். வாழ்க தமிழ்! தமிழர் ஹிந்தி நாட்டை விட்டு விடுபடுவோம் வாரீர்! தமிழ் தேசியம் அமைப்போம்.
No comments:
Post a Comment