Jan 27, 2013

துளிர்விடும் சுதந்திர தாகம்! நீதி கேட்டு நெடும்பயணம்!

Jan 28: தமிழீழ உரிமைப் போராட்டத்தின்  தொடர்ச்சியாக நீதி கேட்டு  லண்டனில்  இருந்து இந்தியா நோக்கி மனிதநேய நடை பயணம் ஒன்றை சி.லோகேஸ்வரன் மேற்கொள்கிறார்.

லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலைக்கு முன்பாக இருந்து ஜனவரி 29 தேதி மாலை 6 மணிக்கு இந்த நடை பயணத்தை ஆரம்பிக்கிறார்.

ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான நீதி கோரும் நடை பயணங்கள் பல ஏற்கனவே நடந்திருந்தாலும் இது பல்வேறு வகைகளில் வரலாற்று சிறப்பு மிக்கதாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த 'வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் 4ம் ஆண்டு நினைவு நாளில் இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்படுகிறது. 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்" என்ற விடுதலை வேட்கையை விதைத்த திலீபனின் நினைவு நாளில் மகாத்மா காந்தி சமாதியை சென்றடையும்.

இவர் இலங்கை இறுதி யுத்தத்தின் பொழுது, (பிப்ரவரி 2009 இல்) பிரிட்டிஷ் பிரதமரின் மாளிகைக்கு முன்பாக தீக்குளிக்க முயன்று கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சிறையில் இருந்தவர். 2010ம், 2011ம் ஆண்டுகளில் நடைபெற்ற மனிதநேய நடைபயணங்களில் பங்குகொண்டவர். அத்தோடு 2010ல் மன்செஸ்டர் பகுதியிலிருந்து லண்டன் வரை சைக்களில்  மனிதநேய பயணம் மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் குடும்பத் தலைவர் என்பதும், நான்கு பிள்ளைகளின் தந்தை என்பதும் தனது குடும்பம், தனது வாழ்க்கை என்று சுயநலத்தோடு வாழாமல் தனது தேசம் தனது மக்கள் எனும் தேசப்பற்றோடு செயற்படுவது பாராட்டத்தக்கது. இவரின் தேசப்பற்றிற்கும் கடின உழைப்பிற்கும் உலகத்தமிழர்கள் தங்களது ஆதரவை நல்க வேண்டும் என்று சிந்திக்கவும் இணையம் சார்பாக மக்களை அன்போடு வேண்டுகிறோம்.

ஈழத்தமிழர்களின் விடுதலை! சுயாட்சி! இதை தடுக்க யாராலும் முடியாது!

2 comments:

Anonymous said...

விஸ்வரூபம் திரைப்படம்

Viswaroopam Movie Online

(Full movies)

http://www.yarlminnal.com/?p=26589

Anonymous said...

விஸ்வரூபம் திரைப்படம்

Viswaroopam Movie Online

(Full movies)

http://www.yarlminnal.com/?p=26589