Mar 12, 2010
ரஷ்ய உதவியுடன் இந்தியாவில் 12 அணு உலைகள்.
இந்தியாவில் குறைந்தது 12 அணு உலைகளை ரஷ்யா நிர்மாணிக்கவுள்ளதாக அந்நாட்டுக்குச் சொந்தமான அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் தெரிவித்துள்ளது. ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலுமான பங்களிப்பின் முக்கியமான அம்சங்களில் இந்த அணுசக்தி ஒத்துழைப்பும் ஒன்று என அவர் விபரித்துள்ளார்.ரஷ்யா ஏற்கனவே இரண்டு அணு உலைகளை இந்தியாவில் அமைத்து வருகிறது என்பது குறிப்பி்டத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment