Sep 10, 2013

கருந்துளசியும் அதன் மருத்துவ பயனும்!

கருந்துளசி பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அதனுடைய எண்ணற்ற மருத்துவ குணங்களைப் பற்றி அறிந்திருப்போமா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

கருந்துளசி சுற்றுப்புற காற்றை தூய்மை செய்யும் குணம் கொண்டது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், காலையில் துளசி இலையை தண்ணீரில் போட்டு அருந்துவதால் வயிற்று உபாதைகள் நீங்கும்.

கருந்துளசி பாக்டீரியாக்களுக்கு எதிராக வேலை செய்கிறது. கருந்துளசி இலைகள் மற்றும் விதைகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. கருந்துளசி இலைகள் இரைப்பு நோய், மூட்டுவலி போன்றவற்றை குறைக்கச் செய்வதாகவும், புற்றுநோய்க்கு எதிராக வேலை செய்யும் தன்மையுள்ளது.

கருந்துளசியின் மருத்துவப் பயன்கள் :

*    ஒரு கைப்பிடி துளசி இலைக் கொழுந்துடன்  சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைத்து, சுண்டைக்காய் அளவான மாத்திரைகளைச் செய்து காய வைத்துக் கொள்ள வேண்டும். வேளைக்கு ஒரு மாத்திரை நசுக்கி, தேனில் கலந்து, குழைத்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமல் உடனடியாக குறையும்.

*    துளசி இலையை இலேசாக அவித்து 5 மி.லி. அளவுக்குச் சாறு எடுத்து காலை, மாலை வேளைகளில் ஒரு வாரம் வரை குடித்தால் தீராத சளித் தொல்லைகள் தீரும்.

*    ஐந்து கிராம் துளசி இலையை, இரண்டு மிளகுடன் சேர்த்து நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலை மற்றும் மாலை வேலைகளில் வெந்நீரில் சேர்த்து குடித்தால் தீராத காய்ச்சல் குணமாகும். 

2 comments:

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள தகவலுடன் கூடிய
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் said...

பயனுள்ள பகிர்விற்கு மிக்க நன்றி .தொடர வாழ்த்துக்கள் !