கர்நாடகா மாநில அரசு சார்பில் முதன் முறையாக 10/11/2015 ம் தேதி மைசூர் வேங்கை திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது
1782ஆண்டு டிசம்பர் 29 தேதி முதல் 1799 மே 4-ஆம் தேதி வரை மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்ட குறுநில மன்னர் திப்பு சுல்தான். ஆவார். மைசூர் வேங்கை என்று அழைக்கப்படும் இவர் ஆங்கிலேயர்க்கு எதிராக 4 போர்களை நடத்தியுள்ளார்.
அந்த நேரத்தில் வெள்ளையர்கள் துப்பாக்கிகளையும், பிரங்கிகளையும் கொண்டே போரிட்டனர். அவர்களுக்கு ஏவுகணைகள் பற்றி ஒன்றும் தெரியாதிருந்தது.ஏவுகணைகள் மூலம் வெள்ளையர்களை படுதோல்வி அடைய செய்தார் திப்பு சுல்தான். இவர்தான் ஏவுகணை தொழில் நுர்ப்பத்தை முதன் முதலில் உலகுக்கு தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரங்கப்பட்டணாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்திய திப்பு சுல்தான், ஆங்கிலேயர்களுடன் நடத்திய நான்காம் போரில் சாதாரண படை வீரனை போல களத்தில் நின்று சண்டையிட்டு மாண்டு போனார். இந்நிலையில் அனைத்து மக்களின் கோரிக்கையை ஏற்று வெள்ளையர்களுக்கு எதிராக போரிட்ட சுதந்திர போராட்ட வீரர் திப்பு சுல்தான் பிறந்த நாளை 2015 ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாட கர்நாடக மாநில ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்தது.
இந்நிலையில் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பாஜகவினர் போராட்டம் நடத்தினர். குடகு மாவட்டத்தில் ஊர்வலம் சென்ற பாஜகவினர் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து போராட்டம் நடத்த முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கண்டனம்: திப்பு சுல்தானின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும் என்று முன்னாள் பிரதமர் தேவகௌடா தெரிவித்தார்.
சிந்திக்கவும்: தேச தந்தை மகாத்மா காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சார்ந்த கோட்சே என்பவனுக்கு பாராளுமன்றத்திலே சிலை, வெள்ளையர்களுக்கு அடிபணியாமல் இந்திய சுதந்திரத்திற்க்காக போர் புரிந்து உயிர் நீத்த மாவீரன் திப்பு சுல்தானின் பிறந்த நாளை கொண்டாட இந்து முன்னணி ராமகோபால ஐயர் முதல் ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா ஹிந்துத்துவா கும்பல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்து இவர்களின் உண்மையான சுயரூபம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திப்பு சுல்தான் எல்லா மதத்தவர்களையும் சமமாக நடத்திய ஒரு மாமன்னர். குறிப்பாக அவர் ஹிந்துமக்களுக்கு பல கோவில்களை கட்ட நிலங்களை தானமாக வழங்கியவர். மதுரை ஆதினம் மடத்துக்கும் அவர் தானங்கள் செய்துள்ளார். அப்படிபட்ட ஒரு சிறந்த மன்னரை கூட அவர் முஸ்லிம் என்கிற காரணத்துக்காக அவரை நினவு கூற எதிர்ப்பு தெரிவிப்பது சிறுபான்மை மக்களுக்கு எதிரான கொடிய வெறுப்பு பிரச்சாரம் ஆகும். இவர்களது வெறுப்பு அரசியலுக்கு பிகாரில் கிடைத்த செருப்படி பற்றாது போலிருக்கிறது.
*மலர் விழி*
No comments:
Post a Comment