May 11, 2016

ஊழல் நோய் கிருமிக்கா உங்கள் ஓட்டா ?

கருணாநிதி: அன்று மஞ்ச பையோடு சென்னைக்கு வந்து, இன்று ஆசியாவின் 10 பணக்காரர்களுள் ஒருவர். இதத்தனையும் யார் பணம்? தமிழக மக்களின் வளம், பணம்.

சுதந்திரத்திற்கு பின் தமிழக அரசியல் வரலாற்றில் ஊழல் என்பதை முதலில் அறிமுகப்படுத்தியதே இந்த கருணாநிதிதான். சர்க்காரியா கமிசனால் விஞ்சான முறையில் ஊழல் செய்பவர் என்று போற்றப்பட்டவர்.

ஊழலின் ஊற்றுக்கண், இவரை பார்த்துதான் மற்ற அரசியல் கட்சிகள் ஊழலை கற்றுக்கொண்டனர். தமிழ்நாட்டில் கயமை, அசிங்கம், அழுக்கு, இரட்டை நாக்கு, சுயநலம், துரோகம் அத்தனையும் நிறைந்த ஒரு கேவலமான அரசியல் நோய்தான் கருணாநிதி.

இந்த நோய் தமிழக அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக பரவி, இன்று ஊழலே தமிழகம் என்கிற நிலைக்கு வந்து விட்டது. இந்த ஊழல் நோய் கிருமிகளின் ஊற்று கண்ணே கருணாநிதிதான். இந்த தீய நோய் கிருமி உற்பத்தியாகும் இடம் கருணாநிதி என்கிற கழிசடையின் குடும்ப அரசியலில் இருந்துதான்.

இந்த நோயை தமிழகத்தில் இருந்து முற்றிலும் கொன்று ஒழிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் தலையான கடமையாகும். மக்கள் 'வாக்கு என்கிற ஊசி மூலம் கருணாநிதி எதிர்ப்பு என்கிற நோய் எதிர்ப்பு மருந்தை செலுத்தி' இந்த தீய நோய் கிருமியை மொத்தமாக இந்த நாட்டை விட்டு அழித்து ஒழிக்க வேண்டும்.

துரோகம்: ஈழத்தமிலர்களுக்கு கருணாநிதியின் துரோக வரலாறு ஒன்று இருக்கும் வரை சொல்லப்படும். கொத்து கொத்தாக தமிழ் மக்களை  சிங்கள பயங்கரவாத ராணுவம் கொல்லும் பொழுது வேடிக்கை பார்த்தார். அந்த நேரத்தில் கனிமொழிக்கு MP பதவி கேட்டு சோனியா காந்தி வீட்டு வாசலில் தவம் கிடந்தார். மொத்த தமிழர்களின் முதுகில் குத்தினார்.

கோவை கலவரம் இந்துபயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் பொழுது தமிழக முதல்வராக இருந்து கலவரத்தை முறையான நடவடிக்கை கொண்டு அடக்க தவறினார். ஹிந்துத்துவா காவி பயங்கரவாதிகளோடு கூட்டு சதி செய்து முஸ்லிம்களில் 19 அப்பாவிகளை வேட்டையாடி கொன்ற காவல்துறை மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்காமல் வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல் அவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து, பதவி உயர்வு கொடுத்து கவுரவித்தார்.

தமிழக மீனவர்படுகொலையை கண்டித்து லெட்டர் எழுதி பொழுது போக்கினார். நாசகார கூடங்குளம் அணு உலையை கொண்டுவர அரும்பாடுபட்டார். அந்த மக்களின் போராட்டங்களை இரும்பு கரம் கொண்டு அடக்கினார். பினாமி பெயரில் சாராய ஆலைகளை நடத்தி ஏழை மக்களின் இரத்தத்தை குடித்தார். சினிமா துறையையும், தொலைக்காட்சி துறையையும் தனது குடும்பத்தின் பிடிக்குள் கொண்டு வந்தார். கயல் எரிவாய்வு, மீத்தேன் திட்டம், ஜல்லிகட்டுக்கு தடை என்று தமிழ்நாட்டை பன்னாட்டு கம்பனிகளுக்கு கூறு போட்டு விற்றார்.

ஆற்று மணல் கொள்ளை, தாமிரபரணிரை உறிஞ்சும் கொக்கலோலா, ஏரிகளை ஆட்டைபோட்டு நிலங்களை அபகரித்தல் முதல் கிரனைட் கொள்ளை வரை அனைத்திலும் லாபம், லஞ்சம் பெற்று தமிழகத்தின் வழங்களை சுரண்டி ஆசியாவின் பணக்காரர்களுள் ஒருவராக உயர்ந்தார். சாக போற 94 வயதில் மீண்டும் ஆட்சியை பிடிக்க துடிக்கிறார். இந்த பணவெறி, அதிகாரவெறி, இரத்தவெறி பிடித்த குள்ளநரியை இந்த தேர்தலோடு மக்கள் கொன்று ஒழிக்க வேண்டும். மானதமிளர்கள் செய்வார்களா?
*யாழினி*

No comments: