10/09/2015: காஞ்சா கருப்பு, தமிழ் திரையுலகை தனது கிராம வழக்கு பேச்சின் ஊடாக சிறிய நகைச்சுவை காதாபாத்திரங்களில் நடித்து தமிழ் மக்கள் உள்ளங்களில் இடம்பிடித்தவர்.
இவரை வெறும் நடிகராகவே பலருக்கு தெரியும். ஆனால், சராசரி நடிகர்களை தாண்டி, கமல், ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் கூட செய்யாத விடயங்களை இவர் ஏழை கிராமத்து மக்களுக்கு செய்து வருகிறார்.
வேல்முருகன் போர்வெல்ஸ் என்று ஒரு சொந்தப்படம் எடுத்து வெளியிட்டார். சொந்தமாய் ஒரு போர்வெல் லாரியை வாங்கி படத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார். பின் தான் வாங்கிய அந்த போர்வெல் லாரியை பயன்படுத்தி தென் மாவட்ட பகுதியில் ஏழை மக்களுக்காக பணம் வாங்காமல் இலவசமாக இதுவரை 55 போர்வெல் குழாய் அமைத்து தந்து இருக்கிறார். அந்த பணியை இன்னும் விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார்.
சாதாரணமாக ஒரு போர்வெல் போட குறைந்தது 20,000 முதல் 30,000 வரை செலவாகும். அது போக தன் பிறந்த கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் திறந்து ஏழை மக்களுக்கு இலவச கல்வி தருகிறார். அவரின் பள்ளியை கவனித்து வருவது இவரது மனைவி சங்கீதா இவர் ஒரு physiotherapist என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் ஏழை எளிய மக்களின் பணத்தில் 10 கோடி முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள் இந்த தமிழ் சமூகத்துக்கு அப்படி என்ன செய்துவிட்டார்கள். வாங்கும் சம்பளத்திற்கு வரி ஏய்க் ஒரு ட்ரஸ்ட் வைத்து கொண்டு அங்கே இங்கே என்று சில சில்லறைகளை சிதற விடுவார்கள். சுனாமி மற்று கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இவர்களின் சுயரூபம் உலகுக்கு தெரிந்தது. இவர்கள் அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி கொடுப்பதாக அறிவித்த தொகையை ஒருசிலர் தவிர யாரும் கொடுக்கவில்லை என்பதே உண்மை.
*மலர் விழி*
No comments:
Post a Comment