Oct 12, 2009

கற்கால மூடநம்பிக்கையை நம்பி இருக்கும் BJP


பாரதீய ஜனதாவுக்கும்- பகுத்தறிவுக்கும் ரெம்ப தூரம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! . சமீபத்தில் வெள்ளத்தால் வட கர்நாடகா மிகவும் பாதிக்கப்பட்டது. இத்தகைய பாதிப்புக்கு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததுதான் காரணம் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியது.இதற்க்கு கர்நாடக BJP கல்வி அமைச்சர் ராமச்சந்திர கவுடா அற்புதமான பதிலை திருவாய்மலர்ந்துள்ளார்.

வெள்ளச்சேதம் பயங்கரமாக இருக்கும் என்று ஜோதிடர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கவேண்டும். ஆனால் எந்த சோதிடராவது வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்தார்களா? அப்படி எச்சரித்து இருந்தால் அரசு தேவையான முன்னெச்சரிக்கை எடுத்து உயிர் பொருள் சேதம் ஏற்படாமல் தடுத்து நிறுத்தி இருக்கும். நான் முழுக்க முழுக்க நம்பியிருக்கும் ஜோதிடர்கள் சரியான தகவல் தெரிவிக்காமல் இருந்துவிட்டார்கள். என்று ஒரு பொறுப்பான அமைச்சர் தமது மாநிலத்தில் ஏற்பட்ட இழப்புக்கு ஜோதிடர்கள் முன்னறிவிப்பு செய்யாததுதான் காரணம் என்று கூறி கற்கால மூடநம்பிக்கையை எற்படுதி இருகிறார்.

No comments: