Jul 26, 2011

சாட்டிலைட்டில் இருந்தும் தெரியுது கோடீஸ்வரரின் பெயர்!!

July 27,அபுதாபி: தன் பெயரை எதிலாவது எழுத வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு. மரத்தில், பஸ் சீட்டில், மலை உச்சியில்.. இப்படி பொறித்து வைப்பார்கள்.

 ஐக்கிய அரபு குடியரசின் அபுதாபி மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர். உலக கோடீஸ்வரர்களில் ஒருவர். உலகில் அதிகம் கார் வைத்திருப்போர் லிஸ்ட்டில் முன்னணியில் இருப்பவர். வகைக்கு ஒன்றாக 200 கார், டிரக் வைத்திருக்கிறார்.

அபுதாபிக்கு அருகில் உள்ள ஃபுடாய்சி என்ற தீவை இவரது தந்தை இவருக்கு பரிசாக கொடுத்தார். அதில் தனது பெயரை ரத்தின சுருக்கமாக ‘ஹமத்’ என்று முக்கால் கி.மீ. உயரம், 3 கி.மீ. நீளத்துக்கு எழுதி வைத்திருக்கிறார். இந்த எழுத்துகள் அனைத்தும் பிரமாண்ட பள்ளம் வெட்டியதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. கடற்கரையில் இருந்து பிரமாண்ட பள்ளம் வெட்டி அதில் கடல் நீரை வரவழைத்துள்ளார்.  செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் போட்டோக்களில்கூட அவரது பெயர் தெரிகிறது.  இதற்காக அவர் ரூ.99 ஆயிரம் கோடி செலவு செய்திருக்கிறார்.

சிந்திக்கவும்: ஒரு பக்கம் மக்கள் பசியால், பட்டினியால் சாவுகிறார்கள் இதை போன்ற செல்வந்தர்கள் பணத்தை இப்படி செலவு செய்கிறார்கள். இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் வீடுதான் உலகிலேயே அதிக பொருள் செலவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிட தக்கது. இப்படி பட்ட சுயநலம் கொண்டவர்களின் செல்வங்களை பறித்து ஏழை மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

7 comments:

காந்தி பனங்கூர் said...

சோமாலியாவில் வயிற்று பசியுடன் மக்கள் வாடுவதை பார்க்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆனால் இவர்கள் காசை வீனாக இப்படி செலவழிக்கிறார்கள். முக்கால்வாசி பணக்காரர்கள் ஏழைகளுக்கு கொடுக்க மனசில்லாதவர்களாக தான் இருக்கிறார்கள்

Anonymous said...

ARABU NATTU MANNARGAL INNUM ISLATHAI PIN PATRA MARANTHU VETTIYAHA SELAVU SEIHINRANAR

Anonymous said...

ARABU NATTU MANNARGAL INNUM ISLATHAI PIN PATRA MARANTHU VETTIYAHA SELAVU SEIHINRANAR

Anonymous said...

ARABU NATTU MANNARGAL INNUM ISLATHAI PIN PATRA MARANTHU VETTIYAHA SELAVU SEIHINRANAR

Anonymous said...

Still this kind of people living this world never ever Muslims make it unit thats why all Arab countries going to back wards when make it solid unit that day will be super power in the world. Inshallah

Anonymous said...

Still this kind of people living this world never ever Muslims make it unit thats why all Arab countries going to back wards when make it solid unit that day will be super power in the world. Inshallah

Anonymous said...

இஸ்லாத்தின் வழிமுறைகளை கேவலப்படுத்துவதில் முன்னணி வகுக்கின்றனர் இந்த அரபுலக
பணக்காரர்கள். நபிகளாரின் பண்புகளை அப்படியே பின்பற்றிய அபு பக்ர், உமர்,உத்மான், அலிய், (அல்லாஹ் இவர்களை பொருந்திக்கொள்வானாக) இவர்கள் பாதி உலகத்தை தங்களின் ஆட்சியின்
கீழ் வைத்திருந்தும் அன்றாடம் ஏதாவது கூலி வேலை போன்ற தொழில் செய்துதான் பிழைப்பை
நடத்தி வந்தார்கள்.

அதனால்தான், காந்திஜி கூட இந்த நாட்டிற்கு ஒரு உமருடைய ஆட்சி தேவை என்று சொன்னார்.

ஆனால் இன்று அதே நபிகள் நாயகத்தின், அவர்களின் அடியொற்றி வாழ்ந்த உத்தம தோழர்களின் வழியை பின்பற்ற வேண்டிய இந்த அதிகப்பிரசங்கிகள் ஏழைகளுக்கு சேரவேண்டிய பொருளை
தங்களின் சுய விளம்பரங்களுக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

அழிவை தாங்களே தேடிக்கொள்கின்றனர்.

-MUHAMMED THAMEEM