Nov 7, 2011

பரபரப்பான பதவி ஏற்ப்பு பரிதவிப்பில் மத்திய அரசு.


NOV 09: இராணுவ அமைப்பை நடத்தி வந்த விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரனின் பெயரில் பதவி ஏற்று ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். யார் இவர்.

இவர்தான் சோலை கேசவன் இவருக்கு வயது 55.  பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தின் அருகில் பத்திரம் எழுதி வருகிறார்.

இவர் அ.தி.மு.கவில் முக்கிய பதவி வகித்து வந்தார். இந்தமுறை நடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதால், சுயேச்சையாக போட்டியிட்டு அ.தி.மு.க வேட்பாளரை காட்டிலும், 120 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 25ம் தேதி நகர மன்ற உறுப்பினராக பதவி பிரமானம் எடுக்கும் போது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் வளர்த்து உருவாக்கப்பட்ட, உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரான தம்பி பிரபாகரன் அவர்களின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக நான், எனக்கு வாக்களித்த மக்களுக்கு பணியாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன் என்று பிராமானம் எடுத்துள்ளார்.

இதுகுறித்து இவர் கூறியதாவது, 1980-86 ஆண்டுகளில், ஈழ விடுதளைப்போர் துவங்கிய காலகட்டங்களில், தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான் பிரபாகரனை வளர்த்தார். பிரபாகரனின் தாய் எம்.ஜி.ஆர்... தந்தை இந்திராகாந்தி. இவர்களின் வளர்ப்பால் தான் அந்த இயக்கம் நம் தமிழினத்துக்கு விடுதலையும், தனி நாடும் வாங்கி கொடுக்கும் என்று நம்பியிருருந்தேன்.

ஆனால், இந்திய அரசு என்னைப் போன்ற கோடான கோடி தமிழ் மக்களின் கனவும், விருப்பமும் நாசமாய் போனது. எப்படி போனாலும் பிரபாகரனின் விடுதலை வேட்கை ஒருக்காலும் தோற்காது. அது நம் இனத்துக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும், எம்.ஜி.ஆர் அவர்களின் எந்த திட்டமும் தோற்றது கிடையாது. அவரால் வளர்க்கப்பட்ட, வழிகாட்டப்பட்ட யாரும் தோற்கவும் மாட்டார்கள். இன்றில்லை! நாளை நிச்சயம் தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இவரது பரபரப்பான பதவி எற்ப்பால் கலங்கி போயி உள்ளது மத்திய புலனாய்வு துறை.

சிந்திக்கவும்: தனி தமிழீழம் அமைவது என்பது காலத்தின் கட்டாயம். முதலில் தனி தமிழகம் அமையும். அதற்க்கு இரண்டு தலைநகரங்கள் உண்டு ஒன்று மதுரை மற்றொன்று முள்ளி வாய்க்கள். இப்போ புரியும் என்று நினைக்கிறன். ஆம் ஈழமும் தனி தமிழகமும் ஒன்றுதான். ஒரே கொடியின் கீழ், ஒரே ஆட்சியின் கீழ் தமிழர்கள் என்ற நிலை உருவாகும்.


7 comments:

Anonymous said...

இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ காணுங்கள்.



**** ஆதாமின்டே மகன் அபு *****


.

Anonymous said...

நல்ல அலசல்

Anonymous said...

நல்லபதிவு, வாழ்த்துக்கள் மிஸ்டர் ராஜன்.... தொடர்ந்து தமிழர் ஒற்றுமை, மற்றும் இதுபோல் உள்ள நல்ல அலசல்களை பதியுங்கள் உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்...... மதி அழகன்.

தமிழ் மாறன் said...

நல்ல அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழரே.

தமிழ் மாறன் said...

தனிதமிழ் நாடு காணும் வரை நாம் ஓயக்கூடாது.

தமிழ் மாறன் said...

தமிழா! தனிதமிழ் நாடு நமது இலட்சியம் என்று சங்கே முழங்கு!!!!!!!!!!!!!

தமிழ் மாறன் said...

எப்படி வெள்ளையர்களை எதிர்த்து நாம் போராடி ஒரு நாட்டை பெற்றோமோ அதுபோல் வடநாட்டு காலனி ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். அறிஞ்சர் அண்ணாவின் வழியில் அயராது உழைப்போம் கண்ணியமாய் அண்ணல் சொன்னதை செய்வோம். அண்ணா என்ன சொன்னார்? தமிழ் நாடு தனி நாடு என்று.