Jan 9, 2012

மாட்டுக்கறி சாப்பிட்ட தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள்!

JAN 10: "ஜெ" யை கட்சிக்குள் எம்.ஜி.ஆர் கொண்டு வரும் போது பலத்த எதிர்ப்பு நிலவியது. அதற்க்கு எம்.ஜி.ஆர். உங்களில் எத்தனை பேர் மாட்டுக்கறி சாப்பிடுவீர்கள் என்று தெரியாது.

ஆனால் அம்மு ( ஜெயலலிதா) ஸ்பெ‌ன் ச‌ரி‌லிரு‌ந்து   ஸ்பெஷ‌ல் ‌பீஃ‌ப்  வா‌ங்‌கி என‌க்கு சமை‌ச்‌சி‌க் கொடு‌த்‌திரு‌க்கு. மா‌ட்டு‌க்க‌றி சா‌ப்‌பிடுற அ‌ம்முவை எ‌ப்படி ‌பிரா‌மி‌ன்னு நினை‌க்‌கி‌றீ‌‌‌ங்க’‌ன்னு சொ‌ன்னா‌ர்.

இதைத்தான் ஜெ தனது கட்சி நிர்வாகிகளிடம் கூறி இருக்கிறார், "இ‌‌ன்னைக‌்கு கருணா‌நி‌தியு‌ம்,‌வீரம‌ணியு‌ம் நா‌ன் ‌பிரா‌மி‌ன்னு‌ம் எ‌ன் கூட இரு‌க்‌கிறவ‌ங்களை ம‌யிலா‌ப்பூ‌ர் மாஃ‌பியா‌ன்னு‌ம் சொ‌ல்றா‌ங்க”எ‌ன்றபடி ச‌ி‌ரி‌த்‌திரு‌க்‌கிறா‌ர்” ஜெ இதை செய்தியாக வெளியிட்ட நக்கிரனுக்குத்தான் கல்லடி. தனது அதிமுக கட்சி அடிமைகளிடம் சொன்னதை  தங்கள் ஹிந்துத்துவா நண்பர்கள் அறிய செய்து விட்டதே இந்த நக்கீரன் என்ற கோபம் போலும்.


"ஜெ" மாட்டு கறி சாப்பிடுவதால் அவர் இமேஜ் ஒன்றும் குறைந்து போகாது. தமிழக மக்களில் பெரும்பான்மையினர் விரும்பி உண்ணும் ஒரு உணவைதான் அவரும் சாப்பிட்டுள்ளார். இதனால் அவர் வருத்தப்பட தேவையில்லை. ஜெ மற்றும் சசி கலாவை இணைத்து கேவலமாக சில பத்திரிக்கைகள் எழுதின அதற்காக இவர் வருத்தப்பட்டிருந்தால் அதில் நியாயம் இருக்கிறது. இதற்காக அவரும் அவரது தொண்டர்களும் ஆவேசப்பட  அவசியம் இல்லை.

இனிமேல் "ஜெ" மாட்டுக்கறி ரகசியமாக சாப்பிட தேவையில்லை பகிரங்கமாக அதை சாப்பிடலாம். ஏழை, எளிய மக்களின் திடகாத்திர உணவான மாட்டு கறியை சாப்பிடுவதில் என்ன வெட்கம், அவமானம். இதை பகிரங்கமாக செய்வதன்  மூலம் முதல்வர் ஏழை, எளிய மக்களோடு தன்னை இணைத்து  கொண்டவர் ஆகிறார். இதனால் அவரது செல்வாக்கு இன்னும் மக்கள் மத்தியில் உயருமே தவிர குறையாது.

தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஒருவரே ஏழை, எளிய மக்களின் உணவை சாப்பிடுவதை கேவலமாக கருதுவது முறையல்ல. சில மக்கள் மாட்டுகறி சாப்பிடுவார்கள் ஆனால் அதை வெளியே சொல்ல வெட்கப்படுவார்கள்.  ஹிந்துத்துவால் வர்ண அடிப்படையில்  கீழ்ஜாதி மக்கள் என்று சொல்லபடுபவர்கள் சாப்பிடும் ஒரு உணவை தாங்களும் சாபிட்டால் அது கெளரவ்  குறைச்சல் என்று சிலர் தவறுதலாக அர்த்தம் விளங்கி வைத்துள்ளனர்.

மனிதர்களில் ஏது கீழ்ஜாதி மேல்ஜாதி இது வர்ணாசிரமம் உண்டாக்கிய சதி வலை. உணவுகளில் ஏது மேல்ஜாதி உணவு கீழ்ஜாதி உணவு என்றெல்லாம் எல்லாம் ஒன்றுதான். அவர் அவர்களுக்கு பிடித்ததை சாப்பிட வேண்டியதுதான் உணவிலுமா ஜாதி வேறுபாடு. செத்த மாட்டை உணவாக உட்கொள்ள எடுத்து சென்ற தலித் மக்களை எரித்து கொன்றவர்கள்தான் இந்த வர்ணாசிரம் வெறியர்கள்.

மாட்டுக்கறி சாப்பிடுவதை கேவலமாக நினைப்பது இந்தியாவில் மட்டும் தான். உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பணக்காரர்களின் முக்கிய உணவு மாட்டுக்கறி. அவர்கள் விருந்தில் மாட்டுக்கறி முக்கிய அங்கம் வகிக்கும். இது தெரியாமல் நமதூர் மக்களில் பலர் மாட்டிறச்சியை ரகசியமாக வாங்குவது, சமைப்பது இது அவசிய மற்ற ஒரு செயலாகவே தோன்றுகிறது. மொத்தத்தில் விரும்புபவர்கள் அதை வெளிப்படியாக் சாப்பிடலாம் இதற்க்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையில்லை.
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

28 comments:

இப்னு அப்துல் ரஜாக் said...

மாட்டுக்கறி நல்ல போஷக்குன்ன்காவ்,weldon

அப்துல் ஹகீம் said...

கெட்ட மாட்டுக்கறியை தின்றதால்தான் முகம்மதுவுக்கு பைத்தியம் பிடித்து உளறினார் என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்
அப்படி உளறியதை நாம் அல்லாஹ் கொடுத்தார் என்று நினைக்கிறோம். அது தவறு.
அந்த தவறான பாதையை விட்டு விலகி மனிதர்களாக ஆகவேண்டும்.

Anonymous said...

பன்றி வளர்ப்பது சுலபம் அதனால் இலாபம் அதிகம்(நல்லா குட்டி போடும்). அதோடு அதிக இறைச்சி கொண்ட மிருகம். ஆகையால் எல்லோரும் பன்றி சாப்பிடுவோம்.!!

புனிதப்போராளி said...

ஏ௧ இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைத்து தமிழ்மக்களின் மீதும் உண்டாவட்டுமாக ..தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாக மாட்டுக்கறி சாப்பிடனும் அப்பதான் நல்ல ஊட்டச்சத்துகிடைக்கும் மண்ணாங்கட்டி மருத்துவர்கள் சொல்லைக்கேட்டால் உடல் ஆரோக்கியம் போய்விடும் பார்ப்பனர்கள் அசைவ உணவு சாப்பிடமாட்டார்கள் என்று சொல்லும் காலம் போயி இப்ப திருட்டுத்தனமாக சாப்பிடும் நிலைக்கு வந்துவிட்டார்கள் ஹிந்துத்துவா நாடோடி கும்பல் மாட்டுக்கறி சாப்பிடக்குடாது என்று சொல்லுவதற்கு மாடு என்ன உன் அப்பன்வீட்டு சொத்தா அல்லது மாட்டை நீ படைத்தாயா மடப்பயல்களா ...,,,,,, பொதுமக்கள் அனைவரும் மாட்டுக்கறி நல்லா சாப்பிட்டுங்கள்....,,,புனிதப்போராளி

Anonymous said...

மாட்டில் இருந்து பெறப்படும் இறைச்சி மாட்டிறைச்சி ஆகும். உலகளவில் மாட்டிறைச்சி ஒரு முக்கிய உணவு ஆகும். குறிப்பாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மாட்டிறைச்சி விரும்பி உண்ணப்படுகின்றது.

Anonymous said...

பசுவை புனிதமாகப் போற்றுகின்ற மக்கள் புனிதமானவர்களாகவும் பசு உணவினை உண்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும் முத்திரை குத்தப்பட்டிருக்கின்றனர். தலித்துகளில் குறிப்பாக பறையர்களின் தோற்றக் கதைகளில் ‘செத்த மாட்டை அகற்றுவென கடவுள் பிறப்பித்த கட்டளை’யும் ஒரு கதையாக இருக்கிறது. இந்தக் காரணத்தினால் தீண்டாமைக்குட்பட்ட, ஆனால் அதேசமயம் மாட்டுக்கறி உண்ணாத சாதியினர் இவ்வாறு ஒரு கேள்வியினை எழுப்புகின்றனர்:

Anonymous said...

பொதுவாக இன்று இறைச்சிக் கடைகளில் சென்று மாட்டிறைச்சி வாங்குவதுபோல் அன்று அவ்வழக்கம் இருந்திருக்கவில்லை. மாட்டிறைச்சி என்பது கடைகளில் விற்பதென்பது சில பத்தாண்டுகளாகத்தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கு முன்னர் மாடு தலித் கிராமங்களிலேயே அறுக்கப்படும். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் மாடு அறுப்பதில் சிறந்து விளங்கினர். மாட்டின் தோலில் சிறு கிழிவு ஏற்படாமல் மாடு அறுக்கின்ற மூதாட்டிகளும் இருந்திருக்கின்றனர். தீபாவளி, புத்தாண்டு, கரிநாள் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமின்றி வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதம் இருமுறை அல்லது ஒருமுறை மாடு அறுக்கப்படும். எடை போட்டு விற்பனை செய்வதற்குப் பதில் கூறு போட்டு கொடுக்கப்படும். nanri- keetru

Anonymous said...

மாடு அறுக்கும் பொழுது தலித் குழந்தைகள் இரண்டு காரணங்களுக்காக குதூகலமடைவர். ஒன்று, ருசியோடு வறட்டித் தரப்படும் மாட்டின் ரத்தம், இரண்டாவது மாட்டிலிருந்து எடுக்கப்படும் ஆனால் உண்ணப்படாத ஊத்தாம்பட்டி என்றழைக்கப்படும் ஒருவகைக் குடல். இவை இரண்டிற்காகவும் மாடு அறுக்கப்படும்பொழுது அதனைச் சுற்றி குழந்தைகள் உற்சாகத்தோடு அமர்ந்து கொள்வர். முதலில், ரத்தம் வறட்டி கிராமங்களிலுள்ள குழந்தைகளுக்குப் பாகுபாடின்றி வழங்கப்படும். பின்னர் மாடு அறுக்கப்பட்டு அதிலிருந்து எடுக்கப்படும் ஊத்தாம்பட்டியும் அவர்களுக்கே வழங்கப்படும். ஊத்தாம்பட்டி அறுக்கப்பட்டு அது உடைந்த மண்பானைகளின் கழுத்துப் பகுதியில் இறுக்கமாக இழுத்துக் கட்டப்பட்டு பின்னர் அதில் தேங்காய் எண்ணெய் தடவப்பட்டு அது வெயிலில் நன்றாக காய வேண்டும் என்பதற்காக வீட்டின் கூரையின் மேல் வைத்துவிடுவர். தொப், தொப் என்ற சத்தத்தில் தொடங்கி டன், டன் என்ற ஓசை வரும்வரை அவ்வப்பொழுது அதனை சிறு குச்சியால் தட்டிப்பார்த்து ஓசையின் தன்மையினை குழந்தைகள் சோதித்துக் கொள்வர்.

Anonymous said...

ஆனால் இந்தக் கொண்டாட்டங்கள் இன்று பெரும் மாற்றத்திற்குள்ளாகிவிட்டது. இந்த மாற்றம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதிகளில் 1990களிலிருந்தே தொடங்கிவிட்டது. புன்செய் நிலப்பரப்பினைக் கொண்டிருக்கும் இப் பகுதிகளில் இந்து, கிறிஸ்துவ நாடார்கள் எண்ணிக்கை, பொருளாதாரம், அரசியல் என அனைத்துத் தளங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்ற பிரிவினர் ஆவர். இப்பகுதியல் தலித்துகளில் பறையர் சாதியினர் வசிக்கின்றனர். ஆட்டிறைச்சியினை உணவாகவும் அதனை வியாபாரமும் செய்து கொண்டிருந்த நாடார்கள் மாட்டிறைச்சி விற்பனை செய்கின்ற தொழிலிலும் ஈடுபடத் தொடங்கினர். ஆரம்ப காலங்களில் பறையர்களைக் கொண்டு மாடுகளை அறுத்து விற்பனை செய்தனர்.

Anonymous said...

ஏ௧ இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைத்து தமிழ்மக்களின் மீதும் உண்டாவட்டுமாக ..தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாக பன்னி கறி சாப்பிடனும் அப்பதான் நல்ல ஊட்டச்சத்துகிடைக்கும் மண்ணாங்கட்டி மருத்துவர்கள் சொல்லைக்கேட்டால் உடல் ஆரோக்கியம் போய்விடும் இஸ்லாமியர்கள் பன்னி கறி உணவு சாப்பிடமாட்டார்கள் என்று சொல்லும் காலம் போயி இப்ப திருட்டுத்தனமாக சாப்பிடும் நிலைக்கு வந்துவிட்டார்கள் அரேபிய நாடோடி கும்பல் பன்னி கறி சாப்பிடக்கூடாது என்று சொல்லுவதற்கு பன்னி என்ன உன் அப்பன்வீட்டு சொத்தா அல்லது பன்னியை நீ படைத்தாயா மடப்பயல்களா ...,,,,,, பொதுமக்கள் அனைவரும் பன்னி கறி நல்லா சாப்பிட்டுங்கள்

Anonymous said...

டந்த காலங்களைப் போல் இன்றும் பசுமாடு இந்துத்துவ வளர்ச்சிக்கானப் பண்பாட்டு அரசியல் குறியீடாகப் பயன்படுத்தப்படுகின்றது. புனிதமான பசுவதையைத் தடுக்கின்றோம் என்ற பெயரில் தலித்வதையை அவ்வமைப்புகள் விளைவித்துக் கொண்டிருக்கின்றன. மிகச் சமீபத்தில், இறந்த மாட்டின் தோலினை அறுத்தெடுத்து தோல் வியாபாரத்திற்குச் சென்று கொண்டிருந்த தலித்துகள் இந்துக்களால் அடித்தே கொல்லப்பட்டது தலித்வதைக்கான சிறந்த உதராணம்! பசு புனிதம் என்ற இந்துத்துவத்தின் கருத்தாக்கத்திற்கும் அது விளைவிக்கின்ற வன்முறைக்கும் எதிரான போராட் டம் அறிஞர்களாலும் இயக்கங்களாலும் முன் னெடுக்கப்பட்டிருக்கிறது. இந்து சமூக அமைப்பில் “புனிதமானவர்கள்” என்று கூறப்படுகின்ற பிராமணர்கள் மாட்டுக்கறி உண்ட வரலாற்றினை மாட்டைத் தோலுரிப்பதுபோல் அறிஞர்கள் உரிக்கின்றனர்.

Anonymous said...

அன்பு பொன்னோவியம், உணவில் ஒளிந்திருக்கும் சாதி என்ற கட்டுரையிலும், டி.என்.ஜா பசுவின் புனிதம் என்ற நூலிலும் யாகம் என்ற பெயரில் பிராமணர்கள் மாட்டுக்கறி உண்ட வரலாற்றினை தோலுரித்துக் காட்டியிருக்கின்றனர். அறிவுத்தள செயல்பாடுகள் மட்டுமே பெரும் மாற்றத்தினை ஏற்படுத்திவிடாது, சமூக மாற்றத்திற்கு இயக்கச் செயல்பாடு அவசியம். இந்துத்துவத்திற்கு எதிரான இயக்கங்கள் குறிப்பாக இடது சாரி இயக்கங்களின் கலையிலக்கிய அணிகள் தாங்கள் நடத்துகின்ற கலையிலக்கிய நிகழ்வில் மாட்டுக்கறி விருந்து படைக்கின்றனர். மாட்டுக் கறி உண்பதை தலித் இயக்கங்கள் தங்களின் அடையாளமாகப் பறைசாற்றியது.

Anonymous said...

பசுவை புனிதமாக போற்றுகின்ற இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிரான சரியான பண்பாட்டு அரசியல் மாட்டுக்கறி விருந்து படைப்பதுதான். இதனால் இதுகாறும் ஏதாவது சில காரணங்களினால் மாட்டுக்கறி உணவினை தவிர்த்து வந்தவர்கள்கூட இந்துத்துவத்திற்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டினால் மாட்டுக்கறி உண்ணத் தொடங்கியிருக்கின்றனர்.

Anonymous said...

ருசி, குறைந்த விலை ஆகியவற்றின் காரணமாக தலித்தல்லாதோர் மாட்டுக்கறி உண்ணத் தொடங்கியிருக்கின்றனர். இந்தப் போக்கு சாத்தன்குளம் பகுதியில் சுமார் 5 வருடங்களுக்கும் மேலாகவே நடைபெற்று வருகிறது. இது முன்னெப்பொழுதும் நடைபெற்றிராத மாற்றம் ஆகும். அதாவது, சாதிக்கும் உணவிற்குமான ஒரு முடிச்சு ஏற்படுத்தப்பட்ட பின்னர் மாட்டுக்கறி உண்பதென்பது தலித்துகளுக்கு மட்டுமான உணவாகவே சுருக்கப்பட்டுவிட்டது. ஆனால் தற்பொழுது மாட்டுக்கறி சாதியைக் கடந்து வருகிறது என்பது மிகவும் முக்கியமான மாற்றமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

Anonymous said...

உணவுப் பழக்க வழக்கங்களில் மலையாளிகளிடம் சாதியப் படிநிலை இருக்கிறது என்ற பொழுதிலும் மாட்டுக்கறி என்பது அனைவருக்குமான உணவு என்ற நிலையினை நோக்கி அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். மாட்டுக்கறி மக்களுக்கானது அது சாதியைக் கடந்தது என்ற நிலையை உருவாக்குகின்ற தொடக்க நிலையில்தான் தமிழகம் இருக்கிறது.

Anonymous said...

ருசியினாலும் குறைந்த விலையில் கிடைக்கின்ற காரணத்தினாலும் மாட்டுக்கறியினை உண்ணத் தொடங்கியிருக்கின்ற மக்களை இந்துத்துவத்திற்கு எதிரான பண்பாட்டுப் போராட்டத்தில் இணைக்க வேண்டும். இது வெறும் இந்துத்துவத்திற்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. அது உணவிற்கும் சாதிக்கும் உள்ள உறவினை துண்டிப்பதாகும். அவ்வாறு துண்டிக்கப்பட்டால் மாட்டுக் கறி உண்ணுபவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற கருத்தாக்கம் ஒழிவதற்கான வழிவகை உருவாகும். மாட்டுக்கறி சாதியையும் தீண்டாமையையும் கடக்க வேண்டிய தருணமிது.

Anonymous said...

முதலமைச்சரும் அதிமுகவினரும் பெருமைப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், இங்கிலாந்து மகாராணி வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையில் மாட்டிறைச்சி தான் சமைக்கப்படுகிறது. மகாராணியும், அவரது கணவரும் அதைத்தான் விரும்பி உண்ணுவார்களாம்.

Anonymous said...

உலகளவில் மாட்டிறைச்சி என்பது ஒரு முக்கிய உணவு ஆகும். குறிப்பாக அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மாட்டிறைச்சி என்பது விரும்பி உண்ணப்படுகின்றது. இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் மக்கள் மாட்டிறைச்சியை உண்ணுகிறார்கள். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள், உழைப்பாளி மக்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் என பல்வேறு தரப்பு மக்களும் உண்ணப்படும் உணவு மாட்டிறைச்சி.

Anonymous said...

ஏழை மக்களின் சத்துமிக்க உணவாகிய மட்டை அறுக்காதே என்று சொல்லி முட்டாள் தனமாக மாட்டை பராமரிக்கிறோம் பேர்வழி என்று சொல்லி அதற்க்கு பசுமாதா மையங்களை அமைத்து உணவிட்டு பொருளாதாரத்தை வீண்விரயம் செய்து வருகிறார்கள்.

உழைக்கும் மக்கள் மாட்டை உழவுக்கு பயன்படுத்துவார்கள், வண்டி மாடாக பயன்படுத்துவார்கள் மாட்டுக்கு வயதானதும் அதை கரியாக அறுத்து சாப்பிட விற்று விடுவார்கள். ஆனால் ஹிந்து முன்னணி தலைவர்

வீரத்துறவி ராமகோபாலா ஐயரோ மாட்டுக்கு காப்பகம் அமைத்து மாடுகள் சாகும் வரை உணவு கொடுத்து நல்லடக்கம் செய்யச் சொல்கிறார.

மனிதனுக்கு உணவில்லை, மனிதன் வறுமையில் சாகிறான், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் நோய்களில் சாகிறான் மனிதனை கவனிக்க சக மனிதனால் முடியவில்லை. சக மனிதர்கள் மீது கருணை காட்ட முடியவில்லை மாட்டின்மீது கருணை வந்து விட்டது. அப்படியானால் இவர்களை கருணையில் சிறந்த புத்தர் மாதிரி என்று நினைத்து விடாதீர்கள். இவர்கள் ஹிந்து அல்லாத மத்த மக்களை கொன்று குவிப்பதில் ஆனந்தம் அடைவர், அவர்கள் சொத்துக்கள், பெண்களின் கற்புகளை கொள்ளையடிப்பதில் பேரானந்தம் அடைவர்.

Anonymous said...

இப்படி மனித நேயமே இல்லாத இவர்களுக்கு எப்படி மாட்டின் மீது அக்கறை வந்தது என்று பார்க்கிறீர்களா? அதுதான் தங்கள் கொண்டுள்ள ஹிந்துத்துவா வர்ணாசிரம வெறி. இதில் மாட்டை கடவுள், புனிதம் என்று சொல்லி இருக்கிறது இல்லையா? அதனால் வந்த வினை. எல்லா மக்களும் தின்னும் ஒரு உணவை கடவுள் ஆக்கினால் எப்படி? இந்தியாவில் மட்டை அறுக்காதே என்று தடை பண்ணிவிடுவாய் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொண்டாலும் உலகம் முழுவதும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு மாடு ஆச்சே என்ன செய்வார் வீரத்துறவி ராமகோபாலன்.

இந்தியவவை தவிர வேறு எங்காவது சென்று இதை சொன்னால் ராம கோபாலனையும் அவர் சார்ந்துள்ள ஹிந்துத்துவா இயக்கத்தவரையும் செருப்பால் அடிப்பார்கள். செருப்படி பட ராமகோபால ஐயரும், கேமா மாலினியும் ரெடியா? ஒரு சிறுபான்மை பிராமண சமூகம் தாங்கள் நலனுக்காக பெரும்பான்மை மக்களின் உணவை நிருத்தச்சொல்வது எந்த விதத்தில் நியாயம். இந்தியாவின் உழைக்கும் மக்களின் உணவு மாட்டிறைச்சி இதை தடுக்க ஒரு ராமகோபாலன் இல்லை ஓராயிரம் வந்தாலும் முடியாது. வர்ணாசிரமம் என்பது பார்ப்பன செயல்திட்டம் இது இந்துக்களின் மதம் அல்ல. இந்துமதம் சாந்தி சமாதனம் மிக்கது, சாதுக்கள் நிறைந்தது.

Anonymous said...

யாரிடமாவது உன் தாயார் பெயர் என்ன என்றால் அவன் தாயின் பெயரை சொல்வான் .ஆனால் பார்பனிடம் கேட்டால் என்தாய் மாடு என்று சொல்வான் .மாட்டின் பிள்ளைக்கு
மாட்டு புத்தி தான் இர்ருக்கும் .அவர்கள் கவலை படுவதில்லும் அர்த்தம் இருக்கிரர்த்து நீங்கள் எல்லாம் மாட்டை அறுத்து தின்று vittal அவர்கள் குடிக்க மாட்டு மூத்திர திற்கு எங்கு போவர்கள் .
உங்கள் மூதிரதைய்யா ?குடிக்க முடியும் ?

Anonymous said...

புலாலுணவு, புல்லுணவு என்ற வகைப்பாட்டில் இன்னொரு வேடிக்கையான நிகழ்முறையையும் நாம் கவனிப்பதில்லை. புல்லுணவினர் எனத் தங்களைத் தம்பட்டமடித்துக் கொள்வோர் மாடாகிய விலங்கிலிருந்து கிடைக்கும் விலங்குணவாகிய ஆனைந்து எனப்படும் பால்படு பொருட்கள் (பால், மோர், தயிர், வெண்ணெய், நெய்) குறிப்பாக நெய் இன்றி உண்ணவேமாட்டார். நெய்விட்டு உண்பதென்பது உயர்வுக்கு இன்றியமையாத அடையாளமாகக் கருதப்படுகிறது. பார்ப்பனர்களும் அவர்களைப் பின்பற்றி பிற வெள்ளாளக் கட்டாளர்களும் இப்போது முட்டையையும் புல்லுணவென்று முத்திரை குத்தி விட்டனர்.

Anonymous said...

நம் நாட்டில், குறிப்பாக வட இந்தியாவில் “விலங்குக் கொழுப்பு” பற்றிய கூக்குரல் அடிக்கடி எழும். பாராளுமன்றத்தில் கூட இது எழுப்பப்படும். ஆனால் நெய் ஒரு விலங்குக் கொழுப்பு தானே என்று கேட்கும் தெளிவு இதுவரை யார்க்கும் ஏற்படவில்லை.

Anonymous said...

மாட்டிறைச்சியைத் தின்போரைச் சாதிகளிலெல்லாம் இழிந்த சாதியினராகக் கொள்ளுவது நம் நாட்டு மரபு. புலையர், சக்கிலியர், பறையர் ஆகியோரைத் தாழ்த்துவதற்கு இதையே காரணமாகக் காட்டுகின்றனர். ஆனால் மாட்டைப் “பிழிந்து” அதன் குருதியிலிருந்து தோன்றும் பாலையும் நெய்யையும் பெருமையுடன் அருந்தும் பார்ப்பனர் அந்தனர்களென்று போற்றப்படுகின்றனர். அவ்வாறு குருதியும் ஆற்றலும் மேற்சாதியினரால் பிழியப்பட்ட பின் எஞ்சிய சக்கையை உண்ணும் கீழ்ச்சாதியினர் புலையர், சக்கிலியர், பறையர் என்று பழிக்கப்படுகின்றனர். இந்த மடைமையையும் கயமையையும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது நம் கடமையாகும்.

தமிழ் மாறன் said...

சத்தாண அதேநேரம் உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் முதல் பணக்காரன் ஏழை என்று சாப்பிடும் ஒரு உணவை சாப்பிட்டது வெளியே தெரிந்ததற்கு ஜெ ஏன் வருத்தப்பட வேண்டும். எந்த பார்பனர்கள் இப்போது கறி சாப்பிடவில்லை.

Anonymous said...

ஜெ அம்மா மாட்டுகறியை தமிழக மக்களின் உணவாக அறிவித்து இனிமேல் சத்துணவு கூடங்களில் அதை குழந்தைகளுக்கு உணவாக கொடுக்க ஏற்ப்பாடு செய்ய வேண்டும். முதல்வர் செய்வாரா?

Anonymous said...

அமெரிக்காகாரன் பன்னி தின்கிறான் என்றால் அது பண்ணையில் வளர்க்கப்பட்டது. நம்ம ஊரு பன்னி எல்லாம் மலத்தை தின்று வளர்பவை.

tamilan said...

பசுவின் புத்திரர்கள்!
பசுவை நாம் தெய்வமென்று மதிக்கிறோம். முப்பத்து முக்கோடி தெய்வங்களும் பசுவின் உடலில் குடி கொண்டிருப்பதை நமது சான்றோர்களும், ஆன்றோர்களும் கூறிச் சென்றிருக்கிறார்கள்.
நமது சான்றோர்களும், ஆன்றோர்களும் கூறிச் சென்றிருக்கிறார்கள்.

ஆனால் நமது நாட்டில் இன்று மாமிசத்திற்காக தினசரி ஆயிரக்கணக்கில் பசுக்கள் கொல்லப்படுகின்றன. இந்நிலையில் மத்தியப் பிரதேச அரசு துணிச்சலாக பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வந்துள்ளது.

இந்தப் பசுவதைத் தடைச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதிபாபாட்டில் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் பசுக்களைக் கொல்வோர்க்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க புதிய சட்டம் வகை செய்கிறது.

பசுக்களைக் கொல்வதற்காக வாகனங்களில் ஏற்றிச் செல்வோர்; பசுக்களை வாங்கி விற்கும் ஏஜெண்ட் உள்ளிட்ட அனைவருமே குற்றவாளிகளாகக் கருதப்பட்டு அதிகபட்ச தண்டனை விதிக்க சட்டம் வகை செய்கிறது. மத்தியப் பிரதேச அரசை மனமாரப் பாராட்டுகிறோம் - இப்படி ஒரு தலையங்கம் ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரதம் (27.1.2012) எழுதுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

பசுவின் உடலில் உறையாத கடவுள்களே கிடையாதாம். அது கோமாதாவாம். அதனால் கொல்லக் கூடாதாம்.
இதன் மூலம் இந்து மதவாதச் சிந்தனையுடன்தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது வெளிப்படை! பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் இந்துத்துவாவின் தாண்டவம்தான் நடக்கும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!

உணவுப் பழக்கம் என்பது ஒருவரின் தனிப்பட்ட பிரச்சினை. அதில் அரசு தலையிடுவது என்பது தவறானது.
உலகம் முழுவதும் மாட்டுக்கறி உணவு முதன்மையான இடம் பெற்றுள்ளது. கிடைக்கும் சத்துள்ள உணவில் ஓரளவு மலிவானது மாட்டுக்கறியே!
சாதாரண மக்கள் அதைப் பயன்படுத்தி வருவதைத் தட்டிப் பறிக்க இவர்கள் யார்?
செத்துப் போன பசு மாட்டின் தோலை உரித்த அரியானாவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட தோழர்களைப் படுகொலை செய்தவர்கள் இந்தச் சங்பரிவார்க் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
மனிதர்களைவிட செத்துப்போன பசுவின் புனிதம் இவர்களுக்கு முக்கியமானது என்பதிலிருந்தே - இவர்களுக்கு மனிதப் பண்பு அறவே கிடையாது என்பது விளங்கிடவில்லையா?


பசுவின் உடலில் கடவுள்கள் உறைவது உண்மை யென்றால் பசுக்களுக்கு ஏன் நோய்கள் வருகின்றன - செத்துப் போகின்றன?

மாடுகளில் அது என்ன பசு மாட்டுக்கறியை மட்டும் உண்ணக் கூடாது என்ற தடை? காளை மாடு சிவனின் வாகனமாயிற்றே. அதனைக் கொல்லலாமா?
எருமைக் கிடா எமனின் வாகனமாயிற்றே. அதன் கறியைச் சாப்பிடலாமா?
சேவல் முருகனின் வாகனமாயிற்றே - அதன் கறியை உண்ணக் கூடாது என்று போராட்டம் நடத்திட முன் வருவார்களா?

ஒருமுறை விவேகானந்தரிடம் பசுக்களைப் பரிபாலிக்கும் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சாரகர் வந்து பசுக்கள் பாதுகாப்புப் பணிக்கு நன்கொடை கொடுக்குமாறு கேட்டார். அப்பொழுது அந்தப் பிரச்சாரகரைப் பார்த்து உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன? என்று கேட்டார் விவேகானந்தர். நமது நாட்டில் உள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்கள், வலிவிழந்தனவும், கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு வைத்தியசாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று பதில் சொன்னார். மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் - இவர்களுக்காக உங்கள் சங்கம் என்ன செய்தது? என்ற கேள்வியை எழுப்பினார் விவேகானந்தர்.

பஞ்சம் முதலிய துன்பம் வரும்போது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத் தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது. பஞ்சங்கள் என்பவை மக்களுடைய பாவ கருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே!
பசுத் தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்கடைக்காரர்களின் கையில் அகப்பட்டு இறக் கின்றன என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே என்று மடக்கினார் விவேகானந்தர். ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் பசு நம் அன்னை என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே என்றார் பிரச்சாரகர். அப்பொழுது நறுக்கென்று ஒன்று சொன்னார் விவேகானந்தர் ஆம். பசு நம் அன்னை என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்? என்று கேலியாகச் சொன்னார்.


மாட்டுக்குப் பிறந்தவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மத்தியப் பிரதேச சட்டத்தைப் பார்த்தால் தெரிகிறதே!
------------------- "விடுதலை” தலையங்கம் 21-1-2012