சிட்னி:ஆஸ்திரேலியாவில் இந்திய வாலிபர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த பஞ்சாபைச் சார்ந்த நிதின் கார்க்(21) என்ற இளைஞர் மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார்.
பார்ட் டைம் வேலைக்காக காலையில் ரெஸ்ட்டாரெண்டிற்கு செல்லும் வழியில் வைத்துதான் அடையாளம் தெரியாத நபர்கள் நிதினை கத்தியால் குத்தியுள்ளனர்.இந்தியர்களுக்கெதிராக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இனவெறித்தாக்குதலின் உச்சகட்டம்தான் நிதினின் படுகொலை.
கடந்த ஆண்டு மட்டும் 100க்கு மேற்பட்ட வழக்குகள் இந்தியர்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக பதிவுச்செய்யப்பட்டுள்ளன.
செய்தி: நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment