Jul 19, 2011

இந்தியா உடைந்து சுக்கு நூறாவாதை யாராலும் தடுக்க முடியாது!

JULY 20, பெங்களூர்: கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க தலைமையிலான அரசு பசுவதை தடைச்சட்டம், பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையை படிப்பதை கட்டாயமாக்குதல் போன்ற ஹிந்துத்துவ பயங்கரவாத அஜண்டாக்களை அமுல்படுத்தி வருகிறது. இதற்கு பல தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் கர்நாடாகாவை கற்காலத்திற்கு அழைத்து செல்லும் பா.ஜ.கவின் கல்வி அமைச்சர் பகவத் கீதையை படிக்க விரும்பாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என வெறித்தனமாக பேசியுள்ளார். கர்நாடகா மாநிலம் கோலாரி நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு பேசிய கர்நாடகா கல்வி அமைச்சர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, பள்ளிகளில் பகவத் கீதையைப் படிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதை சிலர் எதிர்க்கின்றனர்.

அப்படிப்பட்டவர்கள் பேசாமல் நாட்டை விட்டு வெளியேறி விடலாம்’ என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமைச்சரின் பேச்சைக் கண்டித்து சமதா சைனிக் தள மாணவர் சங்கம் காகேரியின் கொடும்பாவியைக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது.

அமைப்பின் மாநிலத் தலைவர் கோவிந்தய்யா இதுகுறித்துக் கூறுகையில், கர்நாடக அரசு அனைத்துப் பள்ளிகளையும் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். முகாம்களாக மாற்ற முயற்சிக்கிறது. எங்களுக்கு பகவத் கீதையின் அத்தியாயங்கள் எதையும் கற்றுத் தர வேண்டாம். அதற்குப் பதிலாக அரசியல் சாசனத்தின் அத்தியாயங்களை கற்றுக் கொடுங்கள் என்றார்.

கர்நாடக தலித் கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் மாரிசாமி கூறுகையில், நூலகங்கள், சிறந்த உணவு, தூய்மை ஆகியவற்றை பள்ளிகளுக்குத் தர வேண்டும். அதை விட்டு விட்டு பகவத் கீதையை கற்றுக் கொடுப்பதால் என்ன லாபம் என்று வினவினார்.

இதேபோல பல்வேறு கட்சியினரும் காகேரியின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா கூறுகையில், காகேரி மீது முதல்வர் எதியூரப்பா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பேச்சு நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானதாகும் என்றார்.

சிந்திக்கவும்: இந்தியா ஒரு மதசார்ப்பற்ற நாடு. இந்த நாட்டில் மற்றைய மத மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது, அவர்களுக்கு எதிரான திட்டமிட்டு கலவரங்களை ஏற்ப்படுத்தி அவர்களை பயமுறுத்தி மீண்டும் ஹிந்து மதத்திற்கு கொண்டு வருவது அல்லது நாட்டை விட்டே துரத்துவது, இல்லையேல் அவர்களை கலவரங்கள் மூலம் அழித்தொழிப்பது இதுவே ஹிந்துதுவாவின் திட்டமாகும்.

இதை தடுத்து நிறுத்துவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். இல்லையேல் இந்தியா சிதறுண்டு போவதை யாராலும் தடுக்க முடியாது. இலங்கை தமிழர்கள் மீது சிங்கள பேரினவாதம் ஏற்ப்படுத்திய அடக்கு முறையே 35 வருட ஆயுத போராட்டம். அது இன்றளவும் முடிவுக்கு வரவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கை சிறிய நாடாக இருந்ததால் இந்தியா, சீனா போன்ற பெரும் வல்லரசுகள் உதவிதால் பெரிய பொருளாதார பிரச்சனைகள் இல்லாமல் தப்பியது. 120 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் ஒரு உள்நாட்டு யூத்தம் நடந்தால் அதை எண்ணி பார்க்கவே பயமாக இருக்கிறது. இதை என்ன விலை கொடுத்தாவது தடுத்து நிறுத்த வேண்டும்.

இல்லையேல் இந்தியா சுக்குநூறாக சிதறி போவதை யாராலும் தடுக்க முடியாது. இலங்கை பிரச்சனையில் இந்தியா தமிழர்களை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த கொடுமைக்குதான் வைகோ சொன்னார் இந்தியா சுக்குநூராவதை யாராலும் தடுக்க முடியாது என்று. இந்தியாவில் வாழும் முஸ்லிம், மற்றும் கிருஸ்தவ, சீக்கிய, புத்த, பழங்குடி, தலித் போன்ற மக்கள் கிளர்ந்தெழுந்தால் திரும்பவும் ஒரு மன்னர் ஆட்சிகாலத்தில் இருந்த இந்தியா மாதிரி போய்விடும் என்பதே உண்மை. இந்திய அரசு இதை புரிந்து கொண்டு பாசிச ஹிந்து பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா?  
-நட்புடன் மலர் விழி-

14 comments:

Anonymous said...

it very nice article. i like tho.

Anonymous said...

its tru, every think u say tru. we have to think about.

இந்து மதம் எங்கே போகிறது? said...

சுட்டிகளை சொடுக்கி படித்து
சிந்திப்போமா?


>>>> இந்துமதம் இந்திய மதமா? இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்


>>> ஒ பிராம்மணரல்லாத இந்துகளே, இனியாவது தூக்கத்திலிருந்து, விழித்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் கடவுளுக்கு தீட்டானவர்களா? காந்திக்கே தீட்டு க‌ழித்த‌வ‌ர். உலகம் கட‌வுளுக்கு கட்டுப்பட்டது. கடவுள்கள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். கடவுள்களும் மந்திரங்களும் பிராமணாளுக்கு கட்டுபட்டவை. பிராமணர்களே கடவுள்.

>>>> இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7.b.ஆபாசமே ஆயுதமா?.ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான்.இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.

>>>> பகுதி 1. இந்து மதம் எங்கிருந்து வந்தது?


.

Anonymous said...

இந்தியாவை உடைய விடக்கூடாது. முழுசாக அப்படியே பாதுகாப்போம்.
அதனை அப்படியே முஸ்லீம் நாடாக மாற்றுவோம் இதுவே அல்லாவின் விருப்பம்
அல்லாவே எல்லாம் அறிந்தவன்
மாஷா அல்லா!

புதிய பாமரன் said...

காட்டுமிராண்டிகளின் கையில்
அகண்ட பாரதம்
அகப்பட்டுக்கொண்டு,
கருத்தில் காவி பூசப்பட்டு,
முகத்தில்
கரி அப்பிக்கொள்வதைவிட,
அது
சுக்கு நூறாகி,
சுதந்திரமாய் சுவாசிப்பதே மேல்.

saarvaakan said...

வணக்கம்
இபோது என்ன நடந்து விட்டது? கர்நாடகாவில் ஒரு அமைச்சர் ஏதோ சொல்லி விட்டார்.அதற்கு அவ்ருக்கும் கண்டனம் தெரிவிக்கலாம்.தேவையற்ற கருத்துகள்.என்ன விரும்புகிறீர்கள் என்பது தெரிந்தது நன்று.பதிவுக்கு கடும் கண்டனம்

PUTHIYATHENRAL said...

இந்தியா உடைந்து போக வேண்டும் என்று இந்த பதிவை எழுதவில்லை. வரலாற்று அடிப்படையில் ஒரு சமூகம் ஒடுக்கப்படும் போது இதுதான் நடக்கும் என்பதையே நாம் சுட்டி காட்டினோம்.

PUTHIYATHENRAL said...

நன்றி தாத்தாச்சாரியார் அவர்களே, உங்கள் பதிவுகள் இணயதளம் சிறந்த சமூக சேவை செய்து வருகிறது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

PUTHIYATHENRAL said...

கருத்து சொன்ன அனைவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

Anonymous said...

இப்ப என்ன இந்தியா ஒண்ணா இருக்கா.. பக்கத்து ஊர் காரன் தண்ணி தர மறுக்கிறான்..
பாகிஸ்தான்ல இந்துக்கல அடிச்சி வெரட்டுறான் அங்க போய் உங்க வீரத்த காட்டுங்களேன் ??
இவிங்கல்லாம் ஏதோ பாகிஸ்தான் சொந்த நாடு போலவும் இந்தியாவ முன்னேத்த வந்த மாதிரியும் பேசறானுங்க!!
பொது சிவில் சட்டம் வந்தாதான் உருப்படும் ஆஸ்திரேலியா ல ஆப்பு அடிக்கிறான் படுதா போட்டாலே

Anonymous said...

இந்திய முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் கொடுத்தாச்சா அப்படி யார் சொன்னது. இந்திய முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டதல்ல பாகிஸ்தான். இந்திய முஸ்லிம்கள் உங்களோடு சேர்ந்து வாழ விருப்பம் உங்களுக்கு இல்லை என்றால் இப்போது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கு தகுந்தால் போல் அவர்கள் வாழ சில, பல மாநிலங்களை ஒதுக்க வேண்டி வரும். உங்களுக்கு இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது என்ன நடந்தது என்ற வரலாறு தெரியவில்லை அதனால் இப்படி பேசுகிறீர்கள். இந்தியா பாகிஸ்தான் பிரியும் போது முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாநிலங்களை பிரித்து பாகிஸ்தான் என்று ஒரு நாட்டை அதுவும் முஸ்லிம் நாடாகவே அது அறிவிக்கப்பட்டு பிரிக்கப்பட்டது. அப்போது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை அவர்களோடு சேர்த்து அனுப்புவாதாக இருந்தால் இன்னும் நிறைய மாநிலங்களை தாரைவார்த்து கொடுக்க நேர்ந்திருக்கும். அது போல் இந்தியாவில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும், சீக்கியர்களுக்கும் இப்படி கூறு போட்டால் மீதம் வருவது என்ன என்று உங்களுக்கே தெரியும் அதனால்தான் காந்தி சாதுரியமாக இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு இதில் வாழும் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய, புத்த மதத்தினர் அப்படியே வாழலாம் அவர்கள் எல்லோருக்கும் சம உரிமை உண்டு என்று சொல்லி எல்லோரையும் இங்கே தங்கவைத்து இப்பொது வரைபடத்தில் பார்க்கும் ஒரு பெரிய இந்தியாவை உண்டாக்கி கொண்டார் காந்தி. மற்றபடி நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை வரலாறு தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள். அன்று பாகிஸ்தானுக்கு கொடுத்தது இந்தியாவின் ஒருசில மாநிலங்கள்தான். இன்று இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 30 கோடியை தாண்டும் அது வல்லாமல் சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப், அது வல்லாமல் கிறிஸ்தவர்கள் குறைந்தது ௧௮ கோடியை தாண்டும் இப்படி கணக்கு போட்டு பிரித்து கொடுத்து விட்டு ஹிந்து ராஷ்டிரம் அமைத்து கொள்ளுங்கள் யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களில் உள்ள வர்ணாசிரம ஏற்றதாழ்வுகள் ஒழிய போது சிவில் சட்டம் கொண்டு வாருங்கள். மற்ற படி உங்கள் போது சிவில் சட்டத்தை நாங்கள் பின்பற்ற முடியாது புரிந்து கொள்ளுங்கள். அன்புடன் - அப்துல் ரஹ்மான்.

PUTHIYATHENRAL said...

அன்புள்ள வாசகர்களே வருகைக்கும், கருத்து சொன்னதற்கும் மிக்க நன்றி! தயவு செய்து நளினமான முறையில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நாம் அனைவரும் சகோதர, சகோதரிகளே. எல்லோரும் ஓர்தாய் மக்களே என்பதை புரிந்து கோபங்களை விட்டு நளினமாக கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்கள் எங்களுடைய பார்வைக்கு வராது. உங்கள் மீது உள்ள நம்பிக்கையில் நீங்கள் கருத்திட்டதும் வெளியாகும் விதத்தில் உங்களின் கருத்துக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் புண்படுத்தாமல் செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி வணக்கம். அன்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

Anonymous said...

sss

Anonymous said...

naam indiyargal verum matha sandaiyal naam adaya povathu ondrum illai islam,hindu,christuvam nam vaaalkai murai athu arokyamana vivatamahathan irukka vendum