
இவரது கணவர் பர்ஹன் மன்ஜி, சிம்லாவில் கூலி வேலை செய்கிறார். புதுக்வா தேவி, தன் நான்கு குழந்தைகளுடன் கயாவில் வசித்து வந்தார்.
இவருக்கு மத்திய அரசின், "இந்திரா அவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ், வீடு பெற்றுத் தருவதாகக் கூறி லோக்கல் அரசியல்வாதிகள் சிலர் வாக்குறுதி அளித்தனர். இந்தக் காரணத்தைக் கூறி, அடிக்கடி அவரிடமிருந்து பணம் பெற்றனர்.
சமீபத்தில், பணம் கேட்ட போது அவர் தர மறுத்தார். அதனால், ஆத்திரமடைந்த அவர்கள் அவரை தாக்கி அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பயனளிக்காமல் இறந்துவிட்டார்.
சிந்திக்கவும்: ஐந்தறிவு படைத்த மிருகங்களிடம் ஜாதியின் அடிப்படையில் வேறுபாடு இல்லலை. ஆனால் மனிதர்களிடம் மட்டும் குறிப்பாக இந்தியாவில் பிறப்பால் உயர்ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கிற வேறுபாடு நிலவுகிறது. கற்கால சிந்தனை படைத்த இந்த கொடியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஜாதி வேறுபாடுகள் அனைத்தும் ஹிந்துத்துவா வர்ணாசிரமத்தின் கீழே வருகின்றது. இதனால்தான் பெரியாரும், அம்பேத்காரும் இதை வன்மையாக எதிர்த்தார்கள்.
இந்த வர்ணாசிரம கொள்கையைத்தான் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்களும் அதன் கேடர்கலான அத்வானியும், ராமகோபாலனும், சோவும், சுப்பிரமணிய சுவாமியும், மற்றும் தினமலர் வகைராக்களும் ஆதரிக்கின்றன. இந்தியாவில் வாழும் ஹிந்துக்களில் பெரும்பான்மையினரை தாழ்த்தப்பட்ட ஜாதி என்று அறிவித்து விட்டு ஒரு சிறிய கூட்டம் அவர்களை ஆண்டாண்டு காலமாக அடக்கி ஆளுகிறது. இந்த நிலை மாறவேண்டும். இது போன்ற கயவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
3 comments:
unmaithaan...
அநியாயமாக பணத்துக்காக ஒரு பெண்ணை எரித்துக் கொன்றது ஒரு கும்பல். இது தான் நியூஸ்.
இதுல தலித் எங்க இருந்து வந்துச்சு ? தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த கும்பல் இந்தப் பெண்ணுக்கு கொடுமை செய்த்தா? வேறு சாதிப் பெண்ணாக இருந்தால் அந்த தீங்கு நடந்திருக்காதா ? இந்த சில்லரை பாலிடிக்ஸ் எல்லாம் தாத்தா காலத்து டெக்னிக் புதுசா எதாச்சும் ட்ரை பண்ணுங்க...
இஸ்லாம் ஒன்றே இதற்கு ஒரே தீர்வு. சகோதரர்கள் இதை உணரவேண்டும்.
Post a Comment