Nov 6, 2011

முற்றும் துறந்த முனிவர்கள்!

நியூ டெல்லி: பாபா ராம்தேவ் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் ஆகியோர்கள் துறவி அல்ல, நல்ல விற்பனையாளர்கள் இவர்கள் இருவரும்  சாமியார்கள் என்று  சொல்லி மக்களை ஏமாற்றி  காசு பார்கின்றனர்.

இவர்கள் காவி உடை அணிந்த நல்ல வியாபாரிகள். பாடஞ்சலி யோக் பல்கலைகழகம் மற்றும் திவ்ய யோக் பார்மசியை நடத்தி சுவாமி ராம்தேவ் கோடி,கோடியாக சம்பாதிக்கிறார். ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் ஆர்ட் ஆஃப் லிவிங் பௌண்டேசன் என்பதை நடத்தி அதன் மூலம் சிறந்த வியாபாரம் செய்து கோடிஸ்வரராக விளங்குகிறார்.

மேலும் வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடியில் சிக்கி இருக்கும் பாபா ராம்தேவ் உத்திரகாண்டில் தனது ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இவர் சமீபகாலமாக ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தோடு சேர்ந்து ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் நடத்தி வந்தார் என்பது குறிப்பிட தக்கது.

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்தி தன்னை தூய்மையானவராக காட்டி கொள்ளும் பாபா ராம்தேவ் தனது ஆசிரமம் நடக்கும் உத்திரகாண்டில் ஏன் அதை நடத்தவில்லை. அங்கு இவர் அப்படி பட்ட ஒரு போராட்டத்தை நடத்தினால் இவரது சுயரூபம் வெளியே வந்து விடும் என்ற பயமே அதற்க்கு காரணம்.

அதுபோல் கர்நாடகாவில் ஆசிரமத்தை நடத்தி வரும் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் ஏன் அங்கு ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை, ஏன் என்றால் கர்நாடகாவை ஆள்வது தங்களது ஹிந்துத்துவாவாதிகள் என்பதே. ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது முதலில் தங்கள் சொந்த மாநிலத்தில் இருந்து தொடங்கட்டும். இதுபோல் சாமியார்களை நம்பி மக்கள் மோசம் போவதை விட்டு விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.

-ராஜன்-

12 comments:

இறைவனின் அடிமை said...

இவர்கள் முனிவர்கள் அல்ல இந்திய மக்களை முட்டாள்களாக ஆக்கும் [RSS அறிவாளிகள் காவிகள்] சிந்திப்பார்களா இந்தியமக்கள் குறிப்பாக தமிழக மக்கள் [யாரும் யாருக்கும் அருள் கொடுக்க முடியாது அருள் இறைவன்மட்டும் தான் நாடியவருக்கு கொடுப்பது] இந்த முனி....நம்மைப்போல் ஒரு மனிதர்கள்தான் இவர்களை ஒழித்துக்கட்டினால் நாடு நலமடையும்

Anonymous said...

சாமியார்களின் வலையில் விழும் பெண்கள்! .

சாமியார்கள் திறமைசாலிகளா?

வெறுங்கையில் விபூதி வரவழைப்பது, லட்டு-எலுமிச்சை வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, நாவில்லாத மணியிலிருந்து ஓசை எழுப்புவது என சில-பல காரணங்களால் உளுத்துப்போன புட்டபர்த்தி சாய்பாபா மற்றும் பிரேமானந்தாக்களின் கதை இதுதான். இப்படி பிரபலமான ஒருவரின் கதையைப் பார்ப்போம்.

குழந்தை பிறக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் கணவனின் குறைபாடா அல்லது மனைவியின் குறைபாடா என இருதரப்பையும் கண்டறிந்து அதற்குரிய மருத்துவத்தை பலர் நாடுவதில்லை. அவ்வாறு செய்தால் தனது ஆண்மைத்தன்மை அம்பலமாகிவிடும் என்கிற அச்சத்தால் பெரும்பாலும் ஆண்கள் அதற்கு ஒப்புக் கொள்வதில்லை. இது அவரது ஆண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கிவிடுமாம். அதனால்தான் மனைவியை பலிகடாவாக்குகிறார்கள். குழந்தை பிறக்கவில்லை என்றால் பெண்களுக்கு மட்டும்தான தோஷம் இருக்குமாம். ஆனால் அத்தகைய தோஷம் ஆண்களுக்கு ஏன் இருக்கக்கூடாது என கேள்வி எழுப்ப யாரும் தயாரில்லை.

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் முன்பு ஒரு சாமியார் இருந்தார். பிள்ளை வரம் கொடுப்பதில் அன்றைக்கு அவரே இந்தியாவின் முன்னோடி. குழந்தையின்மைக்கான காரணத்தை அறிய மருத்துவரிடம் செல்வதைவிட சாமியார்களிடம் செல்வோர்களே அதிகம். பிள்ளைப் பேறு இல்லாத பெண்ணை இந்தச் சாமியாரிடம் அழைத்துச் செல்வார்கள். அப்பெண்ணுக்கு தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிந்த பிறகே மேற்கொண்டு எதுவும் செய்ய முடியும் என்று கூறிவிடுவார். அதற்காக கழுத்தமைப்புடைய ஒரு குண்டு செம்பு, அது நிறையும் அளவுக்கு அரிசி, வெங்காயம் நறுக்குகிற அல்லது பழம் வெட்டுகிற ஒரு கூர்மையான கத்தி இவற்றுடன் சாமியாரைப் பார்க்க வேண்டும்.

பெண்ணை சாமியார் முன் அழைத்துச் செல்ல வேண்டும். அரிசியை செம்பில் கொட்ட வேண்டும். அரிசி நிரப்பப்பட்டுள்ள அந்த செம்பின் நடுவில் கூர்மையான கத்தியைச் சொருகி கத்தியின் கைப்பிடியைப் பிடித்துத் தூக்க வேண்டும். தூக்கும் போது கத்தியோடு அரிசியுடன் செம்பும் சேர்ந்து வர வேண்டும். அப்படி வந்து விட்டால் தோஷம் இல்லை என்று பொருள். யார் குத்தித் தூக்கினாலும் முதலில் கத்தி மட்டும்தான் கையோடு வரும். சாமியார் மீண்டும் முயற்சி செய்யச் சொல்வார். முடிவு அதேதான்.

இப்படியாக கத்தியால் குத்தி குத்தி செம்பில் உள்ள அரிசி மெல்ல மெல்ல இருகி கத்தியை இருகிப்பிடிக்கும் அளவுக்குச் செல்லும் போது குத்துவதை நிறுத்தச் சொல்லிவிடுவார். பெண்ணுக்கு தோஷம் இருப்பது உறுதி செய்யப் படும். தோஷத்தை யார் போக்க முடியும்? அதற்கான ஆற்றல் பெற்றவர் சாமியார்தானே! அதை நம்ப வைப்பதற்காக ஏற்கனவே குத்தி குத்தி இருகிப் போன செம்பில் உள்ள அரிசியில் கத்தியைச் சொருகித் தூக்குவார். என்ன அதிசயம்? இம்முறை கத்தியோடு செம்பும் சேர்ந்தே வரும். இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமா சாமியார் சக்தி படைத்தவர் என்பதற்கு? இப்பொழுது சாமியார் எதைச் சொன்னாலும் செய்யத் தாயாராகிவிடுகின்றனர். "இரவு நடைபெறும் சிறப்பு பூஜையில் பெண்ணுக்கு தோஷம் நீக்க வேண்டும். எனவே பெண்ணை ஆசிரமத்தில் விட்டுவிட வேண்டும். உடன் வந்தவர்கள் வெளியில் தங்க வேண்டும்" என்று கூறிவிடுவார்.

இரவு பூஜை நடைபெறும். மறுநாள் பெண்ணை அழைத்துக் கொண்டு ஊர் வந்து சேர்வார்கள். பத்து மாதம் கழித்து கண்டிப்பாய் குழந்தை பிறக்கும். அங்கு சென்று வந்தவர்களில் ஆகப் பெரும்பாண்மை பெண்களுக்கு குழந்தை பிறக்கிறதே, எப்படி? என ஒரு பெண் மருத்துவருக்கு ஐயம் எழ, அவருக்கும் 'குழந்தை வரம்' கேட்டு அங்கு செல்கிறார். வழக்கமாக நடைபெறும் அனைத்து வழிமுறைகளும் நடைபெறுகின்றன. இரவு நெருங்குகிறது. பூஜை நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். எங்கும் சாம்பிராணி உள்ளிட்ட வாசனை மூக்கைத் துளைக்கிறது. அங்கு செல்வோர் தன் நிலையை இழக்கும் ஒரு சூழல் நிலவுகிறது. பிறகு அரை இருட்டாய் இருக்கும் ஒரு அறைக்குள் தள்ளி விடுகின்றனர். திகைத்து நின்றவரின் தோளை வலுவான கரம் ஒன்று பற்றுகிறது. சுதாரித்துக் கொண்ட அவர், இடுப்பில் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் கரங்களுக்குச் சொந்தக்காரனான ஒரு முரடனின் மண்டையைப் பிளக்கிறார். மருத்துவர் அங்கிருந்து தப்பி வந்து அங்கு நடக்கும் அப்பட்டமான வன்புணர்ச்சியை வெளி உலகுக்கு அம்பலப்படுத்துகிறார்.

இப்படி சாமியார்களின் அசாத்தியத் திறமைகளைக் கண்டு மதிகெட்டு மானம் இழப்பதை யார்தான் வெளியில் சொல்வார்கள். வாழ்நாள் முழுக்க மலடிப் பட்டத்தைச் சுமக்கும் இழிவைவிட ஒரு நாள் நடக்கும் இவ்விழிவை மறைப்பதில் தவறேதும் இல்லை என்கிற முடிவுக்கு வருகின்றனர். இதுவே சாமியார்களின் பலமாகவும் மாறிவிடுகிறது.

பொதுவாக மக்கள் தங்களின் அறிவு மட்டத்தை உயர்த்திக் கொள்வதன் மூலம் மட்டுமே இத்தகைய சாமியார்களை ஒழித்துக் கட்ட முடியும்.


THANKS TO :- http://hooraan.blogspot.com/

Anonymous said...

அம்பலமானாலும் ஆன்மீக அடியாட்கள் வீழ்வதில்லை!


அதனால் சாமியார்கள் எவ்வளவுதான் அம்பலப்பட்டுப் போனாலும் ஆளும் வர்க்கம் அவர்களைக் கைவிடுவதில்லை. ஜெயேந்திரனின் வண்டவாளங்கள் சந்தி சிரித்த பின்னும் ஊடகங்கள் அவரை சங்கராச்சாரியார் என்று மரியாதையுடன்தான் அழைக்கின்றன.

சீடர்களை பாலியல் உறவு கொள்ளச் சொல்லி ரசித்துப் பார்ப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்ட ரஜனீஷ் அமெரிக்கா சென்று ரோல்ஸ்ராய்ஸ் காரில் சென்றால் சமாதி நிலை அடைவதாக 96 கார்களை வாங்கிக் குவித்தார். வரி ஏய்ப்பு, இதர மோசடிகளுக்காக அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு மீண்டும் இந்தியா வந்து செத்துப்போன ரஜனீஷின் அருளுரைகள் இன்றும் தமிழில் வெற்றிகரமாக விற்கப்படுகின்றன.

சாயிபாபா குழந்தைகளையும், இளைஞர்களையும் பாலியல் உறவுக்குப் பயன்படுத்தும் வக்கிரம் கொண்டவர் என்பதை இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப் பத்திரிக்கையும், ஒரு ஆவணப்படத்தின் மூலம் டென்மார்க் அரசுத் தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தியிருக்கின்றன. இதன் பொருட்டே ஐ.நா.சபை சாயிபாபா ஆசிரமத்துடன் சேர்ந்து செய்ய விருந்த நலப்பணித் திட்டங்களை ரத்து செய்தது. புட்டபர்த்தியில் பல பாலியல் வக்கிரக் கொலைகளும் நடந்திருக்கின்றன. ஆனாலும் சாயிபாபா இந்திய ஊடகங்களால் இன்றும் பூஜிக்கப்படுகிறார். முன்னாள் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் பாபாவின் பிறந்த நாளில் கலந்து கொள்கிறார். ஐ.நா.செயலர் பதவிக்குப் போட்டியிட்ட சசி தரூர் பாபாவின் மாஜிக் மோசடிகளை அற்புதங்கள் என்று புகழ்கிறார். கருணாநிதி தன் மனைவியை பாபாவின் காலில் விழச்செய்கிறார்.

மருத்துவக் கல்லூரி சீட்டுக்கு தலா 40 இலட்சம் வாங்கும் அமிர்தானந்த மாயியின் காலில் அத்வானியும், மத்திய அமைச்சர் அந்தோணியும் விழுகிறார்கள். மாயியின் வருமான வரி ஏய்ப்புக்கு அரசே வழி செய்கிறது. வேறெங்கும் வரிசையில் நிற்க விரும்பாத பணக்காரர்கள் மாயியின் “கட்டிப்பிடி’ ஆன்மிகத்திற்காக நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.

விதர்பா பகுதியில் கொத்துக்கொத்தாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளுவதற்குக் காரணம் அவர்கள் படிப்பறிவற்றவர்கள் என்று திமிராகப் பேசும் இரவி சங்கரை தகவல் தொழில் நுட்ப யுகத்தின் குரு என்று பத்திரிக்கைகள் செல்லமாக அழைக்கின்றன.

அயோத்திப் பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைந்து நின்ற ராம்விலாஸ் வேதாந்தி, பைலட்பாபா, கீர்த்தி மஹாராஜ் முதலான சாமியார்கள் கமிஷன் வாங்கிக் கொண்டு, பலகோடி ரூபாய் கருப்புப் பணத்தைக் வெள்ளைப் பணமாக மாற்றித் தரும் மோசடியை சி.என்.என்-ஐ.பி.என். தொலைக்காட்சி கையும் களவுமாக அம்பலப்படுத்தியது. ஆயினும் சங்கபரிவாரங்கள் இச்சாமியார்களைக் கைவிடவில்லை.

அம்பலமாகும் சாமியார்கள் அவ்வளவு சீக்கிரம் நீர்த்துப் போவதில்லை. ஒருவேளை இவர்கள் செல்வாக்கிழந்தாலும் புதிய சாமியார்கள் களமிறக்கப்படுவார்கள். எல்லா இன்பங்களையும் காசு கொடுத்துத் துய்க்கும் நடுத்தர வர்க்கம் ஆன்மீகத்தையும் அப்படி நுகர்வதற்குப் பழக்கி விடப்பட்டிருப்பதால் அருளாசி வழங்க நமட்டுச் சிரிப்புடன் எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் நவீன சாமியார்கள்.

Anonymous said...

தொழிலதிபர்களே துறவிகளாக, அடிமைத்தனமே ஆன்மீகமாக!

இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்ற வெள்ளையர் இலண்டனில் துறைமுக நடவடிக்கைகளை ஒழுங்கு செய்து தரும் ஒரு தரகு நிறுவனத்தை நடத்தி வந்தார். ஓரிரு வருடங்களாக தொழிலில் நட்டத்தைச் சந்தித்து வந்த வில்லியம்ஸ் அதிலிருந்து மீள தனது நண்பரொருவரின் ஆலோசனைப்படி கேரளாவிலிருக்கும் ஒரு சாமியாரைச் சந்திக்க முடிவு செய்கிறார்.

ஆலோசனை தந்தவர் இலண்டனில் வாழும் ஒரு என்.ஆர்.ஐ மலையாளி. கேரளாவின் கோட்டக்கல்லில் சிவா சிரிங்க ஆஸ்ரமத்தை நடத்தி வந்த ஞானசைதன்யா என்ற சாமியாரை வில்லியம்ஸ் குடும்பத்துடன் சந்திக்கிறார்.

வில்லியம்ஸின் தொழில் சிக்கலுக்கு ஞானசைதன்யாவின் ஆன்மீகத் தீர்வு என்ன?

வில்லியம்ஸின் மகள் அமரந்தா முற்பிறப்பில் சைதன்யாவின் மனைவியாக இருந்தவளாம். இப்பிறப்பிலும் அந்த உறவு தொடர்ந்தால்தான் வில்லியம்ஸின் பிரச்சினை தீருமாம். இதை அந்த வெள்ளையர் ஏற்றுக்கொண்டு தனது மகளை சாமியாருக்கு மணமுடிக்கிறார். சீர் வரிசையாக பதினைந்து இலட்சம் பணமும், டாடா சஃபாரி காரும் கொடுக்கப்படுகிறது. நாலைந்து மாதம் குடும்பம் நடத்திய பிறகு சாமியாரின் சித்திரவதை தாங்காமல் அந்த வெள்ளைக்காரப் பெண்மணி ஆசிரமத்திலிருந்து தப்பித்து போலீசாரிடம் புகார் கொடுக்க தற்போது சாமியார் சிறையில்!

சாமியாரின் பூர்வாசிரமப் பெருமைகள் என்ன? சுதாகரன் என்ற பெயர் கொண்ட அந்தச் சாமியார் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று மூவரைக் கொன்ற ஒரு கொலை வழக்கில் பதினான்காண்டுகள் சிறையிலிருந்து பின்னர் ஆசிரமம் ஆரம்பித்து ஞானசைதன்யாவாக அவதாரம் எடுத்தவர்.

வில்லியம்ஸின் கதையை நம்ப முடிகிறதா? சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நாகரீக உலகில் வாழும் ஒரு பணக்கார வெள்ளையரது குடும்பம் ஒரு பக்கா கிரிமினலிடம் ஏமாந்ததை என்னவென்று சொல்ல? இதை வெறும் முட்டாள்தனம் என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது.

மாறிவரும் வாழ்க்கைப் பிரச்சினைகளுடன், வாழ்க்கை குறித்து மக்கள் கொண்டிருக்கும் மாறாத மயக்கத்தை இணைத்து, “ஆன்மீகத்தை அண்டினால் உடனடிப் பயன் கிடைக்கும்’ என்று நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நம்பிக்கையூட்டும்படி மக்களிடம் உபதேசிப்பதுதான் காலத்திற்கேற்பப் புதுப்பிக்கப்படும் மதத்தின் இரகசியம். மதத்தைச் சுரண்டல் லாட்டரி போல மாற்றியிருப்பதுதான் இன்றைய நவீன சாமியார்களின் மிக முக்கியமான சாதனை.

Anonymous said...

கோடிகளில் புரளும் ஆன்மீக வர்த்தகம்

பங்காரு அடிகளார்
இந்தியாவில் உலகமயமாக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இருபது ஆண்டுகளில் தரகு முதலாளிகள் மட்டும் செழிக்கவில்லை, பல பணக்காரச் சாமியார்களும் தலையெடுத்திருக்கிறார்கள். இவர்களின் வர்த்தக மதிப்பு நீங்கள் எதிர்பாராத அளவிலானது.

பெங்களூருக்கு அருகில் ஒரு மலையை அரசிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்து “வாழும் கலை’யைக் கட்டணம் வாங்கிக்கொண்டு கற்றுக்கொடுக்கும் ஸ்ரீஸ்ரீ இரவிசங்கரின் வருடாந்திர வர்த்தக மதிப்பு 400 கோடி. டெல்லியில் ஆசிரமம் வைத்து நடத்தும் ஆஸ்ரம் பாபுவின் ஆண்டு வர்த்தகம் 350 கோடி. நாடு முழுவதும் தியான நிலையங்களை நடத்திவரும் சுதன்ஷன் மகராஜூக்கு 300 கோடி.

பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் முதலானவற்றை வர்த்தக நோக்கில் நடத்திவரும் மாதா அமிர்தானந்த மாயியின் ஓராண்டு வரவு செலவு 400 கோடி. வட இந்தியாவில் யோக சிகிச்சை மற்றும் மருந்துகளை விற்பனை செய்யும் பாபா ராம்தேவின் வணிகம் 400 கோடி. பணக்காரர்களுக்காக மட்டும் சில ஆயிரங்களைக் கட்டணமாக வாங்கிக் கொண்டு அருளுரை கூட்டங்கள் நடத்தும் முராரி பாபுவுக்கு 150 கோடி. இவையெல்லாம் ஓராண்டுக்குரிய வரவு செலவு மட்டும்தான். இவர்களின் சொத்து மதிப்பு இதனினும் பல மடங்கு அதிகம். எடுத்துக்காட்டாக அமிர்தானந்த மாயியின் சொத்து மதிப்பு மட்டும் 1200 கோடியைத் தாண்டுகிறது.

பங்காரு சாமியார் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், பல பினாமி தொழில்கள் போக, மேல்மருவத்தூர் எனும் நகரையே தனக்காக உருவாக்கிக் கொண்டவர். ஜெயந்திரனின் சங்கர மடம் மற்றும் சாயிபாபா ஆசிரமங்களின் மதிப்போ சில ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள். மகரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியான மையங்கள், ரஜினீஷின் ஆசிரமம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிளைகள், வேதாத்திரி மகரிஷியின் குண்டலினி மையங்கள், ஜக்கி வாசுதேவ், பிரார்த்தனையிலேயே “குணமாக்கி’ நற்செய்திக் கூட்டங்கள் நடத்தும் டி.ஜி.எஸ் தினகரன் முதலானோரும் மேற்கண்ட கோடீசுவர சாமியார்களின் பட்டியலில் உள்ளவர்கள்தான்.

அமெரிக்காவில் வெள்ளையர்க ளுக்கு ஆழ்நிலை தியானமும், யோகாசனமும் கற்றுத்தரும் தீபக் தாக்கூர், இந்தியாவின் ஆன்மீகப் “பெருமையை’ மேற்குலகில் பல மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்து ஒரே நேரத்தில் ஆன்மீகவாதியாகவும், இளம் தலைமுறையின் தொழில் முனைவராகவும் விளங்குகிறார்.

ஹரித்வார் நகரில் பாபா ராம்தேவின் யோக மையத்தில் உறுப்பினராக்குவதற்கு கட்டணங்களை எழுதி மிகப்பெரிய விளம்பரப் பலகையை வைத்திருக்கிறார்கள். சாதாரண உறுப்பினர் கட்டணம் ரூபாய் 11,000, மதிப்பிற்குரிய உறுப்பினர் கட்டணம் ரூ. 21,000, சிறப்பு உறுப்பினர் கட்டணம் ரூ. 51,000, வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் ரூ. 1,00,000, முன்பதிவு உறுப்பினர் கட்டணம் 2.51 இலட்சம், நிறுவன உறுப்பினர் கட்டணம் 5 இலட்சம் என்று வெளிப்படையாக ஒரு நகைக்கடை விளம்பரம் போல் கூவி அழைக்கிறார்கள்.

“”எல்லாவற்றையும் இலவசமாக செய்வோமென்று நாங்கள் வாக்குறுதி ஏதும் தரவில்லை. அது சாத்தியமில்லை. வணிகரீதியில்தான் நாங்கள் இயங்க முடியும்” என்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் ஒத்துக்கொள்கிறார் பாபா ராம்தேவ். “”நாங்கள் ஒரு பன்னாட்டு நிறுவனம் போலத் தான் இயங்கமுடியும், எங்களை நாடி வரும் பக்தர்களுக்குரிய தரமான வசதிகளை நாங்கள் செய்ய வேண்டியிருக்கிறது” என்று வர்த்தகரீதியாகச் செயல்படுவதை நியாயப்படுத்துகிறார் ரவி சங்கர்.

tamilan said...

CLICK AND READ THE LINK


>>>> காம சூத்திரம். தேவதாசி. நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். புனித கங்கை . <<<<

Anonymous said...

கடவுள் என்ற கற்பனைக் கற்சிலைகளில்தான் நாளும் பாலையும், சந்தனத்தையும், பழங்களையும், தேனையும் குளியல் நீராகப் பாவித்துக் குடம் குடமாய்க் கொட்டிக் கொண்டாடி மகிழ்கின்றனர் பக்தகோடிகள்.

துண்டுடுத்தி, துணியுடுத்திப் பசியாற அறுசுவை உணவையும், படைத்து வைத்துத் தின்பவர் என்னவோ அர்ச்சகர்தான். இதை யார் கேட்பார்?

பசிக்குமா கல்லுக்கும் செம்புக்கும்
பாலொடு பழமா? - கொடுக்காவிடில் அழுமா? - அவற்றைப்
புசிக்குமா? என்று கேட்டார் புரட்சிக் கவிஞர், யார் படித்தார் இதனை ஆழ்ந்து?

கற்சிலையில் கண்ணீர் வடிகிறது என்றனர்.

கற்சிலையில் வியர்வை துளிர்க்கிறது என்றனர்.

கற்சிலையின் வாயில் நெய் ஒழுகுகிறது என்றனர்.

கற்சிலை பசும்பால் குடிக்கிறது என்றனர்.

கற்சிலையில் மாதவிடாய் கொட்டுகிறது என்றனர்.

இன்றோ, கற்சிலை கர்ப்பமாகிக் குட்டி போடப் போடுகிறது என்கின்றனர். நம்புகிறார் மாதரெல்லாம் பக்திப் போதையில் மங்கையரெல்லாம் மடந்தையராகவே இருந்து தொலைவதா?

பல்லாண்டுகளாக முடக்கிக் கொண்டு கிடந்த சாமி வீறு கொண்டு எழுந்து விட்டார் போலும். அம்பாளைக் கர்ப்பமாக்கியவர் யார்? கொண்டவரா? தாலி கட்டியவரா? யாரோ ஒருவர். நெல்லையப்பரே எனக் கொள்கின்றனர்,

பக்த கோடிகள். கைலாயமலையான், லிங்கேசுவரன் எழிலரசி, மலைமகளாம் காந்திமதியம் மாளைக் கூடி விட்டார். தெரிந்தது எப்படி?

ஆற்றில் பொறந்த ஆறுமுகன் - அன்னை

அழுக்கில் பொறந்த ஆனைமுகன் - அப்பன்

கையில் பொறந்த அய்யப்பன்
என்றில்லாமல் இன்றுதான் முறையான இடத்தில் கருவாகி, உருவாகிப் பிள்ளை பிறக்கப் போகிறது அம்பாளுக்கு. புதுக்குட்டி ஆணா? பெண்ணா?


உளியிட்ட கற்சிலையினுண்டோ வுணர்ச்சி

உலகத்தின் மூடர்களுக்குண்டோ வுணர்ச்சி

புளியிட்ட செப்பிற் குற்றம்போமோ விஞ்ஞானம் போகாது மூடர்க் கென்றாடாய் பாம்பே
என்றார் பாம்பாட்டிச் சித்தர்.

கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு எங்கே போனது அறிவு என்பார். கேட்பவன் கேனையனாக இருந்தால் இன்னும் திரிப்பான் கயிறைக் கேட்பவன் தொடைவரைக்கும்.

கோதையரே! நீங்கள் பேதையராய் வாழ வேண்டாம். சிந்தியுங்கள். வரதட்சணைக் கொடுமையால்,
வனப்பென்னும் தந்திரத்தால்,
நாள்கோளென்னும் சூழ்ச்சியால்,
நாளும் அல்லலுக்குட்பட்டு, இல்லற மெனும் நல்லற வாழ்வினைப் பெற முடியாமல் அவதியுறும் பெண்கள் எத்தனை பேர்?

கல்வி, செல்வம், வீரமெனும் மூன்றிற்கும் பெண்களே கடவுளச்சிகளாக இருந்தும் பெண் ணினம் பெற்ற பலன் யாது?

இதற்காக உங்களின் நேரத்தை, உழைப்பை, வாழ்வை அழித்துக் கொள்வதா? இதுவென்ன?

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்றார் பாரதியார்

பெண்களே! நாட்டின் கண்களே! உங்களை இழிவுபடுத்துவது ஆரியப் பார்ப்பனர் கண்டுபிடிப்புகளான சாதி, மதம், கடவுள், சாத்திரம், சடங்கு அனைத்தும் தான். அனைத்தையும் அழித்திட வாரீர்!

THANKS TO: http://viduthalai.in/new/e-paper/16225-2011-08-20-07-02-57.html

Anonymous said...

சாமியார்கள் எப்படி மக்களை ஆன்மீகத்தை சொல்லி கொள்ளை அடிகிறார்கள் என்பதனை விளக்கும் நல்ல பதிவு. அதற்க்கு இடப்பட்டுள்ள படம் ரொம்ப சூப்பர். நன்றி.

Anonymous said...

இவைகள் துறவறம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுபவர்கள். ஒரு காலத்தில் உண்மையாக துறவிகள் இருந்தார்கள் அவர்கள் இவர்களை போல் பிழைப்பு நடத்தவில்லை. அவர்கள் திருமணம் செய்துகொண்டு மூலிகை வைத்தியம் செய்தார்கள். சிறந்த சித்த வைத்தியத்தை உலகுக்கு கொடுத்தார்கள். இவர்களோ போலிகள். யோகா, சித்தா என்று மக்களை ஏமாற்றுபவர்கள். சுவராஜ்.

தன்மான சிங்கம் said...

அதிகம் படித்தவர்கள், ஒரு நாட்டை ஆளும் முதல்வர் , பிரதமர் ,ஜனாதிபதி, நிதிபதி,விஞ்சானி , IAS , IBS,வக்கீல் , டாக்டர், இஞ்சினியர்....... இப்படி அதிகம் படித்த முனிவர்கள்[ஒவ்வொரு மனிதனுக்கும் சிந்திக்கும் அறிவை கடவுள் தந்திருக்கும் போது] இந்த காவிமட முனிவர்களிடம் மண்டி இடும் போது சாதாரண மக்களை நாம் என்ன சொல்வது . குறிப்பாக அதிகம் படித்த மடையார்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கணும் அப்புறம் விதிக்கு விதி நின்று சாதாரண மக்களுக்கு புரிய வைக்கணும் அப்பதான் தமிழினமாவது தலை நிமிரும்

Anonymous said...

ithayee ungka osama bin laden paththi sollalame

Anonymous said...

என்னையா அநோமதயம் ஒரே ஒசாமா என்று புலம்புற உலகம் முழுக்க புலம்பி தீர்த்து போட்டும் தள்ளியாச்சி. ஒசாமா என்ன இந்தியாவிலா வாழ்ந்தார். இந்திய சாமியார்களை பற்றி பேசினால் நீங்கள் என்னடா என்றால் ஒசாமாவாம் அவரை பற்றி பேச போன்ற உலகளாவிய bbc, cnn, பத்திரிக்கைகளும், பார்ப்பன பன்னாட பத்திரிக்கைகளான தினமணி, தினமலர் போன்றவையும் இருகின்றன ஆனால் இந்த சாமியார்களை பற்றி எந்த பத்திரிக்கையாவது வாய் திறக்குமா? இதை போன்ற இணையங்கள் வாய்திரந்தாலும் பொறுக்காமல் வந்து வாயை ஆடைக்க பார்கிறிரே நியாயமா? by: musthafa