May 25, 2015

அமெரிக்கன் திரைப்படங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி!

அமெரிக்காவில் உருவாக்கப்படும் ஹாலிவுட் படங்களில் தவறாமல் சில விஷயங்கள் இடம்பெறும்.  இது போன்ற விடயங்கள் இல்லாத அமெரிக்க திரைபடங்களே இல்லை என்று கூட சொல்லலாம். 
எப்பவுமே FBI/CBI வேலை பாக்குற எல்லாருமே அண்டர்கவர் போலீஸாக இருப்பார்கள். மக்கள் தொகையில பெரும்பாலான ஆட்கள் போலீஸாக வேலை செய்வார்கள். எப்பேற்பட்ட ஆபத்தாயினும் போலீஸ் குடும்பம் மட்டும் அழகாக சிரித்தப்படி கடைசியில் நிற்பார்கள்.

அமெரிக்க படங்களில் காட்டும் பள்ளிகள் யாவும் கால்பந்து, அல்லது பேஸ் பால் இரு விளையாட்டுகளை மட்டுமே பிரபல படுத்துவார்கள். சிறப்பு ஸ்பான்சர்ஷிப் வாங்கிடுவார்கள் போல.

வேற்று கிரகவாசிகள் பூமியை தாக்க நினைத்தாலே அவர்கள் இறங்கும் இடம் அமெரிக்கா மட்டும் தான். ஏலியன்ஸ் அட்டாக் அமெரிக்கர்கள் மீது மட்டுமே. அமெரிக்காவில் மட்டுமே ஓநாய்கள், வித்யாசமான ஜந்துக்கள், மற்றும் ரத்தக் கட்டேரிகள் வரும்.மற்ற நாடுகளுக்கு அந்த கொடுப்பனை கிடையாது.

இயற்கை சீற்றம் என்றாலே முதலில் தாக்கப்படுவது வெள்ளை மாளிகையும் அதிபரும் தான். அமெரிக்க அதிபர் மட்டுமே நடு ரோட்டில் கூட இறங்கி மக்களுக்காக குரல் கொடுப்பார். தேவைப்பட்டால் துப்பாக்கி சகிதமாக அதிபரே ஆபரேஷனிலும் இறங்குவார்.

கண்டிப்பாக அமெரிக்க படமெனில் ஒரு ஆப்பிரிக்கா நாட்டு கருப்பு நடிகர் பரிதாபமாக உயிர் விடுவார். அதிலும் ஹீரோக்களுக்காக மட்டுமே அவர்களின் உயிர் போகும். தீவிரவாதிகள் என்றால் உலகின் ஏதாவது ஒரு நாட்டின் முஸ்லிம்களாக இருப்பார்கள். தங்கள் நாட்டை அழிக்க  சதி செய்வதில் ரஷ்யா, சீனா, வடகொரியா கம்யூனிஸ்ட்கள் இருப்பார்கள். சுற்றி சுற்றி அமெரிக்க படங்களின் மைய கரு இதுவாகவே அமைந்து இருக்கும்.

மேலும் தாங்கள் சண்டையிட்ட நாடுகளில் தங்கள் ராணுவம் செய்த பராக்கிரமங்கள், தங்கள் போர் தளவாடங்களின் மகிமைகள், வல்லமைகள் இவற்றை ஓவர் பில்டப் செய்து உலக நாடுகளின் தலைமை தாங்கள்தான் என்பதை நிரூபிக்கும் தேச பக்தி படங்களாகவே  இருக்கும்.  மற்றபடி நல்ல கருத்துக்களை, காதலை, அன்பை, குடும்ப பாச நேசங்களை சொல்லவதாக வரும் படங்கள் அரிதிலும் அரிதே.

No comments: