COVID-19 நோய்க்கு சிகிச்சை அளிக்க 110 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளித்து கடந்த 03.04.2020 தேதியிட்டு தமிழக அரசு அரசாணை (G.O.Ms.174) வெளியிட்டிருந்தது
நாடு முழுவதும் பேரிடராக பரவிவரும் கொரானா நோய்த் தொற்றினை தடுத்து மக்களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்காமல் தனியார் மருத்துவமனைகள் கொரானா நோயினை வைத்து கொள்ளயடிப்பதற்கே மேற்படி அரசாணை வழிவகுக்கும்.
அதை போல கோரானா காலத்தில் மத்திய மற்றும் மாநிலங்களை ஆளும் அதிமுக மற்றும் பிஜேபி அரசுகள் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக போர்வை வாங்கியதாக ரூ 750, பிளாஸ்டிக் வாலி ரூ.400, பிளாஸ்டிக் மக் ரூ.142 என ஊரடங்கு காலத்தில் செய்யும் கொள்ளை அனைத்தையும் கொரோனா சிகிச்சை பெயரில் எழுதிவருகின்றன. எந்த ஊரில் பிளாஸ்டிக் வாலி 400 ரூபாய். கொள்ளையோ கொள்ளை.
அதுபோல் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பும் மக்கள் கொரன்டீன் இல் இருக்காமல் நேரே ஊருக்கு செல்ல அனுமதி வாங்கி கொடுக்க ஆள் ஒன்றுக்கு 1 இலட்சம் முதல் 2 லட்சம் வரை வாங்கி கொண்டு பாஸ் எடுத்து கொடுக்கும் ஏஜெண்டுகள் என்று மக்களை கொள்ளையடிக்கிறார்கள். இதுவெல்லாம் ஒரு உதாரணம்தான். கொரானா தடுப்பு உபகரணங்கள் டெஸ்ட் கிட்ஸ் முதல் மாஸ்க் வரை பல்வேறு கொள்ளைகள் அரங்கேறி இருக்கிறது. கேடுகெட்ட ஈன பிறவிகள் இந்த பேரிடர் காலங்களிலும் மக்களை சுரண்டி கொள்ளையடிக்கும் கொலைகார பாவிகள்.
No comments:
Post a Comment