Jun 29, 2015

கொலைகார காவல் துரையின் தொடரும் கொலைகள்!

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வசித்து வரும் ஷமீல் என்ற இளைஞர், அவருடன் முன்பு பணியாற்றிய பெண் ஒருவருக்கு மனிதாபிமான அடிப்படையில் குடும்ப பிரச்சினையை தீர்க்க உதவியிருக்கிறார்.
இந்நிலையில் அந்தப் பெண் திடீரென மாயமான நிலையில், அதற்கு காரணம் ஷமீல்தான் என பள்ளிகொண்டா காவல்துறையினர் கடந்த 15-ம் தேதி ஷமீலை விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
போலீஸ் நிலையத்தில் ஷமீலை வைத்து விசாரிக்காமல், வெளியிடத்தில் வைத்து கடுமையாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட ஷமீல் 19-ம் தேதி ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும், 23-ம் தேதி வேலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால் ஷமீலின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததை அடுத்து, சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
சித்திரவதை எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட அன்று இந்த துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
தமிழகத்தில் காவல் கொட்டடி மரணங்கள் குறைந்தபாடில்லை என்பதற்கு சாட்சிதான் 26 வயதான ஷமீலின் மரணமாகும்.
இந்தக் கொலைக்கு காரணமான காவலர்கள் மீது உடனடியாக கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் தொடர்ந்து இது போன்ற காவல்நிலைய கொட்டடியில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதை தடுக்க, காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.