
மனைவி சங்கீதா(29), தனியார் நிறுவன தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு சமையலறையில் சங்கீதா, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
அவரை தர்மராஜ் காப்பாற்ற முயன்றார், இருவரும் படுகாயமடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் சங்கீதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். முன்னதாக அவர் கோவை கிழக்கு போலீசாரிடம் அளித்த மரண வாக்குமூலம்:
நானும், கணவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்தோம், இருவரும் வேலைக்கு செல்கிறோம், கடின உழைப்பாளிகள்.
கணவர் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவர். அவரது சம்பளத்தை அப்படியே என்னிடம் கொடுத்து விடுவார்.
இருவரின் வருமானத்தை கொண்டு மகன் தர்ஷனை உப்பிலிபாளையத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி படிக்க வைத்தோம்.
எங்கள் வருமானத்தின் பெரும்பகுதி பள்ளிக்கட்டணத்துக்கே சென்று விடுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு அதே பள்ளியில் மகன் முதல் வகுப்பு செல்கிறான்.
ரூ.12 ஆயிரம் கட்டணம் செலுத்துமாறு கூறினர். சேமித்த பணத்தில் ரூ.5 ஆயிரம் செலுத்திவிட்டோம். மீதி தொகையை செலுத்த முடியவில்லை.
பணத்தைக் கட்ட வழி தெரியவில்லை. இதனால் தீக்குளித்தேன்’’ என்று தெரிவித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சிந்திக்கவும்: பாரதி உயிரோடு இருந்திருந்தால் இந்த கொடுமைகளை பார்த்து, தனி ஒரு மாணவனுக்கு கல்வி இல்லை என்றால்? இந்தியாவையே அழித்திடுவேன் என்று பாரதி பாடி இருப்பான்.
நெஞ்சு பொறுக்கதில்லையே இந்த நிலை கெட்ட அரசுகளை நினைக்கும் போது!! அமெரிக்காவை போல் ஒவ்வொரு மாணவனுக்கும் அடிப்படை கல்வி இலவசமாக கொடுக்கப்படவேண்டும்.
அமெரிக்க பள்ளிகளில் மேல்நிலை கல்வி வரை இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதுபோல் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு தரமான உணவுகள், புத்தகம் மற்ற வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது.
இந்த தனியார் பள்ளிகள் வாங்கும் அநியாய கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும். இல்லையேல் இந்த பள்ளிகள் தடை செய்யப்பட்டு கல்வி அரசுடமை ஆக்கப்பட வேண்டும்.
அப்படி இல்லையேல் ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் குறைந்தது ஐம்பது சதவீதமாவது ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க படவேண்டும்.
No comments:
Post a Comment