Dec 16, 2012

வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்!


Dec 17: சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ராஜிந்தர் சௌத்ரிக்கு, ஹைதராபாத் மக்கா மசூதி குண்டு வெடிப்பிலும் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு (N I A ) தெரிவித்துள்ளது.

2007ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி ஹரியாணா மாநிலம் பானிப்பட் அருகே செம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்ததில் 68 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா அமைப்பை சார்ந்த ராஜிந்தர் செளத்ரியை நேற்று சனிக்கிழமை இரவு தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்படும் 4ஆவது நபர் ராஜிந்தர் செளத்ரி. ஏற்கெனவே அசிமனந்தா, லோகேஷ் சர்மா, தேவிந்தர் குப்தா ஆகியோர் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த ராஜிந்தர் செளத்ரி பற்றித் தகவல் கொடுப்போருக்கு ரூ. 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஹிந்துத்துவா தீவிரவாதியான அவர், தனது பெயரை மாற்றிக் கொண்டு மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனி அருகே தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்த இரு குண்டுவெடிப்பு சம்பவங்களிலும், வெடிகுண்டை சம்பந்தப்பட்ட இடங்களில் பொருத்தியது ராஜிந்தர் சௌத்ரி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுதந்திரம் அடைந்தது முதல் இந்தியாவில் நடந்த பல்வேறு மத கலவரங்களுக்கும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் மூல காரணமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின்  பயங்கரவாத முகம் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வருகிறது.

1 comment:

Anonymous said...

good...good.