Jul 19, 2011

மூக்குத்தி அணிந்த இந்து பெண்ணுக்கு பள்ளியில் அனுமதி மறுப்பு!

நெவாடா:  சுவீடன் நாட்டு பள்ளி ஒன்றில், இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மூக்குத்தி அணிந்து சென்றதால், அனுமதி வழங்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சுவீடன் நாட்டின் மத்தியில், ஓரிபுரோ என்ற இடத்தில், பொது நிதியில் இயங்கும் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் சேருவதற்காக, இந்து மதத்தைச் சேர்ந்த 13 வயது இளம்பெண் சென்றார். இவர் மூக்குத்தி அணிந்து சென்றதால், பள்ளியில் சேர்க்க அனுமதி வழங்கவில்லை.

வீட்டிற்குச் சென்று மூக்குத்தியை கழற்றி வைத்து விட்டு வந்தால் தான் அனுமதி வழங்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இப்பெண்ணின் தாய், பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளார்.

சிந்திக்கவும்: "மூக்கு குத்திக் கொள்வது, மூக்குத்தி அணிவது இந்தியாவைச் சேர்ந்த பெண்களின் பாரம்பரிய கலாச்சாரம். மேற்க்கத்திய கலாச்சார பெண்கள் தொப்புளில், பெண்களின் மர்ம உறுப்புகளில் மூக்கு குத்துவது போல் குத்தி அணிகலங்கள் அணிகிறார்கள். இதை எல்லாம் வரவேற்கும் இவர்கள் மூக்குத்தி அணிகலன்கள் அணிவாதால் அவர்களுக்கு என்ன கேடு வந்ததோ.

எனவே, அந்நாட்டின் சட்டத்தில், இதற்கு திருத்தம் கொண்டு வரவேண்டும்'. ஒரு காலச்சாரத்தை வெறுப்பதோ அதை தடை செய்வதோ வேறு கலாசாரத்தை சார்ந்தவர்களுக்கு உரிமை இல்லை. இது போல்தான் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு மேற்கத்திய நாடுகளில் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

drogba said...

கோவிலுக்கு செருப்பு போட்டுக்கொண்டு போக முடியாது. chrurchக்கு போக முடியும். நான் churchக்கு செருப்பு போட்டுத்தானே போகிறேன் ஆகவே கோயிலுக்கு செருப்போடு போகவா? அவரவர் கலாசாரத்தை மதியுங்கள். பர்தா போடனுமா முஸ்லிம் பாடசாலைக்கு போங்கள். மூக்குத்தி போடனுமா அனுமதிக்கப்பட்ட பாடசாலைக்கு போங்கள். உங்களுக்காக மற்றவர்கள் மாறவேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்?