வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய குடியுரிமை சட்டப்படி நாட்டை விட்டு
வெளியேற்றப்படுவதைத் தடுக்க ஏராளமான இந்தியர்கள் உள்ளிட்டோர் நேற்று விசாவை
புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்தனர்.
பல்வேறு காரணங்களால், மாணவர் விசா, சுற்றுலா விசா போன்றவற்றை பயன்படுத்தி, அமெரிக்கா சென்றவர்கள் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். விசா, காலாவதியான பிறகும் பலர் அங்கேயே தங்கியுள்ளனர்.
இது போன்று முறைக்கேடாகத் தங்கியுள்ளவர்களை அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்ப அதிபர் ஒபாமாவின் புதிய குடியுரிமை கொள்கை வழி வகுத்துள்ளது.அமெரிக்காவில் 17.6 லட்சம் பேர் முறைக்கேடாக தங்கியுள்ளனர். இவர்களில் 30 ஆயிரம் பேர் இந்தியர்கள். இவர்கள் அனைவரும் 31 வயதுக்குட்பட்டவர்கள்.
முறைகேடாக தங்கியுள்ளவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதைத் தடுக்க, சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தச் சலுகையைக் கோருபவர்கள் இரண்டு ஆண்டு காலம் வரை தங்கியிருக்கலாம். இதற்காக இவர்கள் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி அமெரிக்காவில் கூடுதல் நாட்கள் தங்கியிருக்க அனுமதி பெறலாம்.
இதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க, நேற்று கடைசி நாள் என்பதால் வாஷிங்டனில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தனர். நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதைத் தடுக்க வழி செய்யும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளித்தனர்

2 comments:
தகவலுக்கு மிக்க நன்றி...
Varkal nattu patukappu visayatil avarkal kavanamaga irukirarkal.....
Post a Comment