Jul 5, 2011

அரசுக்கு சொந்தமான புதையலை கொள்ளையடிக்க திட்டமா?

காஞ்சிபுரம், ஜூலை 5- திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் எடுக்கப்பட்ட பொக்கிஷங்கள் அனைத்தும் திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திரர் தெரிவித்துள்ளார்.

"நீண்ட காலமாக பத்மநாப சுவாமி கோயிலின் பாதுகாவலர்களாக திருவாங்கூர் மன்னர் குடும்பம் தான் இருந்து வந்துள்ளது. அந்த கோயிலுக்காகவே அவர்களது ஆட்சி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்துள்ளது. தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து நகைகளும் ஆபரணங்களும் கோயிலுக்கு திருவாங்கூர் மன்னர்களால் அளிக்கப்பட்டது தான்.

எனவே, அவை அனைத்தும் மன்னர் குடும்பத்தினருக்கே சொந்தமானது. எனினும், அந்த பொக்கிஷங்கள் அனைத்தும் கோயிலிலேயே வைக்கப்பட வேண்டும்." என்று ஜயேந்திரர் கூறினார். பல நூற்றாண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி திறக்கப்பட்டது. இதில், இதுவரை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் காசுகள், நகைகள், வைரங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

விரைவில் மேலும் ஒரு அறை திறக்கப்பட உள்ளது. அதன் கதவு மற்றதை விட மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளதால், அதில் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் பெருமளவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளை மூலம் பத்மநாப சுவாமி கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்திக்கவும்: கொலை குற்றவாளி, பெண் பித்தர் சங்கராசாரியார் ரொம்ப காலங்களுக்கு பிறகு இப்படி திருவாய் மலர்ந்துள்ளார். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது போல் தங்கள் பார்பன உயர்ஜாதியை சேர்ந்த திருவாங்கூர் மன்னரின் குடும்ப சொத்தாக இந்த புதையலை மாற்ற திட்டம் வகுத்து செயல்படுகிறார் சங்கராசாரி.

சங்கர மடத்தை தன் கைகளில் வைத்து கொண்டு பிராமணர்கள் மட்டும் அதன் சொத்துக்களை அனுபவித்து வருகிறார்களோ அது மாதிரி கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட புதையலையும் பறிக்க நினைக்கின்றனர். அதானால்தான் இந்த சங்கராச்சாரி இப்படி திருவாய் மலர்ந்துள்ளார்.

"கண்டெடுக்கப்படும் புதையல்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம்" என்ற சட்டம் இதற்கும் பொருந்தும். ஆகவே இது அரசுக்கு சொந்தமானது தான் இதில் யாதொரு சந்தேகமும் இல்லை. இதை அமுக்க பார்க்கும் பார்ப்பன கழுகுகளிடம் இருந்து அரசு தன்வசப்படுத்தி மக்கள் பணிகளுக்கு செலவிட வேண்டும்.
 -மலர்-

7 comments:

Anonymous said...

திருவிதாங்கூரை ஆண்ட கடைசி பரம்பரை பிராமணர்களல்ல அவர்கள் நாயர் இனத்தை சார்ந்தவர்கள்.

- thameem

பிரசன்னா said...

இந்த சொத்துக்கள் கோயிலில் இருந்தால் அப்படியே இருக்கும். மாறாக அரசு எடுத்து கொண்டால் இப் பணத்தின் 75 வீதமும் அமைச்சர்கள் அரசு ஊழியர்களின் வீடுகளுக்கே செல்லும். ஊழலற்ற நல்ல ஆட்சி எதிர் காலத்தில் தோன்றும் பொது அரசு மக்கள் பணிக்காக பயன்படுத்தட்டும்.

PUTHIYATHENRAL said...

சரியா சொன்னீங்கள் பிரசன்னா! இப்பொது இருக்கும் எந்த அரசையும் நம்பமுடியாது. கோவில் ரகசிய அறைகளில் இருந்தவரை அந்த நகைகள் தப்பித்தன. இப்பொது அது வெளிப்பட்டு விட்டது எப்படியும் இதை கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருப்பார்கள் இந்த அரசியல்வாதிகள். வருகை புரிந்தமைக்கு நன்றி!

PUTHIYATHENRAL said...

இந்த அரசு கழுகள் இதை மேயாம விட்டால் சரிதான். கருத்து சொன்னதற்கு நன்றி! நன்றி மீண்டும் வாருங்கள்!

Anonymous said...

கோடான கோடி மக்கள் இங்கே வறுமையில் செத்க்க்கொண்டிருக்கும்போளுது , கடவுள்களுக்கு இதனை கோடி செல்வங்கள் எதற்கு? இந்த selvangalai அந்த கடவுள்கள் என்ன செய்யபோகிறார்கள்?

niyas said...

கோடான கோடி மக்கள் இங்கே வறுமையில் செத்துக்கொண்டிருக்கும்போளுது , கடவுள்களுக்கு இதனை கோடி செல்வங்கள் எதற்கு? இந்த selvangalai அந்த கடவுள்கள் என்ன செய்யபோகிறார்கள்?

வறுமையில் தவிக்கும் மக்களுக்கு இந்த பணம் உதவட்டுமெ....

PUTHIYATHENRAL said...

கருத்து சொன்ன நியாஸ் வர்களுக்கு நன்றி! நன்றி மீண்டும் வாருங்கள்! நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.