நவம்பர் 07/14: செக்ஸ் சாமியார் ஆசாராம் பாபுவின் ஆதரவாளர்கள் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுமி ஒருவரை வன்புணர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கிறார் சாமியார் ஆசாராம் பாபு. இவரது மகன் நாராயண் சாய் என்பவர் நடத்தி வரும் ஓஜாஸ்வி கட்சி வருகிற டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் சுவாமி ஓம்ஜி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதனன்று (5ஆம் தேதி) செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஓஜாஸ்வி கட்சி சார்பில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம். எங்களுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் கணிசமான இடங்களில் வெற்றி பெறுவோம்” என்றார். இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாயும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சிந்திக்கவும்: ஏற்கனவே இந்திய அரசியல் முடை நாற்றம் வீசுகிறது இதில் வேறு செக்ஸ் சாமியார்கள் வேறு நுழைந்து விட்டால் அவ்வளவுதான். நாடாளுமன்றம், பாராளுமன்றம் முழுவதும் அஜால் குஜால்தான்.
No comments:
Post a Comment