May 14, 2011

உமக்கு ஒய்வு தரவில்லை!! ஒழித்துக்கட்டி இருக்கிறார்கள்!!

14 May, தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தி.மு.க. கூட்டணி குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

தேர்தல் முடிவு குறித்து கலைஞர், ‘’தமிழ்நாட்டு மக்கள் எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் இந்த வாய்ச்சவடால் தீரவில்லையா கலைஞர் அவர்களே "இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடல்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

இறக்கும் முன்னராவது இறவாபெயர் வாங்கி இருக்கலாம் ஆனால் இறக்கும் காலத்தில் நீங்கா நீசப்பெயர் வாங்கிச்செல்லும் இழிநிலை ஏன்தான் உமக்கோ?

சிறு பான்மைச்சமுதாயம் உம்மிடம், "எங்களுக்கு இட ஒதுக்கீடு தாருங்கள் என கேட்ட பொழுது என் நெஞ்சத்தில் இடம் தந்திருக்கிறேனே அதை விடவா மேலதிகம் வேண்டும்" என்று கேட்டபொழுது அதையும் சிலாகித்து பேசிய சில முஸ்லிம் பெயர் தாங்கி மந்தைகளை பார்த்திருக்கிறேன்.

ஆனால் தமிழ் நாட்டுக்குத் தேவை ஒரு கக்கன் அல்லது காமராஜர் அல்லது எம். ஜி. ஆர். அல்லது ஒரு நல்லகண்ணுவேயல்லாது உம்மைப் போன்ற பேராசை பிசாசோ அல்லது ஜெயலலிதா போன்ற மத மாச்சர்யங்களுக்கு கட்டுண்ட தலைவியோ அல்ல.

ஆனால் உம்மை போன்று சக்கர நாற்காலியில் தள்ளிச்செல்லும் காலம் வரை காசு சேர்க்கும் முயற்சியில் யாரும் இறங்க மாட்டார் என்று நம்பிக்கை கொள்ளும் பல தமிழர்களில் நானும் ஒருவன். காலம் பதில் சொல்லும்

8 comments:

மதுரை சரவணன் said...

சபாஷ் நல்ல கருத்து.. வாழ்த்துக்கள்

Anonymous said...

good thought.. ..sms..

Anonymous said...

// "எங்களுக்கு இட ஒதுக்கீடு தாருங்கள் என கேட்ட பொழுது என் நெஞ்சத்தில் இடம் தந்திருக்கிறேனே அதை விடவா மேலதிகம் வேண்டும்" என்று கேட்டபொழுது

//

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது இவர்தானே? இந்த ஒதுக்கீட்டிற்கு பிறகுதானே இஸ்லாமிய மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் சேர முடிகிறது? முன்பெல்லாம் போலிஸ் ஸ்டேஷனில் மருந்துக்கூட ஒரு இஸ்லாமியர் போலீஸ்காரராக இருக்கமாட்டார். குறிவைத்து இண்டர்வியூவில் ஒழித்துக்கட்டுவார்கள். ஆனால் இப்போது 100 காவலர்களை எடுத்தால் அதில் 3 பேர் இஸ்லாமியர். முஸ்லீம்கள் இந்த நாட்டிற்கு,இனத்திற்கு, தங்களுக்கு வாய்ப்பளித்த தலைவனுக்கு என யாருக்கும்,எப்போதும் நன்றியோடு இருந்ததில்லை. கேடுகெட்ட சமுதாயம்.

Anonymous said...

முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு செய்த தியாகத்தை விட எந்த கொம்பனும் தியாகம் செய்திருக்க முடியாது. சுதந்திர போராட்டத்தில் தங்களது சதவீததிற்கு அதிகமாக வெள்ளையர்களை எதிர்த்தவர்கள், ஆங்கிலேயர் மீது கொண்ட வெறுப்பால் ஆங்கிலம் கற்பது ஹராம் ( தடுக்கப்பட்ட ஒன்று) என்று மார்க்க தீர்ப்பு கொடுத்து ஆங்கில மொழி அறிவு இல்லாமல் ஒரு பெரிய பின்னடைவுக்கு உள்ளானவர்கள்.

இந்த பார்பன வந்தேறி ஹிந்துத்துவா கூட்டம் ஆங்கிலம் கற்றுக்கொண்டு வெள்ளையனின் அடிமையாக சுதந்திர போராட்ட வீரர்களை காட்டி கொடுத்து உயர் பதவிகளை அனுபவித்தவர்கள். நேதாஜியோடு, காந்தியோடு இணைந்து சுதந்திர போராட்டத்தை நடத்தியவர்கள். வரலாறை மறைக்க பார்க்காதே பெயரில்லா நண்பா! நன்றியோடு நடப்பதை எப்படி என்று முஸ்லிம்களுக்கு தெரியும். நாங்கள் ஒன்றும் உன்னிடம் யாசகம் கேட்கவில்லை. இடஒதுக்கீடு என்பது முஸ்லிம்களின் உரிமை. ஏதோ இலவசமாக கொடுத்தது போல் அலட்டி கொள்ள வேண்டாம். அதுவும் அவர் கொடுத்தா இடஒதுக்கீடு படி முஸ்லீம்களுக்கு வாய்புகள் கொடுக்கப்பட்டதா என்று வெள்ளை அறிக்கை கொடுக்க சொல்லி எதிர் கட்சிகள் கேட்டபோது ஏன் மவுனம் சாதித்தார். பதில் இல்லை அவரிடம் அதான்..

Anonymous said...

கருணாநிதிதான் முஸ்லிம்களுக்கு நன்றியோடு நடந்து கொள்ள வேண்டும். இவர் எம்ஜிஆர் அவர்களை எதிர்த்து 15 வருடம் வனவாசம் போகி இருந்தபோது அவரது கட்சியே இல்லாமல் போகி இருக்கும். அந்த நேரத்தில் தமிழக முஸ்லிம்களின் வாக்கு இவருக்கு மொத்தமாக கிடைத்ததனால் இவர் கொஞ்ச சீட்டாவது எடுத்து எதிர் கட்சி என்று அமர்ந்திருந்தார். எம்ஜிஆர் முதல் அமைச்சராக இருந்த போது தூத்து குடி மாவட்டம் காயல்பட்டினம் என்ற முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஒரு ஊருக்கு வந்தார், இந்த கருணாநிதி மீது முஸ்லிம் மக்களுக்கு இருந்த மோகம் எம்ஜிஆர் மீது செருப்பை தூக்கி அடிக்க வைத்தது. அந்த அளவுக்கு தமிழக முஸ்லிம் மக்களை பொய் வார்த்தைகளை சொல்லி ஏமாற்றி வந்தார்.

போன தேர்தலில் இவர்களோடு கூட்டணி வைத்த தமுமுக அமைப்பை அது துவங்கப்பட்ட போது அவர்கள் ஜனநாயக வழியில் நடத்திய போராட்டத்தை பார்த்து முஸ்லிம் தீவிரவாதிகள் என்று சொல்பிரயோகித்தவர் இவர். கோவையில் காவலர் செல்வராஜ் என்பவர் கொல்லப்பட்டதற்கு பதிலாக ஹிந்துதுவாவும் போலீஸ்ஸும் சேர்ந்து ௧௯ முஸ்லிம்களை சுட்டும் எரித்தும் கொன்றனர். மருத்துவ மனைகளில் போலீஸ் குண்டை பட்டு சிகிச்சை பெற்ற போனவர்களை அங்கு வைத்து கொன்றார்கள் கொடியவர்கள்.

காவலர் செல்வராஜை கொன்றவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் ஒரு சமூகத்தையே ஒழிக்க நடந்த திட்டமிட்ட சதி கோவை இன அழிப்பு. முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாட பட்டது. சோபா துணிக்கடை முதல் முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்கள் சூறையாட பட்டன, பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டனர். மூன்று நாட்கள் கோவை நகரம் தமிழக அரசின் கட்டு பாட்டில் இல்லை. இதுதான் கருணாநிதி முஸ்லிம்களுக்கு கொடுத்த வெகுமதி. மேலும் இந்த கலவரங்களை நடத்திய அதிகாரிகளை மீது கருணாநிதி நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்தார். மேலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவித்தொகை அறிவிக்கவோ, அது சம்மந்த பட்ட விசயங்களை விசாரிக்க கமிசன்கள் அமைக்கவோ செய்யாததின் விலைவா விரக்த்தி அடைந்த ஒரு சிலர் கோவை குண்டு வெடிப்பு என்ற பயங்கரவாத செயலை நடத்தினார்கள். இதற்க்கு கருணாநிதி தகுந்த நடவடிக்கை எடுக்காததே முக்கிய காரணம். கருணாநிதி ஆட்ச்சி காலத்தில்தான் முஸ்லிம்கள் பெரும் அளவில் துன்பங்களை சந்தித்தனர். ஜெயலிதா ஹிந்துத்துவா ஆதரவு சிந்தனை இருந்தாலும் கருணாநிதிக்கு தேவலை என்றே தோன்றுகிறது.

Anonymous said...

\\என யாருக்கும்,எப்போதும் நன்றியோடு இருந்ததில்லை. கேடுகெட்ட சமுதாயம்.\\\\

ஹாஹாஹா... நல்ல காமெடிதான்.
அதுதானே அவன் வட்டிகுட்டி எல்லாம் சேர்த்து உன்னிடமே கொள்ளையடித்துவிட்டான். என்ன? புரியலியா? ஸ்பெக்ரம் இல் உனது வரிப்பணமும் உள்ளடக்கம்தானே!
உன்போன்றவர்கள் இருப்பதற்றான் அவனால் இத்தனை இலகுவாக இந்தப்பெரியதொகையைக் கொள்ளையடிக்கமுடிந்தது.நீ இப்படியே சிந்திக்காமலே தொடர்ந்தும் இருப்பாயானால், நாளை உனது கோவணமும் உனக்குச்சொந்தமில்லை.

SURYAJEEVA said...

MGR NALLA THALAIVARAA... YAARUKKU?
YOU TOO...

Anonymous said...

http://thathachariyar.blogspot.com/