Sep 21, 2012

அந்நியன் ரேமோ மாதிரி டக்கரா?

Sep 22: இந்தியாவில் காடு வா.. வா... என்று சொல்லும் போது ஜனாதிபதி ஆனவர்கள்தான் அதிகம். ஆனால் நம்ம கலாம் ஐயா மட்டும்தான் முடியை ஸ்டைலா போட்டு அந்நியன் ரேமோ மாதிரி டக்கரா வலம் வந்தார்.

இப்படி பல அருமை பெருமைகளுக்கு சொந்தகாரான நம்ம கலாம் ஐயாதான், “கூடங்குளம் அணுஉலைகள் மிகவும் பாதுகாப்பானவை மூன்றாம் தலை முறையினருக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு வசதிகளும் கொண்டது என்று கதை விட்டார்.

மேலும் “அணுஉலைகள் இரண்டடுக்கு தடிமன் சுவர் கொண்ட பாதுகாப்பு  முறையில் அமைத்துள்ளதால் கதிர்வீச்சு வெளியே வராது, அணுஉலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனியத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கழிவுகள் கிடைக்கும். அதையும் கடலில் கரைக்க மாட்டோம் என்றார்.

அணுகுண்டுகளை நேசிக்கும் அதேநேரம் குழந்தைகளையும் நேசிக்கும் அதிசய விஞ்சான பிறவியான அபுல்கலாம் ஐயாவுக்கும், மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கும் செருப்படி கொடுக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் மூன்று கேள்விகளை எழுப்பி உள்ளது.

1) கூடங்குளம் அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருந்து கதிர்வீச்சு ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

2). 1984-ம் ஆண்டு போபாலில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது, அதன் பாதிப்பு தற்போதும் உள்ளதே?

3). கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதை அரசு எப்படி எதிர்கொள்ளும்?

நியாமான கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார் நமது அந்நியன் ரேமோ மற்றும் சைலன்ட் MODE சர்தார்ஜி, மற்றும் கூட்டத்தார்கள்.

16 comments:

Seeni said...

athu sari!

Unknown said...

its not romeo robo?

Easy (EZ) Editorial Calendar said...

உச்ச நீதிமன்றம் சரியான கேள்விகளை தான் எழுப்பி உள்ளது.

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

தமிழ் காமெடி உலகம் said...

கலாம் இப்படி செய்வார் என்று யாருமே நினைத்து பார்க்கவே இல்ல....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

Anonymous said...

Abul kalam corporate muthalaaligalin kai kooli

Anonymous said...

Good article

Anonymous said...

Mannu mohan vagiraavukku seruppadi

SNR.தேவதாஸ் said...

1) கூடங்குளம் அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருந்து கதிர்வீச்சு ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
தாங்கள் 100 வருடம் உயிரோடு வாழ்வோம் என்ற நம்பிக்கையில் தானே இருக்கிறீர்கள்.
2). 1984-ம் ஆண்டு போபாலில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது, அதன் பாதிப்பு தற்போதும் உள்ளதே?
கல் தடுக்கி வாழ்பவனும் உண்டு.புல் தடுக்கி செத்தவனும் உண்டு.

3). கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதை அரசு எப்படி எதிர்கொள்ளும்?
இவ்வளவு நீளக் கடடுரையை பதிவு போட்ட நேரத்துக்கு தகவல் உரிமை சட்டத்தின்படி இந்த தகவலைக் கேடடு பெற்று அதன் பிறகு இங்கு எழுதி இருந்திருக்கலாம்.
கடந்த 20 வருடங்களாக நடந்த கட்டுமான பணியின் போது விட்டுவிட்டு இப்போது இதைப் பேசுபவர்களுக்கு தற்போது (தாங்களைப் போன்றவர்களுக்கும்) ஒரு டைம்பாஸ் ஆக இருக்குதே தவிர வேறு ஒன்றும் இல்லை.

PUTHIYATHENRAL said...
This comment has been removed by the author.
PUTHIYATHENRAL said...

வணக்கம் தேவதாஸ் ஐயா! உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

///தாங்கள் 100 வருடம் உயிரோடு வாழ்வோம் என்ற நம்பிக்கையில் தானே இருக்கிறீர்கள்//
ஐயா அப்படியில்லை உதயகுமார் மற்றும் போராட்டகாரர்கள் நூறுவருடம் வாழ அல்ல அந்த போராட்டம். இந்த அணு உலையால் ஏற்ப்படும் கேடுகளால், அதில் இருந்து பரவும் கதிர் வீச்ச்சால் பரவும் புற்று நோய், மற்றும் நோய்கள் நமது சந்ததிகளை பாதிக்க கூடாது என்பதற்காகவே இந்த போராட்டம். தயவு செய்து அணு உலை தொடர்பாக சிந்திக்கவும் இணையத்தின் வலது பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள தோழர் முத்து கிருஷ்ணன் அவர்களின் விடியோவை பார்க்கவும்.

PUTHIYATHENRAL said...

வணக்கம் தேவதாஸ் ஐயா! உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
///கல் தடுக்கி வாழ்பவனும் உண்டு. புல் தடுக்கி செத்தவனும் உண்டு////
2). 1984-ம் ஆண்டு போபாலில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது, அதன் பாதிப்பு தற்போதும் உள்ளதே? என்ற கேள்விக்கு பொருத்தமில்லாத ஒரு கருத்து. போபால் மக்களின் அவலங்களை பற்றி நமது பதிவுகளை படியுங்கள் தங்களுக்கு புரியும்.

Anand said...

@ devadass. உங்கள் பதில்கள் நல்ல நகைச்சுவை.

//கல் தடுக்கி வாழ்பவனும் உண்டு.புல் தடுக்கி செத்தவனும் உண்டு.

போபால் மாதிரி 20000 க்கு மேற்பட்டோர் புல் தடுக்கி இறந்திருக்கிரார்களா? பொருத்தம் இல்லாத உதாரணம்.

Anand said...

@Devadass

//கடந்த 20 வருடங்களாக நடந்த கட்டுமான பணியின் போது விட்டுவிட்டு இப்போது இதைப் பேசுபவர்களுக்கு தற்போது (தாங்களைப் போன்றவர்களுக்கும்) ஒரு டைம்பாஸ் ஆக இருக்குதே தவிர வேறு ஒன்றும் இல்லை.//

இந்த தகவலை முழுமையாக படியுங்கள்.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17794

PUTHIYATHENRAL said...

//கடந்த 20 வருடங்களாக நடந்த கட்டுமான பணியின் போது விட்டுவிட்டு இப்போது இதைப் பேசுபவர்களுக்கு தற்போது (தாங்களைப் போன்றவர்களுக்கும்) ஒரு டைம்பாஸ் ஆக இருக்குதே தவிர வேறு ஒன்றும் இல்லை.//

வணக்கம் மிஸ்டர் devadass snr , நீங்கள் சொல்வது போல் இல்லை ஆரம்பம் முதலே போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. அது சிறிய அளவிலே நடந்தது ஏன் என்றால் அணு உலை பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத கால கட்டம். என்று ஜப்பான் புகுசிமா அணு உலை வெடித்ததோ அதை பார்த்த பின்னாலே மக்கள் அணு உலையின் ஆபத்தை உணர்ந்தனர். அணு உலை என்பது மக்கள் விரோத அழிவு சக்தி என்பதில் துளி அளவு கூட ஐயம் இல்லை. அதனால் இதை எதிர்ப்பது ஒவ்வொரு நல்ல குடிமகனின், மக்கள் நேசனின், மனித நல விரும்பியின் அவசியம். சிந்திக்கவும் நேரம் போகாமல் ஹிட்ஸ் வெறியில் எழுதும் ஒரு இணையம் இல்லை. ஒவ்வொரு நேரத்திலும் மக்கள் பிரச்சனைகளை பேசிநிற்கும் ஒரு இணையமே. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

மர்மயோகி said...

அப்துல் கலாமை விடுங்கள்..அமெரிக்காவிடம் இருந்து பிச்சை எடுத்து இந்தியாவுக்கு துரோகம் செய்யும் பெரிய விஞ்ஞானி உதயகுமார் சொல்றத கேளுங்க சார்...

மர்மயோகி said...

அப்துல் கலாமை விடுங்கள்..அமெரிக்காவிடம் இருந்து பிச்சை எடுத்து இந்தியாவுக்கு துரோகம் செய்யும் பெரிய விஞ்ஞானி உதயகுமார் சொல்றத கேளுங்க சார்...