
ஹிந்துத்துவா இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் நரபலி சிந்தனைதான். ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை செய்யும் முதுநிலை விஞ்ஞானிகள் கதி இது வென்றால் இவர்களின் நம்பிக்கையை என்னவென்று சொல்வது.
மத்தியபிரதேச மாநிலத்தில் இளநிலை விஞ்ஞானியை, 2 முதுநிலை விஞ்ஞானிகள் நரபலி கொடுக்க முயன்றதாக அவரது மனைவி போலீஸில் புகார் கூறினார்.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் இளநிலை விஞ்ஞானியாக உள்ள சுசில்குமார் மிஸ்ராவின் மனைவி ஸ்ரீதா சர்மா. இவர் தனது கணவரை உடன் வேலை செய்யும் முதுநிலை விஞ்ஞானிகள் நரபலி கொடுக்க கடத்தியதாக, கடந்த 4 நாட்களுக்கு முன்பு குவாலியர் போலீஸில் புகார் செய்தார்.
அவர்களிடமிருந்து சர்மா காயங்களுடன் தப்பிவந்ததாகவும், பின்னர் வலது கையில் ஏற்பட்ட காயதுக்காக கண்டோண்மெண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஸ்ரீதாசர்மா கூறும்போது, விஞ்ஞானி ராவ் மந்திரஜால வித்தைகள் மீது அதிக ஆர்வம் காட்டியுள்ளார். எனவே அதுதொடர்பான புத்தகங்களை படித்ததோடு, பல இடங்களுக்கும் சென்றுவந்துள்ளார் என்றார்.
No comments:
Post a Comment