புதுடில்லி:""மனிதக் கழிவுகளை, மனிதர்களே அகற்றுவதை தடை செய்ய வகை செய்யும் சட்ட மசோதா, பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடரில், நிறைவேற வேண்டும்,'' என, மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வலியுறுத்தினார்.
சிந்திக்கவும்: இந்தியா சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டை தாண்டி விட்டது. இன்னும் "மனிதக் கழிவுகளை, மனிதர்களே அகற்றுவதை தடை செய்ய முடியவில்லை. இதை தடை செய்ய மசோதா கொண்டுவரும் பொழுது எல்லோரும் ஆதரவு கொடுங்கள் என்று மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கெஞ்சுகிறார்.
ஹிந்துத்துவாவோ, வர்ணாசிரமம் வேண்டும் என்று சொல்லி, மனித கழிவுகளை சுத்தம் செய்ய, செருப்பு தைக்க, தோட்டங்களில் வேலை செய்ய ஜாதி ஏற்றத்தாழ்வு இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்கிறது. நம்ம அபுல் கலாம் அண்ணாச்சியோ அணு குண்டையும், ராக்கெட்டையும் கண்டு பிடித்து, இந்தியா முன்னேறும் கனவு காணுங்கள் என்று சொல்லிட்டார்.
நம்ம பொருளாதார புலி மண்ணு மோகன் சிங்கோ அணு உலைகளையும், வால்மார்ட் முதல் பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவுக்குள் கொண்டு வந்து இந்தியா முன்னேறி விட்டது என்று பிதற்றுகிறார். மதக்கலவரம் நடத்திய பயங்கரவாதி மோடியை அடுத்த பிரதமராக்க போறாங்கள். அவரு இந்தியாவை உலத்திலேயே நம்பர் ஒன் நாடாக மாற்றிவிடுவார்.
ஏழை, எளிய மக்களுக்கு வீடுகளில் கழிப்பறை வசதிகளை செய்து கொள்ள முடியாமல் வீதிகளில், ரயில்வே தண்டவாளங்களில், கடல்கரை, குளத்து கரைகளில் என்று தங்களது இயற்க்கை தேவையை போக்குகிறார்கள் உலகத்திலேயே கழிப்பறைக்கு போக கட்டணம் செலுத்த வேண்டிய ஒரு நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.
பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி, ரயில்வே நிர்வாகம் ஆகியவை மனித கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை நியமித்தாலோ, சுகாதாரமற்ற கழிவறைகளை அமைத்தாலோ, ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்படும் எனதெரிகிறது.
இந்த சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், வல்லரசாவது இருக்கட்டும், குடிசைகள் இல்லாத, எல்லா வீடுகளிலும் கழிப்பறை வசதி என்கிற நிலை வரவேண்டும். அப்பொழுதுதான் இந்தியா வளர்ந்த நாடுகள் அந்தஸ்த்தை அடைய முடியும்.
4 comments:
நம் அரசு கட்சிகள் சண்டையை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது....இதில் அவர்கள் எங்கிருந்து நம் அப்பாவி மக்களை எவ்வாறு நியாபகம் வைத்து இருப்பார்கள்....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
விஸ்வரூபம் திரைப்படம்
Viswaroopam Movie Online
(Full movies)
http://www.yarlminnal.com/?p=26589
விஸ்வரூபம் திரைப்படம்
Viswaroopam Movie Online
(Full movies)
http://www.yarlminnal.com/?p=26589
விஸ்வரூபம் முழு திரைப்படத்தையும் பார்க்க கீழ்க்கண்ட இணையதளத்திற்கு செல்லுங்கள்.
(Full movies)
http://www.yarlminnal.com/?p=26589
பாருங்கள் பரப்புங்கள்! விஸ்வரூபம் திரைப்படம்!
Post a Comment