Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Oct 9, 2013

தேர்தலின் மூலம் உரிமைகள் கிடைத்துவிடுமா?

Oct 10/2013: நடந்த முள்ளிவாய்க்காலின் கொலைக் களத்திலிருந்து இன்னமும் மீளாத ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேர்தலை சந்தித்துள்ளனர். அனைத்துத் தேர்தல்களையும் விட இந்தத் தேர்தல் காலத்தாலும் சூழலாலும் முக்கியத்துவம் பெறுகிறது.

1987-ஆம் ஆண்டு போடப்பட்ட இந்திய - இலங்கை உடன்பாட்டில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு அதற்கு தனி நிர்வாக சபை அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கூறு இணைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம், அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே இலங்கையை 2 தமிழ் மாகாணங்கள், 7 சிங்கள மாகாணங்கள் என 9 மாகாணங்களாகப் பிரித்தார். 

அதில் தமிழர் தாயகமான வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு இரண்டு தனித்தனி மாகாணங்கள் ஆக்கப்பட்டன. ஒன்றிணைந்த தாயகம் என்ற தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கையே நிராகரிக்கப்பட்டது. மேலும், இந்த மாகாணங்களுக்கு மிகக் குறைவான அதிகாரங்களே வழங்கப்பட்டன.  நில அதிகாரமும் காவல் துறை அதிகாரமும் மத்திய அரசின் வசமே இருந்தது.

1987-ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையின் முன்னிலையில் தமிழ் மாகாணங்களுக்கு முதன் முறையாக தேர்தல் நடத்தப்பட்டது. அத்தேர்தலில் இந்திய அரசின் கைப்பாவையாக இருந்த வரதராஜ பெருமாள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய அமைதிப் படை இலங்கையை விட்டு வெளியேறிய போது அவர்களுடன் வரதராஜ பெருமாளும் வெளியேறி இன்று வரை இந்திய அரசின் பாதுகாப்பில் இந்தியாவின் வடக்கு மாநிலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளார். அந்தத் தேர்தலுக்குப் பிறகு 26 ஆண்டுகள் கழித்து தற்போது வடக்கு மாகாணத்துக்குத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறவிருப்பதை ஒட்டி எழுந்துள்ள பன்னாட்டுச் சமூகத்தின் அழுத்தங்களில் இருந்து தன்னை காத்துக் கொள்ள மகிந்த இராஜபக்சே இந்தத் தேர்தலை நடத்தியுள்ளார். அதிலும் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் தேர்தல் நடத்தினால் தனது குட்டு வெளிப்பட்டுவிடும் என்பதால், மேலும் இரு சிங்கள மாகாணங்களுக்கும் சேர்த்து ஒன்றாக தேர்தலை நடத்தி முடித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சி 36 இடங்களில் 28 இடங்களைப் பிடித்து, அதன் மூலம் இரண்டு நியமன உறுப்பினர்களையும் பெற்று பெரும் வெற்றி பெற்றுள்ளது. அதிபர் மகிந்த இராஜபக்சேயின் ஆளும் கூட்டணியான அய்க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 7 இடங்களையும் இலங்கை முஸ்லிம் காங்கிரசு ஓர் இடத்தையும் கைப்பற்றியுள்ளன. இந்தத் தேர்தலின் மூலம் ஈழத் தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைத்துவிடுமா?

Aug 2, 2012

பயங்கரவாதிகளாக மாறிவரும் புத்த பிக்குகள்! அமெரிக்கா?


கொழும்பு. Aug, 02:  இலங்கையில் கடந்த ஆண்டு பல மத வழிபாட்டுத் தலங்களும், சிறுபான்மை சமூகத்தினரும் தாக்குதலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவாலயங்கள் மற்றும் கிறித்துவ சமூகத்தின் மீது கடந்த ஆண்டு பல தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. அதே போல பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nov 8, 2011

ராஜபக்சே வீட்டுக்கு சேவகம் செய்யும் இந்திய கடல்படை!

NOV 11: கச்சத்தீவு கடல் பகுதியில், ராமேஸ்வரம் மீனவர்கள், நேற்று முன்தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். மாலை 6 மணிக்கு, நான்கு கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர் தாசன் படகு உட்பட, 10க்கும் மேற்பட்ட படகிலிருந்த வலைகளை வெட்டி, கடலில் வீசினர்.

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், மீனவர் விக்டருடைய படகின் முன்பகுதி சேதமடைந்தது. இலங்கை கடற்படையினர் வெறிச்செயல் தொடர்ந்து அரங்கேறுவதால், மீனவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிக்கிறது.

சிந்திக்கவும்: இந்தியாவே உனது கப்பல் படை எங்கே போனது. ராஜ்பக்சே வீட்டு கழிவறையை கழுவவா? உனது நீர்மூழ்கி கப்பல்களும், ராடார்களும் எங்கே போனது. ஈழத்திலே  கடைசி கட்ட யுத்தத்தின் போது தமிழ்  போராளிகள் கடல்வழியே தப்பி செல்லவோ அல்லது ஆயுதம் கொண்டுவரவோ விடாமல் பாதுகாத்து முற்றுகை போட்டு ராஜபக்சேவுக்கு விசுவாசமாக வலை ஆட்ட தெரிந்ததல்லவா இப்போது எமது மீனவர்களை பாதுக்காக்க முடியவில்லையா.

உனது விசுவாசம் எல்லாம் ராஜபக்சே உடந்தானா? ஓ.... தமிழர்கள் உனக்கு அந்நியர்கள் ஆச்சே.. சீக்கிரம் தனிதமிழ் நாடு அமையும் அதன் கப்பல்படை சிங்கள கயவர்களை ஓட ஓட விரட்டும். தனிதமிழ் நாட்டின் கப்பல்படையை சேர்ந்த கப்பல்களும், நீர் மூழ்கி கப்பல்களும் தமிழக மீனவர்களை பாதுகாக்க களமிறக்கப்படும் என்று நம்புவோம்.

நட்புடன்: மலர்விழி.

Nov 7, 2011

பரபரப்பான பதவி ஏற்ப்பு பரிதவிப்பில் மத்திய அரசு.


NOV 09: இராணுவ அமைப்பை நடத்தி வந்த விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரனின் பெயரில் பதவி ஏற்று ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். யார் இவர்.

இவர்தான் சோலை கேசவன் இவருக்கு வயது 55.  பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தின் அருகில் பத்திரம் எழுதி வருகிறார்.

இவர் அ.தி.மு.கவில் முக்கிய பதவி வகித்து வந்தார். இந்தமுறை நடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதால், சுயேச்சையாக போட்டியிட்டு அ.தி.மு.க வேட்பாளரை காட்டிலும், 120 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 25ம் தேதி நகர மன்ற உறுப்பினராக பதவி பிரமானம் எடுக்கும் போது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் வளர்த்து உருவாக்கப்பட்ட, உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரான தம்பி பிரபாகரன் அவர்களின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக நான், எனக்கு வாக்களித்த மக்களுக்கு பணியாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன் என்று பிராமானம் எடுத்துள்ளார்.

இதுகுறித்து இவர் கூறியதாவது, 1980-86 ஆண்டுகளில், ஈழ விடுதளைப்போர் துவங்கிய காலகட்டங்களில், தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான் பிரபாகரனை வளர்த்தார். பிரபாகரனின் தாய் எம்.ஜி.ஆர்... தந்தை இந்திராகாந்தி. இவர்களின் வளர்ப்பால் தான் அந்த இயக்கம் நம் தமிழினத்துக்கு விடுதலையும், தனி நாடும் வாங்கி கொடுக்கும் என்று நம்பியிருருந்தேன்.

ஆனால், இந்திய அரசு என்னைப் போன்ற கோடான கோடி தமிழ் மக்களின் கனவும், விருப்பமும் நாசமாய் போனது. எப்படி போனாலும் பிரபாகரனின் விடுதலை வேட்கை ஒருக்காலும் தோற்காது. அது நம் இனத்துக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும், எம்.ஜி.ஆர் அவர்களின் எந்த திட்டமும் தோற்றது கிடையாது. அவரால் வளர்க்கப்பட்ட, வழிகாட்டப்பட்ட யாரும் தோற்கவும் மாட்டார்கள். இன்றில்லை! நாளை நிச்சயம் தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இவரது பரபரப்பான பதவி எற்ப்பால் கலங்கி போயி உள்ளது மத்திய புலனாய்வு துறை.

சிந்திக்கவும்: தனி தமிழீழம் அமைவது என்பது காலத்தின் கட்டாயம். முதலில் தனி தமிழகம் அமையும். அதற்க்கு இரண்டு தலைநகரங்கள் உண்டு ஒன்று மதுரை மற்றொன்று முள்ளி வாய்க்கள். இப்போ புரியும் என்று நினைக்கிறன். ஆம் ஈழமும் தனி தமிழகமும் ஒன்றுதான். ஒரே கொடியின் கீழ், ஒரே ஆட்சியின் கீழ் தமிழர்கள் என்ற நிலை உருவாகும்.


Oct 30, 2011

அவமதிக்கப்பட்ட அபுல்கலாமும் தூக்குமேடையில் தமிழர்களும்!

OCT 31, அனைத்து ஊடகங்களாலும் பரபரப்பாக பேசப்பட்டு மறக்கப்பட்ட ஒரு விடயம்தான் சாந்தன், பேரறிவாளன், முருகன் கருணை மனு நிராகரிப்பு. மறந்த மக்களுக்கு நினைவுபடுத்தவே இந்த பதிவு.

கொலையாளி கொலையாளி என்கிறார்களே எந்த வகையில் அவர்கள் கொலையாளிகள். சிபிஐ ன் சிரேஸ்ட புலனாய்வாளரே சொல்கிறார் புலிகள் செய்யும் விடயங்களில் உச்ச கட்ட ரகசியம் காக்கப்படும் என்று. அப்படியானால் மின்கலம் வாங்கிக் கொடுத்த பேரறிவாளனுக்கு எப்படித் தெரியும் தான் ஒரு வெடிகுண்டு தயாரிக்கத்தான் இதை வாங்கி கொடுக்கிறோம் என்று.

அது இருக்கட்டும் சாந்தன் சிவராசனின் கூட்டாளி என்ற குற்றச்சாட்டை சொல்கின்றனர் அதனால் கொலைக்கு உடந்தையாகியிரப்பாராம். மற்றவர் கதைகளும் இதே மாதிரித்தான். ராஜீவ் செய்த கொலைகள், கற்பழிப்போடு ஒப்பிடுகையில் அவர் குடும்பமும் சம்பந்தப்பட்டிருக்கும் தானே அவர்களை ஏன் தூக்கில் விடக் கூடாது. எத்தனை கொலைகள்? எத்தனை கற்பழிப்புக்கள்? எத்தனை பேரை சுட்டு கொன்றார்கள்? எத்தனை பேரை உயிரோடு கொளுத்தினார்கள்? செய்தது யார் எமக்கு அமைதி தேடித்தர வந்த அமைதிப்படை.

இதே கொலையாளிகள் என்று சொல்லப்படுபவர்களின் கருணை மனுவை மேன்மைதகு ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இவர்கள் ஏற்கிறேன் எனவும் அவர்கள் அனுபவித்த தண்டனை போதும் எனவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இப்படி ஒரு நாட்டின் ஜனாதிபதியால் பதவியில் இருக்கும் போது அங்கிகரிக்கப்பட்ட ஒரு கருணை மனுவை அவர் பதவியை விட்டு விலகியதும் நிராகரிப்பது எந்த வகையில் நியாயம். இதுதான் இந்தியாவின் அணுசக்தி தந்த மேதைக்கு இந்தியா கொடுக்கும் மரியாதையா?

OH MY GOD! என் மறதியை என்னவென்று சொல்வது நமது ஜனாதிபதி தமிழன் ஆச்சே! தமிழனை என்று வடநாட்டுக்காரன் மதித்தான். தனது தேவைக்கு கறிவேப்பிலை போன்று பயன்படுத்தி கொள்வான் அவ்வளவே. வடநாட்டானுக்கு வால் பிடித்து அழிந்தவர் தான் தமிழர்களில் அதிகம். உதாரணத்துக்கு தமிழ் நாட்டில் பல அரசியல்வாதிகளை சொல்லலாம். தமிழனுக்கு பிரச்சனை வரும்போது வடநாட்டுகாரன் வாய்மூடி மவுனம் காப்பான் என்பது ஈழத்து பிரச்சனை முதல் மீனவர் பிரச்சனை வரை நிரூபனம் ஆகியது.

அதனால்தான் பெரியார் முதல் அண்ணா வரை எல்லோரும் தனி தமிழ்நாடு என்பதையே தங்கள் லட்சிய கனவாக கொண்டிருந்தார்கள். சாந்தன், பேரறிவாளன், முருகன், இவர்களை தூக்கில் போட அனுமத்தித்தால் தமிழா உனக்கு மனம், சூடு, சுரணை என்பதே இல்லை என்று ஆகும். சாந்தன், பேரறிவாளன், முருகன் மற்றும் சிறையில்வாடும் தமிழர்களை மீட்க்க ஒவ்வொரு தமிழனும் முன்வரவேண்டும். மறதி மக்களின் நியதி நினைவூட்டுவது எங்களது கடமை. மீண்டும் மீண்டும் நாம் போராட்டங்களை நடத்தினாலே நம்மால் அவர்களை வெளியே கொண்டுவர முடியும்.

இலட்ச்சக்கணக்கில் போராளிகளையும், பொதுமக்களையும் நம் கண்ணெதிரே சிங்கள பயங்கரவாதிகள் கொல்வதை வேடிக்கை பார்த்து மவுனம் காத்தோம். இப்போது நம் கண்ணெதிரே தூக்கிலிட துடிக்கும் கயவர்களிடம் இருந்து நம் தமிழ் மக்களை மீட்ப்போம். இது ஒவ்வொரு தமிழனும் ஏற்கவேண்டிய உறுதி மொழி. இதுவே நாம் நம் உறவுகளின் காயங்களுக்கு நாம் இடும் முதல் மருந்து. அப்போ இரண்டாவது மருந்து என்ன வென்று கேட்கிறீங்களா? அதுதான் இந்தியா நமது அண்டைய நாடு? இதுதான் ஒன்றரை இலட்சம் உறவுகளை துடிக்க துடிக்க கொல்ல காரணமாக இருந்த இந்தியாவுக்கும் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கும் நாம் இடும் நல் மருந்து.
-மலர்விழி-

Oct 20, 2011

தமிழா! இனி நீ இந்தியாவுக்கு அந்நியன்!

OCT 20, ஈழத்தமிழர்களின் 35 வருடகால போராட்டத்தை ஒரு சிலநாட்களில் முடிவுக்கு கொண்டு வந்த பெருமை நமது வ(பு)ல்லரசு இந்தியாவுக்கே சேரும்.

இலங்கையின் பயங்கரவாதி ராஜபக்சே தலைமையில் ஒரு ஹிட்லர் ஆட்சி நடக்கிறது. அங்குள்ள தமிழர்கள் அனுதினமும் தங்கள் இன்னுயிரை கையில் பிடித்தபடி வாழ்கிறார்கள். பெண்கள் வன்கொடுமைகளுக்கு ஈடுபடுத்தப்படுகிறார்கள். கிரீஸ் மனிதன் என்கிற பெயரில் சிங்கள பயங்கரவாதிகள் தமிழ் பெண்களின் மானத்தை பறிக்கின்றனர்.

தமிழர்கள் மானத்தோடு வாழவேண்டும் என்பதற்காக ஆயிரக் கணக்கில் மாவிரர்கள் (போராளிகள்) தங்கள் இன்னுயிரையும் கொடுத்தனர். அவர்கள் வாழவேண்டிய வயதில் தங்கள் இன்னுயிர்களை ஏன்? கொடுத்தார்கள். அவர்களின் தியாகம் வீண் போய்விட்டதா? அந்த மாவிரர்கள் செய்த தவறுதான் என்ன? தமிழர்கள் மானத்தோடு வாழவேண்டும் என்று அவர்கள் நினைத்தது தவறா?

இலங்கை தமிழர்களின் தாய் மண். சிங்கள காடையர்கள் அந்த நாட்டின் வந்தேறிகள். வந்தேறிகள் அந்த நாட்டை ஆக்கிரமித்து கொண்டு மண்ணின் மைந்தர்களை அடிமைபோல் நடத்தினார்கள். அதுமட்டுமில்லாது கலவரங்கள் மூலம் அவர்களை கொன்றும் குவித்தார்கள். இந்தியாவில் எப்படி ஹிந்துத்துவா வந்திரிகள் முஸ்லிம்களை கலவரங்கள் மூலம் கொன்று குவிக்கிறார்களோ அதுபோல.

இதை எதிர்த்து தமிழர்கள் அகிம்சை வழியில் பல்லாண்டுகள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டங்களை சிங்கள நாசி அரசாங்கமும், அதன் எவலாளிகளும் தங்கள் கால்களில் போட்டு நசுக்கினார்கள். இதை பொறுக்க முடியாமல் தமிழர்கள் ஒரு ஆயுத போராட்டத்தை கட்டி எழுப்பி தமிழர்களுக்கு என்று ஒரு நாடும் அமைத்து சிங்கள பயங்கரவாதிகள் தமிழர்களை கண்டு நடுங்கும் அளவுக்கு சிறப்பாக ஆட்சியையும் செய்தார்கள். அதை கண்டு பெருக்கமுடியாத இந்திய கழுகு சிங்களர்களுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்து அந்த போராட்டத்தை முடிவுக்கும் கொண்டுவந்தது.

ஈழத்தமிழர்கள் கொல்லப்படும்போது தமிழகத்து உறவுகளால் வெறுமனே வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. இது வரலாற்றில் இந்திய தமிழர்கள் மேல் ஒரு கரையாகவே படிந்து விட்டது. தமிழர்கள் என்பது ஒரு இனம்தானே பின்னே ஏன்? நான் இந்தியா தமிழன், இலங்கை தமிழன் என்று பிரித்து சொல்கிறேன் என்றால் அப்படி சொல்லும் அளவுக்குத்தான் இந்திய தமிழகர்கள் நடந்து கொண்டார்கள். அவர்களால் தங்கள் இனமக்கள் கொல்லப்படும்போது பாரிய அளவில் எதிர்ப்புகளை காட்டமுடியவில்லை. தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி தமிழர்களும் அன்று ஒரு முடிவு எடுத்திருக்கவேண்டும். இந்தியா ஈழத்தமிழர்கள் விசயத்தில் சரியான முடிவெடுக்கவில்லை என்றால் தமிழகம் இந்தியாவோடு இல்லை என்பதை அறுதியிட்டு சொல்லியிருக்க வேண்டும் அதை செய்யாததால் வந்த வினையே இத்தனையும்.

தமிழா இனி நீ இந்திய தமிழன் இல்லை. உனக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உன் இனமக்களை கொல்ல உறுதுணையாக இருந்த இந்தியாவுடன் உனக்கு எந்த ஓட்டும் இல்லை உறவும் இல்லை. இனிமேல் நீ இந்தியாவுக்கு அந்நியன். தமிழா! உன்மேல் படிந்த கரையை துடைக்கும் பொறுப்பு உனக்குண்டு. அதை நீ மறுக்கவும், மறக்கவும் முடியாது. ஈழத்து தமிழர்கள் தங்கள் விகிதாசாரத்துக்கு அதிகமாக ரத்தம் சிந்திவிட்டனர். அவர்களால் மீண்டும் இந்த போராட்டத்தை வடிவமைக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே. தமிழகத்து தமிழர்களே உங்கள் மீது உள்ள கரையை துடைக்க நீங்கள்தான் இனி ஈழத்து போராட்டத்தை எல்லா முனைகளிலும் முன்னெடுக்க கடமைப்பட்டவர்கள். வெறும் ஜனநாயகத்தை நம்பி, வெற்று அரசியல்வாதிகளின் மாய்மாலங்களில் ஏமாந்து விடாமல் வீரத்தோடும், விவகத்தொடும் செயல்படும் ஒரு மக்கள் இயக்கம் தமிழகத்திலே கட்டியமைக்கப்பட வேண்டும்.

இந்த தமிழர் இயக்கமே பிற்காலத்தில் இலங்கையை கைபற்றபோகும் ஒரு இயக்கமாக வளரவேணும். இதற்குண்டான எண்ணமும், சிந்தனையும் உள்ள இளஞசர்கள், சிந்தனையாளர்கள் ஒன்று திரள வேண்டும். இதுவே நமது ஆவல். ஈழத்தின் சுதந்திரத்திற்க்காக உயிர்த்தியாகம் செய்த மாவிரர்களின் தியாகங்களை மனதில் கொண்டு வீரத்தோடு எழுந்து நிற்ப்போம். தமிழா! ஒன்றுபடு.
-நட்புடன் மலர்விழி-

Aug 26, 2011

இனப்படுகொலை விவகாரம்: அமெரிக்கத்தூதர் இலங்கை பயணம்!

August 27, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் சம்பந்தமாக ஐ.நா.சபை நடத்தவிருக்கும் கூட்டத்தை முன்னிட்டு, அடுத்த வாரம் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்கத்தூதர் ராபர்ட் பிளேக் இலங்கைக்கு
வரவிருக்கிறார்.

அப்போது அவர் அரசு உயர் அதிகாரிகளிடம் பேசவிருப்பதாகவும் இலங்கையைச் சேர்ந்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.  மேலும், இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இலங்கைப் போரின் போது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படு கொலைகள் பற்றியும் பேச இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



போர் குற்றங்கள் குறித்து பேச அமெரிக்க தூதர் ராபர்ட் இலங்கை வருவது இது இரண்டாவது முறை என்றும் இலங்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.  இதற்கிடையே, வரும் செப்டம்பர் மாதம் நடககவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகவுன்சில் மாநாட்டில் பங்கேற்பதை இலங்கை தவிர்த்து வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.