செப்.
23: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி வஉசி
துறைமுகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மூலம் போராட்டக் குழுவினர் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடியில் கடந்த 10-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவ அமைப்பினர் அடுத்த கட்டமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை கடல் வழியாக முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.
போராட்டத்தில் பங்கேற்பதற்காக தூத்துக்குடியில் இருந்து சுமார் 400 விசைப்படகுகளும், திரேஸ்புரம் பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் சனிக்கிழமை காலை 7 மணியளவில் துறைமுகத்தை நோக்கி புறப்பட்டன. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த திருச்செந்தூர், அமலிநகர், புன்னக்காயல், மணப்பாடு, ஆலந்தலை ஆகிய பகுதிகளில் இருந்து பல்லாயிர கணக்கில் படகுகள் வந்து குவிந்தன.
இதுவல்லாது திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை, உவரி, கூடுதாழை, கூட்டபனை, பெரியதாழை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான படகுகளில் வந்த மீனவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இப் போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை நடைபெற்றது. இதனால் தூத்துக்குடி துறைமுகமே முற்றுகை இடப்பட்டது.
மக்கள் போராட்டத்தை தடுக்க துறைமுகத்தின் கடல் பகுதி நுழைவு வாயிலில் கடலோர காவல் படைக்குச் சொந்தமான வீராஸ், அகல்யா பாய், நாட்கி தேவி ஆகிய போர் கப்பல்களும், மத்திய பாதுகாப்புப் படை, கடலோர பாதுகாப்புப் பிரிவு ரோந்து படகுகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. துறைமுக நுழைவுவாயிலில் ராட்சத கயிறு மூலம் படகுகள் உள்ளே செல்ல முடியாதபடி தடை செய்யப்பட்டிருந்தது.
மேலும், துறைமுக சுற்றுப் பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையினர் ஆயுதம் தாங்கிய நிலையில் சுமார் 500 பேர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். கடலோர காவல் படைக்குச் சொந்தமான விமானங்கள் மூலம் போராட்டம் கண்காணிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தையொட்டி, தூத்துக்குடி மாநகரப் பகுதியிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸôர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தூத்துக்குடி துறைமுகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 7 கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இதற்கிடையே திரேஸ்புரம் பகுதியில் சனிக்கிழமை காலை அணு உலைக்கு எதிராகவும், கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் முழக்கமிட்டபடி வந்த பொதுமக்கள் அந்தப் பகுதிகளில் நடப்பட்டிருந்த கட்சிக் கொடிக் கம்பங்களை வெட்டி சாய்த்தனர் . பின்னர் கொடிகளை தீ வைத்து எரித்தனர். மேலும் வஉசி துறைமுக முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் இனிகோ நகரில் இருந்து மீன்பிடி துறைமுகம் வரை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.

4 comments:
Makkal poraattam vellattum. Thanabal.
Indian government don't want to protest our Tamil fisher men's . The Indian nevi and military and police force always against the Tamil Siviliance. By:: Raja.
Thanks for coming Mr.thanabal.
Thanks for coming and comments. Mr.RAJA
Post a Comment