
16-ந் தேதி அன்று மீண்டும் இந்திய மீன்பிடி படகுகளை தாக்கி, அதன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி 24 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ளது. வெறும் கடிதங்களை சென்னையிலிருந்து டெல்லிக்கு அனுப்புவதன் மூலமோ, அல்லது டெல்லியிலிருந்து கொலம்போவிற்கு தூதுவர்களை அனுப்புவதன் மூலமோ எந்தப் பயனும் ஏற்படாது. கருணாநிதியால் அனுப்பப்படும் கடிதங்களை ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு கண்டுகொள்வதில்லை என்பது வரிசையாக நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது தெளிவாகிறது. இதே போன்று, இந்தியாவின் எச்சரிக்கையையும் இலங்கை அரசு அலட்சியம் செய்து வருகிறது.
கடுமையான நடவடிக்கைகள் தேவை. முதல் நடவடிக்கையாக, இலங்கை விமானப்படையின் பதினாறாவது ஆண்டு விழாவிற்கு இந்திய விமானப்படையின் சுகோய் விமானம் அனுப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்தியாவின் கடல் எல்லையை தனது முந்தைய நிலைக்கு எடுத்துவரும் வகையில், இந்திய வரைபடத்தில் கச்சத் தீவினை மீண்டும் சேர்க்க, இலங்கை அரசுடனான கச்சத் தீவு உடன் படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் இந்தியாவின் கடற்படை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும். இந்திய மீனவர்களுக்கு எதிரான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வில்லை என்றால், கடுமையான விளைவுகளை இலங்கை அரசு சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் தொலை பேசி மூலம் மஹிந்தா ராஜபக்ஷேவிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment