Nov 2, 2014

குற்றவாளி கொலைகாரி தீவிரவாதி!?

இந்த படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா..? இவர் தான் குஜராத்தின் வீதிகளில் நூற்றுக்கணக்கான பெண்கள் குழந்தைகள் இனப்படுகொலை மூலம் கொல்லப்படக்காரனமான முக்கிய குற்றவாளி? அதாவது கொலைகாரி அல்லது தீவிரவாதி.

உலகின் பல நாடுகளில் அரசின் மேற்பார்வையில் சிறுபான்மை இனத்திற்கு எதிராக அரங்கேற்றப்பட்ட பல இனபப்டுகொலைகளை கேள்விப்பட்டிருப்போம். நம் கண் முன்னே நம் நாட்டின் குஜாராத்தில் அரசே தனது சிறுபான்மை இனத்திற்கு எதிராக அரங்கேற்றிய கொடூரமான இனப்படுகொலைக்கு காரணமானவர்.. 

இவரது பெயர் மாயா கோட்டானி மருத்துவர். குஜராத்தின் மோடி அரசின் அமைச்சர் ..அதுவும் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலப்பிரிவின் அமைச்சர் .. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அதுவும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து கொண்டு அவர்களயே கொடூரமாக கொலை செய்ய உதவிய ஒரு கொலைகாரி. 2002 கோத்திரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு முன் இவரது தொகுதிகளில் இருந்த கிராமத்தில் நடந்த இனக் கலவரத்தில் அரசின் அறிக்கையின் படி 97 பேர் கொல்லப்படுகின்றனர், அவர்களில் 35 பேர் குழந்தைகள். 



அந்த கலவரத்தை தூண்டிவிட்டு நேரடியாக இவர் நடத்தினார் என்பது குற்றசாட்டு. ஆனால் மோடி அரசு நிவரை கைதும் செய்யவில்லை.. விசாரணையும் செய்யவில்லை ,பதவியில் இருந்தும் அகற்றவில்லை  மாறாக 2009 ஆம் ஆண்டு வரை பதவியில் தொடர்கிறார் .சிறப்பு விசாரணை கமிசனின் விசாரணையின் முடிவில் இவரின் மீதுள்ள குற்றங்கள் நீதி மன்றத்தில் நிரூபிக்கப்பட்டு 20 ஆண்டுகால தண்டனையும் கிடைக்கப்பெற்றது..இன்று அயோக்கிய மோடி ஆட்சி மத்தியில் இருப்பதால் போலியான காரங்களின் மூலம் இந்த கொலைகாரி ஜாமீனில் வளம் வருகிறார்..

இதில் வேடிக்கை என்னவெனில் இவரை பற்றிய எந்த ஒரு உண்மையையும் நமது ஊடகங்கள் மக்கள் மன்றத்தில் வெளியிடுவதே இல்லை.அதுவும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டும் கூட இந்த சித்திக்கு எந்த ஒரு ஊடகமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை .

முஸ்லிம்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தாலே தீவிரவாதிகள் என்று வரிக்கு வரி எழுதும் கேடுகெட்ட ஊடகங்கள் .நூற்றுக்கனகான மக்களை கொன்ற இவரை நீதி மன்றம் தண்டனை வழங்கியும் கூட இவரை தீவிரவாதி என்று அழைக்கவும் இல்லை இனப்படுகொளைவாதி என்று அழைக்கவும் இல்லை.. மாறாக முன்னால் அமைச்சர் என்று தான் இந்த கொலைகாரியை தீவிரவாதியை அழைத்து வருகின்றனர்.. ஒருவேளை கொல்லப்பட்டது முஸ்லிம்கள் என்பதால் இப்படியான கேடுகெட்ட செய்திகள் போலும்..

2 comments:

kamalrathore said...

எய்தவனிருக்க அம்பை நொந்து என்ன பயன்

kamalrathore said...

எய்தவனிருக்க அம்பை நொந்து என்ன பயன்