AUG04/14:கேரள பல்கலைக் கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராய் காந்திக் குறித்து உண்மையை பேசி சர்ச்சைக்குள் சிக்கி இருக்கிறார்.
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அருந்ததி ராய் 19ஆம் நூற்றாண்டில் தலித் மக்களின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர் அய்யன்காளி குறித்து புகழ்ந்து பேசினார்.
அந்த உரையின் போது மகாத்மா காந்தி குறித்து குறிப்பிடுகையில், காந்தி சாதீயத்தின் பிரதிநிதியாக இருந்தார் என்றும் தேசம் அவருக்கு தகுதியில்லாத கண்ணியத்தை வழங்கியது. காந்தியை விட அய்யங்காளி மகாத்மாவாக போற்ற தகுதி பெற்றவர் என்றார். அய்யங்காளி சாதீய கட்டமைப்புக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தியவர், அவருடைய புகழ் கேரளாவுக்கு வெளியே எட்டாததில் மர்மம் உள்ளது. கேரள பல்கலைக் கழகத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை சூட்டியதை விட அய்யங்காளியின் பெயரை சூட்டுவதே சிறந்தது’ என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து திருவனந்தபுரம் காவல்துறை ஆணையர் வெங்கடேஷ் கூறியதாவது, அருந்ததி ராய் மீது கோட்டயத்தைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் டிஜிபியிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக, பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் விடியோ பதிவுகளை வழங்குமாறு அந்தப் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில் அருந்ததி ராய் தான் கூறிய கருத்துக்களை வாபஸ் பெற்று, மன்னிப்புக்கோரவேண்டும் என்று கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு மாநிலத்தின் உள்துறை அமைச்சரே இப்படி பேசினால் நாட்டின் கருத்து சுதந்திரம் கேள்விக்குறியாகி போகும்.
No comments:
Post a Comment