Nov 15: தென், வட மாவட்டங்களிலும், தமிழகம் முழுவதிலும் ஜாதி வெறியாட்டங்கள், சமூக விரோத செயல்கள் அதிகளவு நடந்து வருகின்றன.தலித் மற்றும் தலித் அல்லாதவர்களிடையே மோதலை ஏற்படுத்த சில அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. காதல் திருமணம், கலப்புத் திருமணம் செய்வது கூடாது என சில அரசியல் கட்சிகள் மேடையில் பகிரங்காமாக பேசி வருகின்றன.
இந்நிலையில் தென்மாவட்டங்களில் நடந்த ஜாதி வெறியாட்டங்களை கண்டித்தும் முழுமையாக அமைதியை நிலைநாட்ட வலியுறுத்த கோரியும் SDPI கட்சியின் சார்பாக சென்னையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டமும் பொது கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தோல். திருமாவளவன், தோழர் தியாகு, மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

1 comment:
நல்ல விசயங்களை யார் செய்தாலும் நமது ஆதரவு உண்டு. ...................... தமிழன்.
Post a Comment