சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தின் காரணமாக பல மக்கள் இன்னும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். பல்வேறு சமூக அமைப்புகள், பல்வேறு கட்சிகள், இசுலாமிய அமைப்புகள், சங்கங்கள் இரவு பகலாக களப்பணி செய்து வருகிறார்கள். பள்ளி கூடங்கள், மசூதிகள், வெள்ள பாதிப்பு இல்லாத பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகள் என்று மக்கள் தங்க வைக்கப்படுவதும், ஜாதி, மத வேறுபாடு இன்றி அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி வருகின்றனர்.
உண்மையான ஹீரோக்கள் யார்? சினிமாவில் மட்டுமே மக்களை பெரும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவது போல் காட்டி மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழும் சினிமா ஹீரோக்களை மக்கள் தூக்கி ஏறிய வேண்டும். நிஜவாழ்வில் அவர்களின் பங்கு எங்கே?
ரஜினிகாந்த் படையப்பா படத்தில் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு என்கிற பாட்டில் "என் ஒருதுளி வியார்வைக்கும் ஒரு பவுன் தங்க காசு தந்தது தமிழ் மக்கள் அல்லவா? என் உடல், பொருள், ஆவியை தமிழுக்கும் தமிழர்களுக்கும் தருவது முறையால்லவா என்று பாடுவார். அவர் ஆவியை (உயிரை ) எல்லாம் விட வேண்டாம். அட்லீஸ்ட் தன்னுடைய பொருளாதாரத்தில் இருந்து ஒரு பகுதியை செலவழிக்கலாமே?
நடிகர் சங்கம் தெளிவாக அறிவித்து விட்டது இந்த பேரிடரை அரசு பார்த்து கொள்ளும் எங்களுக்கு இதில் இந்த பங்கும் இல்லை என்று. ரஜினி, கமல், அர்ஜூன், விஜய், அஜித், சூர்யா, கார்த்திக், சிம்பு, பிரபு, விக்ரம், போன்ற நடிகர்கள் இந்த வெள்ள பேரிடரில் ஒரு பங்களிப்பையும் இதுவரை செய்யவில்லை.
இவர்களது படங்கள் வெளியாகும் பொழுது, இவர்களுக்கு ஆளுயர கட்டவுட் வைத்து பால் அபிஷேகம் செய்யும் இவர்களது ரசிகர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், இது போன்ற கேடுகெட்ட கூத்தாடிகளுக்கு சேவகம் செய்வதை விட்டு விலக வேண்டும். ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் கலைத்து விட்டு உண்மையாக மக்கள் தொண்டு செய்யும் இயக்கங்களில் தங்களை இணைத்து கொள்ள வேண்டும். அதுவே தமிழ் நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது.
குறிப்பு: மோடி மாதிரி ரொம்ப தாமதமா தான் வாழும் சென்னையில் நடக்கும் துயருக்கு தமிழக அரசுக்கு 10 லட்சம் பிட்ச்சை போட்டிருக்கார் கருணை பிரபு.

No comments:
Post a Comment