Nov 1, 2009

அமெரிக்காவில் 6 பெண்களை கற்பழித்து கொலை செய்தவன் பிடிபட்டான்.


அமெரிக்காவில் உள்ள கிளீவ் லேண்டு நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் சில பெண்கள் திடீரென மாயமாகி வந்தனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் கிளீவ் லேண்டு நகரை சேர்ந்த அந்தோணி சோவெல் ( வயது 50) என்ற நபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஏனென்றால் கடந்த 1989-ம் ஆண்டு ஒரு கற்பழிப்பு வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். இக்குற்றத்துக்காக 15 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் அனுபவித்தவர். இதற்கிடையே கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் பிணத்தை போலீசார் கைப்பற்றினர்.

அவளின் உடலில் கைரே கைகள் பதிந்திருந்தன. எனவே சோவெயின் கைரேகையுடன் அப்பெண்ணின் உடலில் பதிந்திருத்த கைரேகையை ஒப்பிட்டு போலீசார் பரிசோதனை செய்தனர்.

அதில் அப்பெண்னை சோவெல் கற்பழித்து கொலை செய்தது தெரிய வந்தது. எனவே அவரை கைது செய்து போலீசார் துருவி துருவி விசாரித்தனர். விசாரணையில் சோவெல் 6 பெண்களை கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அப்பெண்களின் பிணங் களை தனது வீட்டின் பின்புறம் புதைத்ததாக அவன் தெரிவித்தான்.

இதை தொடர்ந்து அப்பிணங்களைபோலீசார் தோண்டி எடுத்தனர். அழுகிய நிலையிலும் எலும்பு கூடுகளாகவும் இருந்தன. ஜெயிலில் இருந்து விடுதலையான பின் கடந்த 2005-ம் ஆண்டு முதல் பெண்களை கற்பழித்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிவந்துள்ளது

No comments: