Sep 4, 2014

இஸ்ரேலின் இருதயம் வரை செல்வோம்!

செப் 04/14: ஹமாஸின் இராணுவ எழுச்சியும், அவர்களின் போராட்ட முறைமைகளும் இஸ்ரேலை கலக்கமடைய செய்துள்ளது. ஹமாஸ் அடைந்த  இராணுவ வெற்றி காட்டிலும் அவர்கள் பெற்ற அரசியல் வெற்றி இஸ்ரேலை திகைக்க வைத்துள்ளது. 

காஸா மீதான இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பு அதன் திட்டமிட்ட யுத்த நிகழ்ச்சி நிரல்களிற்கு மாற்றமாக நடந்த போது அதிர்ந்தது இஸ்ரேல் மட்டுமல்ல மொத்த உலகமும்தான். மொத்த அரபு தேசங்களையும் தனது ராணுவ பலத்தால் அச்சுறுத்தி வந்த இஸ்ரேலுக்கு காஸாவின் தோல்வி அதன் எதிர்காலத்தையே தோல்வி பயத்தில் தள்ளியது. 

ஹமாஸ் இயக்கத்தின் ராணுவ பிரிவான இஸ்ஸத்தீன் அல்-கஸ்ஸாம் போராளிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தற்காகாப்பு சண்டைகள் என்ற எல்லைகளை தாண்டி இஸ்ரேலை எதிர்த்து போர் செய்யும் அதன் ராணுவ வலிமையையும், திடமான மனோ வலிமையையும் கண்ட இஸ்ரேலிய ஸியோனிஸ அரசு கதிகலங்கி விட்டது என்றே சொல்லலாம். இஸ்ரேல் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை உலகுக்கு தரலாம் என்று எண்ணி இஸ்ரேலின் எண்ணம் தவிடுபொடி ஆக்கப்பட்டுள்ளது.

இந்த யுத்தத்தில் ஹமாஸ் போராளிகள் மட்டுமன்றி காஸாவின் பொது மக்களும் யூத இராணுவத்தின் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்கள், பீரங்கி தாக்குதல்கள், விமானங்களின் காட்டுத்தனமான குண்டுத் தாக்குதல்கள், ஏவுகணை தாக்குதல்கள் ஆகியவற்றால் ஏற்பட்ட  உயிர் மற்றும் பொருள் இழப்புகளை தாங்கி கொண்டு தங்கள் போராளிகளுடன் துணை நின்றது வரலாற்றின் வைர வரிகளில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும். இது ஹமாஸ் இயக்கம் எந்த அளவு பாலஸ்தீன மக்களின் உள்ளங்களை வென்றுள்ளது என்பதை பறைசாற்றுகிறது. 

உலகின் உயர்ந்த இனம் என தம்மையும், ஏவல் நாய்கள் என பலஸ்தீனர்களையும் எண்ணி இறுமாத்திருந்த யூத தேசத்தின் தலைவர்களிற்கு தங்கள் சிந்தனைகள் மற்றும் தீர்மானங்கள் பற்றிய மீள்பார்வையின் அவசியத்தை உணர்த்துவதாக காஸா ஆக்கிரமிப்பு - 2014 அமைந்துள்ளது. பயங்கரவாதிகள் என அமெரிக்க அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட “ஹமாஸ்” இந்த இஸ்ரேலிய மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்பு முயற்ச்சியால் “மக்களின் பாதுகாப்பிற்கும் விடுதலைக்கும் போராடும் தியாகம் மிகுந்த இயக்கம்” எனும் புது முகவரியுடன் உலகம் முழுக்க வலம் வருகிறது. உலக விடுதலை இயக்கங்கள் பட்டியலில் ஹமாஸை லத்தீன் அமெரிக்க நாட்டு பத்திரிகைகள் புகழும் அளவிற்கு அதன் வல்லமை வளர்ந்துள்ளது.

ஹமாஸ் தங்கள் போராட்டத்தின் அரசியல் மற்றும் இராணுவ வெற்றிகள் பற்றி புளுகாங்கிதம் அடைந்துள்ளது. அதன் போராளிகள் உற்சாகமாக வாகனங்களில் பவனி வருகிறார்கள். குழந்தைகள் குண்டுகள் வீழ்ந்து வெடித்துச் சிதறிய வீதிகளில் இனிப்பு மிட்டாய்கள் வழங்க மகிழ்கின்றனர். ஹமாஸ் நேற்றைய தினம் காஸா மக்களிற்கும், உலகம் முழுவதும் வாழும் பலஸ்தீனர்களிற்கும் விடுத்த செய்தியில்...  “நாம் வெற்றி பெற்றுள்ளோம். நாம் இன்னும் எமது படைபலத்தை பெருக்குவோம், சுரங்கங்களை தோண்டி இஸ்ரேலின் இருதயம் வரை  செல்வோம், நவீன ஆயுத பலங்களுடனும் தொழில் நுட்பங்களுடனும் எம்மை கட்டமைப்போம்” என முழங்கியுள்ளது. 

No comments: