காங்கிரஸ்,மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளை விட பா.ஜ.க மிகவும் ஆபத்தானது என்று சொல்லி அக்கட்சியில் இருந்து முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா விலகி தனி கட்சி தொடங்கிறார்.
அதில் இருந்து பாரதிய ஜனதாவின் சரிவு கர்நாடகாவில் தொடங்கியது. ""எடியூரப்பா தொடங்கியுள்ள கர்நாடக ஜனதா கட்சி, ஸ்ரீராமுலு தொடங்கியுள்ள பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு பல பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள பாஜக அரசை நீக்க வேண்டும் என்று ஆளுநருக்கு கர்நாடகா மாநில எதிர் கட்சி தலைவர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ. க்கள் எடியூரப்பா கட்சிக்கும், 4 எம்.எல்.ஏ.க்கள் ஸ்ரீராமுலு கட்சிக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், கர்நாடக சட்டப் பேரவையில் பாஜகவின் பலம் 100 ஆகக் குறைந்துள்ளது.
சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை பாஜக இழந்துள்ளதால், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ன்படி முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான பாரதிய ஜனதா அரசைக் கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.மேலும், பசுவதை தடுப்புச் சட்ட மசோதா, 11 தனியார் பல்கலைக்கழகச் சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.
1 comment:
appadi podu.....
Post a Comment