
தமிழக மீனவர்கள் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர். எங்கே மாயமாய் மறைந்து போனது இந்திய ராணுவம், இதையெல்லாம் படமாக எடுப்பார்களா?
இந்திய ராணுவம் ஈழத்த்து பெண்களையும், காஷ்மீரிய பெண்களையும், சத்தீஸ்கர் பழங்குடி பெண்களையும் கற்பழித்து கொன்ற வரலாற்றை படமெடுக்கும் தைரியம் தாணுவுக்கு உண்டா? அதை டைரெக்சன் செய்யும் வல்லமைதான் முருகதாசுக்கு உண்டா? அப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிக்கத்தான் நமது காமடி பீஸ் விஜய் சம்மதிப்பாரா?
நீங்கள் ஹீரோக்கள் ஆகவேண்டும், அரசியலில் நுழைய வேண்டும், கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் உணமைகளை மறைத்து, வரலாறுகளை திரித்து எடுக்கப்படும் படங்களில் கூச்சம் இன்றி நடிப்பீர்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க போறேன் பேர்வழி என்று படங்களில் நடித்து அரசியலுக்கு வந்தார் வெத்து வெட்டு விஜயகாந்து.
ஆக்சன் கிங் அர்ஜூன் இவர் தீவிர ஹிந்துத்துவா ஆதரவாளர். இவர் படங்களில் பெரும்பான்மையில் இசுலாமிய தீவிரவாதிகள் வந்துவிடுவார்கள். அதுசரி இந்த ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா தீவிரவாதிகளை பற்றி ஒருபடமும் எடுக்கப்படவில்லையே. சம்ஜூதா ரயில் குண்டுவெடிப்பு முதல் மலேகன் குடுவேடிப்பு வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான இந்திரேஷ் குமார் மற்றும் உறுப்பினர்கள் கம்பி எண்ணுகிறார்கள்.
உண்மை இப்படி இருக்க இசுலாமிய தீவிரவாதிகள் குண்டுவைப்பதாக படம் எடுக்க இவர்களை தூண்டுவது எது? இதற்க்கு சூத்தரதாரியாக இருந்து செயல்படுபவர்கள் யார்? நடந்து முடிந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இருந்து செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது தெளிவான இச்சூழலில் இதை மறைக்க சித்தாந்த ரீதியான ஒரு யுத்தத்தை RSS நடத்தி வருகின்றது. RSSசின் பின்புலத்தில் செயல்படும் சில கலைத்துறையினர் இது போன்ற படங்களை இயக்கி வருகின்றனர்.
எந்த மதத்தினரும், பாதிக்கப்பட்ட, உரிமைக்காக போராடும் எவரும் தீவிரவாதிகள் இல்லை. தீவிரவாதத்தின் ஆணிவேர் பெரும்பான்மை சிறுபான்மையை அடக்குவதும், ஆட்சியாளர்கள் சொந்த மக்களுக்கே அநீதி செய்வதாலுமே ஏற்ப்படுகின்றது. மற்றபடி துப்பாக்கி ஒரு சாதாரண மசாலா துக்கடா படமே. இதற்காக முசுலிம் நண்பர்கள் கலைதுறையினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது காட்சிகளை நீக்க சொல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவர்களுக்கு இலவச விளம்பரமாக அமையும் என்பதே எனது மேலானா கருத்து.
கடந்த முறை ஏழாம் அறிவை கொடுத்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்த முருகதாஸ் இந்தமுறை துப்பாக்கிக்கு இரையாகி போனார்.
*மலர் விழி*
16 comments:
இதை நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களும் சிந்தித்து அதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும்.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
சிறந்த ஆக்கம். வாழ்த்துக்கள்!
மாலேகான், மாலேகான் என்று ஒரே பாட்டை பாடி ஜல்லி அடிக்கும் அன்பர்களுக்கு ஒரு சின்ன விண்ணப்பம்: ஒரு மாலேகான் ஆனால் குறைந்தது நூறு அந்தப் பக்கம்: பம்பாயில் குறைந்தது பத்து; டில்லியில் இருபது; பெங்களூரில் பத்து; காசியில் மூன்று என்று நீளமான பட்டியல் உள்ளபோது, படம் எடுப்பவர்கள் 'வழக்கமாக' என்று மக்கள் கருதுவதைத்தான் காட்ட முடியும்.
தயவு செய்து உதவாகரை என்ற வார்த்தையை நீக்கவும். நீங்கள் இங்கு இவ்வலவு சுததிரமாக எழுத அவர்களிண் அர்பணிப்புதான் காரனம். எல்லா துறையுலும் சில கெட்டவர்கல் இருப்பார்கள். அதர்காக அந்த துறையை குறை சொல்வது நியாயமா?
சில முஸ்லிம்கள் செய்த தீவிரவாத தாக்குதலை வைத்து அனைத்து முஸ்லிம்கலையும் தீவிரவாதியாக காட்டுவது தவறு என கூறும் நீங்கள் சில ரானுவ வீரர்கள் செய்யும் தவறாள் ரானுவத்தையை குறை கூறுவது மட்டும் எப்ப்டி நீயாயம்?
திருட்டு தனம் செய்பவன்
விபசாரம்
மோசடி செய்பவன்
ஆபாசபடம் பார்பவன், எடுப்பவன்
வட்டிக்கு பனம் தருபவன்
பெண்களை கேலி பொருளாக பார்ப்பவன்
பெற்றோரை மதிக்காதவன்
மனவிக்கு துரோகம் செய்பவன்
கொலைகாரன்
அடுத்தவன் சொத்துக்கு ஆசைபடுபவன்
இது போல யாரும் எங்கள் மததில் இல்லை என சொல்லும் தைரியம் எந்த மததிர்க்காவது உன்டா?
Pls remove word udavakarai
சிறந்த ஆக்கம். வாழ்த்துக்கள்
வணக்கம் மலர். உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!
//சிறந்த ஆக்கம். வாழ்த்துக்கள்!//
சுவனப்பிரியன் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
//தயவு செய்து உதவாகரை என்ற வார்த்தையை நீக்கவும். நீங்கள் இங்கு இவ்வலவு சுததிரமாக எழுத அவர்களிண் அர்பணிப்புதான் காரனம். எல்லா துறையுலும் சில கெட்டவர்கல் இருப்பார்கள். அதர்காக அந்த துறையை குறை சொல்வது நியாயமா? சில முஸ்லிம்கள் செய்த தீவிரவாத தாக்குதலை வைத்து அனைத்து முஸ்லிம்கலையும் தீவிரவாதியாக காட்டுவது தவறு என கூறும் நீங்கள் சில ரானுவ வீரர்கள் செய்யும் தவறாள் ரானுவத்தையை குறை கூறுவது மட்டும் எப்ப்டி நீயாயம்?//
வணக்கம் ராஜா, உதவாக்கரை என்கிற வாசகத்தை போட வேண்டாம் என்றே எண்ணினேன் ஆனால் ஈழத்திலே அமைதி படையாக போயி தமிழ் பெண்களை கற்பழித்து நாசம் செய்த கொடுமையை மறக்க முடியவில்லை. தளபதி கிட்டு மற்றும் போராளிகள் கொல்லப்பட காரணமாக இருந்தது, சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து முள்ளி வாய்க்கால் படுகொலைகளை அரங்கேற்றியது, முதலில் ஒரு தமிழச்சியாக இதை தாங்கி கொள்ள முடியவில்லை. அடுத்து பெண் என்கிற வகையில் சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் பெண்களை நாசம் செய்தது, கஷ்மீர் பெண்களை நாசம் செய்தது இது வெல்லாம் ராணுவத்தில் இருக்கும் ஒரு சிலர் செய்தார்கள் என்று பூசி மொழுக முடியாது. இதற்க்கு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அடி முதல் நுனி வரை மனிதாபிமானம் இல்லாத, நாட்டு பற்று என்கிற பெயரில் எதையும் செய்யும் கூட்டத்தை இந்த அளவுக்கு விமர்சித்தது மிக குறைவே என்று நம்புகிறேன். ஈழவிடுதலை போராளிகள் ஒரு சிங்கள பெண்ணை கற்பழித்தார்கள் என்று வரலாறு பதிய வில்லையே. பாலஸ்தீன விடுதலை போராளிகள் ஒரு யூத பெண்ணை கற்பழித்தார்கள் என்று வரலாறு பதிய வில்லையே தோழரே.
“விஜய் படத்திற்கு விமரிசனமா” ஒரு ஸ்டூடியோ குத்துப்பாட்டு, ஃபாரினில் இரண்டு டூயட், ரம்பக் காமடி, காட்சிக்கொரு டமால்-டுமீல் பஞ்ச் டயலாக் என்று புளித்துப் போன விஜய் படத்துக்கு ஒரு விமர்சனமா? உங்கள் நேரத்துக்கு சளி பிடிக்க.
இந்தியா ராணுவம் ஈழத்திலும், காஷ்மீரிலும், வடகிழக்கிலும் கொன்ற கணக்கு ஏராளமிருக்கையில் அதன் ஆக்கிரமிப்பு, மக்கள் விரோத மனோபாவமே எதார்த்தம். இப்படி எதார்த்தத்தை உண்மையை மாற்றி பொய்யான ஒரு கருத்துருவத்தை ஏற்ப்படுத்துவது கண்டிக்க தக்கது. by: RAJA
மும்பை தொடர் குண்டு வெடிப்பு என்பது மும்பை இந்துதுவா மதவெறி கலவரத்தின் எதிர்வினையே, இந்தியாவில் ஹிந்துத்துவா மதவெறியோ, அதற்க்கு காரணமான அத்வானி, மோடி, தாக்கரே போன்றோர் தண்டிக்கப்படும் நிலையோ இருந்திருந்தால், இத்தகைய குண்டு வெடிப்புகளுக்கு தேவைப்படும் சமூக அடிப்படை காரணங்கள் இருந்திருக்காது.
இதன் அரிச்சுவடி கூடத் தெரியாமல் ஒரு வில்லன் எஃபெக்டுக்காக ஜிகாதி, இசுலாம், நமாஸ், முகமூடி, கழுத்தறுப்பது போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட முசுலீம் வெறுப்பு இந்தியாவின் சினிமா வாழ்க்கையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் இசுலாமிய மக்கள் எவ்வளவு பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
நன்றி : வினை செய் வினவு.
by: AZAD..... NELLAI
கலைபுலி தாணு இவரது படமான “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேனி”ல் ஈழத்தில் அமைதிப்படையின் கொலையை மறைத்து படமெடுத்தார். அதே படத்தில் அமைதிப்படையை வரவேற்கமாட்டேன் என்று சொன்ன கருணாநிதியை குற்றம் சாட்டுவதாக காட்சிகளை அமைத்திருந்தார் என்பது குறிப்பிட தக்கது.
by: AZAD..... NELLAI
துப்பாக்கி படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் முருகதாஸை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தை ஒரு முறையல்ல இரண்டு முறை பார்த்துவிட்டு இயக்குனரை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்
Post a Comment