AUG 5, நண்பர்களே, நக்கீரனில் ஒரு செய்தி படித்தேன், ஈழ தமிழர்களின் மறு வாழ்வுக்காக நடந்த கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வில் சந்தானம் , செல்வமணி, ரோஜா , பாரதி ராஜா போன்ற நடிகர்கள் உற்சாகத்துடன் கையெழுத்து போட்டனர் என்றும் பரத் போட தயங்கினார் பின் சந்தானம் சொன்ன பிறகு கையெழுத்து போட்டார்.
விஜய் கை எழுத்து போட மறுத்து விட்டார். அதை அவரது அப்பா சந்திர சேகரிடம் சொன்னதற்கு அவனிடம் கை எழுத்து எல்லாம் வாங்க வேண்டாம். வேலை நேரத்தில் தொந்தரவு செய்தால் நாங்கள் காவல் துறை உதவியை நாடுவோம் என்று கூறினாராம் .நான் கேட்கிறேன் ரத்த உறவுகளுக்காக ஒரு கையெழுத்து கூட போடாத இவர்கள் தமிழர்களா ? இல்லை இவர்களின் படத்தை முதல் வரிசையில் நின்று பார்க்கும் நாம் தமிழனா? கேவலமாக இல்லை,
வில்லு படத்தில் ஒரு அறிமுக பாடலில் " ஆண்டவனே என்ன பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டால் அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன் என்று வரும் " அதிலே விஜய் ரொம்ப உணர்ச்சி பூர்வமாக நடித்து இருப்பார் ஆனால் அவர் அன்று நடிக்க வில்லை இன்றுதான் தான் உண்மையாகவே அது எல்லாம் பொய்டா என்று கூறி நடித்து இருக்கிறார். நீங்கள் எல்லாம் ஏன் அப்படி நடிக்க வேண்டும் தமிழனுக்காக ஒரு கையெழுத்து போட வக்கில்லை உன் படத்தை போய் நாங்களும் பாக்குறோம் பார் எங்களை அடிக்க வேண்டும் . .......................
விஜய் கேட்கலாம் என் ஒருவன் கையெழுத்து தான் உங்களுக்கு முக்கியமா என்று, நீ போட்டால் உன்னை பின்பற்றுகிற எல்லாரும் போடுவார்கள் இல்லையா, நீங்கள் கோகோ கொலோ விளம்பரத்தில் நடித்தால் வாங்குகிறார்கள். தமிழனின் விடுதலையை உனக்கு வேலையின் தொந்தரவு என்றும். காவல் துறையை நாடுவேன் என்றும் கூறி இருக்கிறாய் இதற் கெல்லாம் காலம் பதில் சொல்லும் தமிழர்கள் பதில் சொல்வார்கள்.

இது ஒரு நண்பர் பகிர்ந்துக் கொண்ட விடயம், நம் தமிழ் மக்கள் நிழலுக்கும் நிசத்துக்கும் உள்ள உண்மையை விளங்கிக் கொள்ளத் தொடங்கி விட்டனர் என்பது வெளிச்சம். அந்த வெளிச்சத்தில், அரிதாரம் பூசி லைம்லைட்டில் மக்களை மயக்கிக் காசுப்பார்த்த ஒருசில கூத்தாடிகளின் உண்மை முகங்கள் வெளிப்படத் துவங்கியுள்ளன.
நட்புடன் யாழினி...
12 comments:
ஒரு ஆக்கத்தை பிரசுரிக்க முன்னர் அதை ஆராய்ந்து பிரசுரியுங்கள்...
கையெழுத்து சேகரிப்பதற்கு திருமாவளவனுக்கு என்ன தகுதியிருக்கிறது...இந்த விடயத்தில் விஜயை மாத்திரம் குற்றம் காணாதீர்கள்..
இலங்கை சென்று மகிந்தாவின் விருந்துண்டுவிட்டு வந்த திருமாவளவன் கையெழுத்து கேட்டால் விஜய் போடவேண்டுமா. விஜய் போட்டிருந்தால்தான் தமிழன் அல்ல.. விஜய் செய்தது சரி
Nobody denies Vijay is just acting regarding the cause the of Tamil Eelam.But Thirumavalavan conducting signature campaign is the best joke of all.
The tamils should reject both of them.
தேர்தலில் தோல்வியடைந்த திருமாவளவன் தன்னுடைய கட்சியைக் காப்பாற்றுவதற்காக நடத்தும் நாடகம் இந்த கையெழுத்து இயக்கம். இதை ஏன் இலங்கை தமிழர்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள். உண்மையில் உங்களுக்காக உண்மையாக போராடுபவர்கள் இந்தியாவில் இல்லை. இவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
சகோ நானும் முதல் இந்த செய்தியை பார்த்துவிட்டு குழம்பிவிட்டேன்...
இதற்கொரு பின்னணி இருக்கும்..
எல்லோரும் அருமையானவர்களென்று சொல்ல முடியாது...
நடப்பதை இருந்துதான் பார்க்க வேண்டும்....
What is done by Thirmavalavan at year 2009...May?
why he collecting sign now....?
After my relations of 100000 people dead.....
/*இலங்கை சென்று மகிந்தாவின் விருந்துண்டுவிட்டு வந்த திருமாவளவன் கையெழுத்து கேட்டால் விஜய் போடவேண்டுமா*/
சொன்னது ஒரு அனனானி, தன் பெயரைகூட போட துணிவுயில்லாத பேடி!!!
திரு பெயரில்லா நீங்கள் வளரவேண்டும்
பிடிக்காத ஒருவனை பார்த்தால் முறைத்துகொள்ளவும், அடித்துகொள்ளவும், இது ஒன்றும் சிறுபிள்ளை சண்டையல்ல.
கோபங்கள் பல பக்கங்களாக இருந்தாலும் அது ஒரு பக்கம் இருக்க வேண்டும் இது ஒன்றும் சினிமா அல்ல ராசபக்சே தேநீர் கொடுக்கும் போது வேண்டாம் என்று சொல்ல, சொன்னவுடன் இசை வாத்தியங்கள் முழுங்க அது ஒன்றும் திரைஅரங்கும் அல்ல.
முதலில் திருமாளவளை பற்றி தெரிந்துகொண்டு பேச வேண்டும், அவரை பற்றி தெரிந்தவர்கள் யாரும் அவர் மிது இவ்வாறு பழிபோட மாட்டார்கள்
இதில் விந்தை என்னவென்றால் இங்கு திருமாளவன் இராசபக்சேவுடன் விருந்துண்டார் என்று கேட்டவுடன் கொதித்த அதே மக்கள் இந்தியா இலங்கைக்கு தமிழர்களாகிய நாம் செலுத்தும் வரிபணத்தில் இலங்கைக்கு போர்கருவிகள், தளவாடங்கள் மற்றும் பொருள் உதவி கொடுத்து மேலும் அங்கு நடக்கும் கொலைகளுக்கும், கற்பழிப்புக்கும் துணை நின்றபோது மவுனமாக நின்றார்கள்,
எதிரியை விட துரோகம் எவ்வவளவு கொடியது தோழர்களே சொல்லுங்கள்,
அதுமட்டுமா தமிழ் மீனவர்களை நாயை சுடுகிறமாதிரி சுட்டுகொன்று குவிக்கிறது இலங்கை கடற்படை இதற்கு இந்தியாவின் தரப்பில் ஒரு கண்டன குரல் கூட எழுப்பியதில்லை, மேலும் இலங்கை இராணுவத்துக்கு போர் பயிற்ச்சி கொடுக்க இந்தியா துணிகிறது என்றால் சிந்திக்க வேண்டும் தோழர்களே தமிழர்களை இந்தியா எவ்வளவு கீழ்தரமாக எண்ணியிருக்க வேண்டும்.
இந்தியா தமிழ்நாட்டின் அண்டை நாடு என்றால் நான் இந்தியா உதவுதை துரோகம் என்று சொல்ல முடியாது, ஆனால் சொந்த நாடு என்று நம்மவர்களை கழுத்தறுத்த இந்தியாவை பற்றி இங்கு யாரும் வாய்திறப்பதில்லை திறந்தால் சிறை வாசல் திறக்குமே இந்திய இறையாண்மை சட்டத்தின்படி நாம் ஏன் இலங்கைக்கு உதவிய இந்திய போர்குற்றவாளிகளை தமிழ் இறையாண்மையின் கீழ் கைது செய்யகூடாது.
தமிழர்கள்தான் தன்னை இந்தியர்கள் என்று உணர்ச்சி பொங்க சொல்லுகிறார்களே தவிர
இந்தியா தமிழர்களை இந்தியர்களாய் பார்க்கவில்லை ஏன் மனிதர்களாய்கூட பார்க்கவில்லை.
***கவலைபடாதே இந்தியா நிங்கள் இலங்கையுடன்(2கோடி மக்கள்) சல்லாபிக்க நாங்க தமிழர்கள்(7கோடி மக்கள்) சாக தயாராக உள்ளோம்.***
சரி எல்லாத்தையும் ஒருகெட்ட கனவாக மறந்து
வரும் விடுதலை நாளை வெகுசிறப்பாக கொண்டாடுவோம்
சன கன மன கதி, தமிழன்செத்தா என்ன கதி!!!
சன கன மன கதி, தமிழன்செத்தா அது அவன் விதி!!!
வாழ்க பாரதம் வாழ்கவே.
இந்த விடயத்தில் ஏதோ ஒரு சூட்சுமம் இருக்கிறது.நான் விஜய் ரசிகன் அல்ல.விஜய் இன் கையெழுத்து இல்லா விட்டால் மனு செல்லாதா என்ன?ஏன் மீண்டும்,மீண்டும் அரிதாரம் பூசுவோர் பின்னால் அலைகிறார்கள்?உண்மையில்,ஈழத் தமிழர் மேல் அக்கறையுள்ள அரசியல் வாதிகள் ஏன் சென்னையை விட்டு வெளியே சென்று கிராமப்புறங்களில் சிங்கள அரசின் கபடத்தை வெளிப்படுத்த மறுக்கிறார்கள்???
இந்த விடயத்தில் திருமளவனுக்காக
விஜய் போடா வேண்டியதில்லை ...
தமிழருக்காவே போட்டிருக்க வேண்டும்..
இதிலெல்லாம் அரசியல் லாப நட்டங்களே
கணக்கில் எடுக்கப்படுக்கின்றன -
- கல்கி-
கையெழுத்து சேகரிப்பதற்கு திருமாவளவனுக்கு என்ன தகுதியிருக்கிறது.
உண்ணாவிரத புகழ் கருணாவின் ஏவல் நாய் தான் திருமா
நண்பர் சிவலிங்கம் சொன்னது போன்று, திருமாவழவன் நடத்தும் நாடகம், அப்புறம் தமிழனுக்காக போராட இந்தியாவில் ஒருவனும் கிடையாது என்பதே சரியான வாதம். ஆனால் உங்கள் பதிவில் மிக பெரிய காமெடி என்ன தெரியுமா?, \\விஜய் கொக்கோ கோலா விளம்பரத்தில் நடித்தால் அதை பார்த்து அவரது ரசிகர்கள் அதை வாங்குபிரார்கள், அவர் ஒருத்தர் கையெழுத்து போட்டால் அதை தொடர்ந்து அவரது ரசிகரும் போடுவார்கள் என்று, அத்தனை பேரும் விஜய் காகத்தான் போடுவார்களா?
தமிழர்களுக்காக போடாத அவர்களை என்ன செய்ய போறீங்க??????????
Post a Comment