AUG 6, உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த, பல வருடங்களாக பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படைக் கூட்டத்தின் தலைவன் ஜக்கு பெஹெல்வான் என்பவனை மாநில போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.
இந்த கொலைக்காரன் பணத்திற்காக இதுவரை சுமார் 165 க்கும் மேற்பட்டவர்களை கொன்றதாகவும், கொல்லப்பட்டோரில் பல தொழிலதிபர்களும், வர்த்தக காண்டிராக்டர்களும், ஓட்டல் முதலாளிகளும் அடங்குவர் என்றும், இவனை பிடித்த உயர் போலீஸ் அதிகாரி அனில் கபர்வான் தெரிவித்துள்ளார்.

முதன்முதலில் 1998 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை பணத்திற்காக கொல்ல ஆரம்பித்த இவன், இதுவரை 165 க்கும் மேற்பட்டவரைக் கொன்றிருப்பதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த கொலைகார கூலிப்படைத்தலைவனின் மனைவி காசியாபாத்தில் உள்ள ஒரு கிராமத்தின் கவுன்சிலர் தலைவராக எதிர்ப்பு ஏதுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
சிந்திக்கவும்: இந்திய பயங்கரவாத போலீஸ், 165 பேரை கொல்லும் வரையில் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது என்பதுதான் உண்மை. போலீஸ் பயங்கரவாதிகளால் உருவாக்கப் படுபவர்கள்தான் ரவுடிகள். இவர்கள்தான் திருடர்களை, கொள்ளைகாரர்களை, ரவுடிகளை, சாராய வியாபாரிகளை உருவாக்குகிறார்கள். இவர்களை வைத்து நன்றாக மாமூல் வாங்கி தின்று, குடித்து தொந்தி பெருத்து பின்னாளில் அதே ரவுடிகளை என்கவுண்டர் என்று சுட்டு தள்ளுவதும் வாடிக்கையாகி விட்டது.
No comments:
Post a Comment