
தமிழக மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்கும் மத்தியில் பகையை தூண்டுகிற வேலையை இலங்கை நேரடியாகவும், இந்தியா மறைமுகமாகவும் செய்து வருகின்றன. இலங்கை கடற்படையால் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டும் இன்று வரை கொலைகள் நின்றபாடில்லை. இப்போது கூட்டம் கூட்டமாக எமது மீனவர்களை கடத்தவும் தொடங்கி விட்டனர். இந்தியாவை சுற்றியுள்ள கடற்பரப்புகளில் தமிழர்கள் பிழைப்பு நடத்தும் கடற்பரப்பில் மட்டுமே இந்த அடாவடிகள் தொடர்கின்றன. தமிழர்களின் கடல் வளம் திட்டமிட்டு பறிக்கப்படும் சதிக்கு எதிராக ஒன்று திரள வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த ஒற்றுமையும், போராட்டமுமே மீனவர் படுகொலைகளையும் கடல் வளம் பறிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment