July 27,சென்னை : நடிகை விஜயலட்சுமி கூறியுள்ள பாலியல் புகாரை சட்டரீதியாக சந்திப்பேன் என்று இயக்குனர் சீமான் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தலைமை செயலகத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், பேராசிரியர் தீரன், சாகுல் அமீது, அய்யநாதன், சிவகுமார் ஆகியோர் சந்தித்து பேசினர். பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்க இந்திய அரசு நடவடிக்கை வேண்டும் என்று சட்ட பேரவையில் தீர்மானம் நிறை வேற்றியதற்கு நன்றி தெரிவிக்க முதல்வரை சந்தித்தோம். இலங்கை தமிழர் தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவாக இருப்போம்.
காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதால் இந்திய இறையாண்மை கெட்டு விடாது. இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நடிகை விஜயலட்சுமி என் மீது பாலியல் புகார்தான் சொல்லியுள்ளார். வழக்கு தொடரவில்லை. வழக்கு தொடர்ந்தால் அதை சட்ட ரீதியாக சந்திப்பேன். இவ்வாறு சீமான் கூறினார்.
No comments:
Post a Comment