ஆகஸ்ட் 07/14: இஸ்ரேலுடனான போரில் காஸா வெற்றி பெற்றுள்ளதாக ஹமாஸ் இயக்கமும் அல்ஜிஹாத் அல்இஸ்லாமி இயக்கமும் அறிவித்துள்ளன.
எகிப்து நாட்டின் தலையீட்டின் மூலம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள 72 மணிநேர யுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்து, இஸ்ரேல் படைகள் வாபஸ் ஆகா தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து ஹமாஸ் மற்றும் அல்ஜிஹாத் அல்இஸ்லாமி இயக்கங்கள் காஸாவின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளன.
ஹமாஸ் இயக்கத்தின் செய்தி தொடர்ப்பாளர் கருத்து தெரிவிக்கையில், இஸ்ரேல் நூறு சதவீதம் தோல்வியை தழுவி விட்டது என்றார். போராளிகள் இன்னும் மாபெரும் பலத்துடனே இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் படைகளை வாபஸ் வாங்கியுள்ளபோதும், எல்லைப் புறத்தில் தயார் நிலையில் அவை இருக்கும் என்று இஸ்ரேலிய ராணுவ கமாண்டர் தெரிவித்துள்ளார். இந்த யுத்தத்தில் தமது தரப்பில் 64 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ஒவ்புக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment