
மேலும் மற்றைய அணு ஆயுத வல்லரசுகளிடம் ஆயுதம் வாங்குவதவதற்கும், சிங்கள அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைத் தந்து தமிழ் இன அழிப்பு யுத்தத்தை நடத்திய இந்திய அரசே நடைபெற்ற தமிழ் இனக்கொலையின் கூட்டுக் குற்றவாளியாகும்.
குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர், களத்தில் ஆயுதம் ஏந்தாதோர் என அனைத்துத் தமிழர்களையும் சிங்கள அரசு, உலகில் தடைசெய்யப்பட்ட குண்டுகளை வீசி 2008 ஆம் ஆண்டில் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து படுகொலையை நடத்தியபோது அதைத் தடுப்பதற்கோ வெளி உலகத்திற்கு உண்மை கொண்டு வருவதற்கோ, ஐக்கிய நாடுகள் மன்றமோ இந்தியாவோ முன்வரவில்லை.
இலண்டன் சேனல் 4 வெளியிட்ட இசைப்ரியா கொலை செய்தியும், ஈழத்தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாகக் கண்களும் கைகளும் கட்டி இழுத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியும் வெளியிட்டது. இதனால் நெஞ்சை நடுங்க வைக்கும் ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்த உண்மைகள் ஓரளவுக்கு வெளிவந்துள்ளன.
2009 ஆம் ஆண்டு ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சிங்கள அரசைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றிய படுபாதகச் செயலை இந்திய அரசு முன்னின்று நடத்தியது. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்குப் பொருளாதார தடை விதித்த போது சிங்கள அதிபர் ராஜ பக்சேவை இந்தியாவுக்கு இரு முறை அழைத்து வந்து வரவேற்பு கொடுத்து உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவ முயன்றது இந்திய அரசு.
உலகில் ஈழத்தமிழர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களே இல்லையா? அவர்கள் நாதியற்றவர்களா? நானிலத்தில் அவர்களின் அபயக்குரல் எங்கும் கேட்கவில்லையா?
சிந்திக்கவும்: தமிழ் இன அழிப்பு யுத்தத்தை நடத்திய இந்திய அரசுடன் நாம் இணைந்திருக்க வேண்டுமா? என்பதை ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும் . இந்தியா நமது அந்நிய நாடு, எதிரி நாடு என்பதை ஒவ்வொரு தமிழனும் மனதில் நிறுத்த வேண்டிய தருனமிது.
1 comment:
இந்தியா எமக்கு அந்நிய நாடே அதில் என்ன உங்களுக்கு ஐயம்!!!!!!!!!!!!!!!! ஐயா!
Post a Comment