
கொடுத்த பொருட்கள் எல்லாமே சில காலங்களுக்குள் பழுதாகக்கூடியவை. பழுதாகிய பொருட்களுடன் மாரடிக்கும்பொழுது மக்களுக்கு கொடுத்தவரிடமே கோபம் வரும்.
இந்த பழுதாகும் பொருட்களை இனாமாக கொடுத்து மக்களை தாழ்ந்த அரசியலுக்கு இட்டுச்செல்லும் கருனாநிதியிசத்தை எந்த அரசியல் கட்சினரும் பின்பற்றாதீர்கள். மாறாக,
எல்லாருக்கும் கல்வி, எல்லாருக்கும் வேலை வாய்ப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மீண்டும் விவசாயப்புரட்சி என்று நாட்டை மாற்ற பாடுபடுங்கள்.
செல்வி ஜெயலலிதா கொண்டு வந்த மழை நீர் சேகரிப்பை மீண்டும் முறைப்படி சரியான கண்காணிப்பின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தல், மாசு கட்டுப்பாட்டில் மிக அதிக கவனம் செலுத்துதல் ஆகியவை மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவைகள்.
மேலும் மத நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை வழங்குதல், ஊர்வலம் என்ற பெயராலும், விழா என்ற பெயராலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு முட்டாள் தனத்திற்கும் வழி விடாது நாடு முன்னேற எல்லா மக்களும் அரசுக்கு உதவி கரமாய் இருந்து செயல்படுதல் வேண்டும்.
கடந்த அரசை, அதனோடு கூட்டணி அமைத்தவர்களை பழி வாங்கும் நோக்கம் இல்லாது கவனத்தை நெறிபடுத்தி மக்கள் வாழ வகைசெய்ய வேண்டும். தன்னைச்சுற்றி இருப்பவரின் நோக்கம் பணமா? பதவியா? என்று நோக்கி ஊழல் இல்லாத அரசு அமையவேண்டும். இப்படி செயல்பட்டால் நாடு நலம் பல பெரும். தமிழக மக்களின் கனவு நினைவாகுமா?
No comments:
Post a Comment