Oct 13, 2009

மும்பையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சி வேட்பாளர்கள்


மும்பையில் பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூபாய் 2 1/2 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.மராட்டியத்தில் இன்று சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த நிலையில் மும்பை பாந்த்ரா தொகுதியில் பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறி காங்கிரஸ் வேட்பாளர் ஜனார்த்தன் சந்துர்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் போலீசில் புகார் கூறினார். பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சியினர் வந்த காரில் பண்டல், பண்டலாக பணம் இருந்தது அதை எடுத்து வாக்காளர்களுக்கு விநியோகித்தார்கள் என்று போலீசில் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதேபோல சந்திரபூர் தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளர் நானா ஷம்குல் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. அவர் காரில் இருந்து ரூ.27லட்சத்து 37 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

இதே போல மாநிலம் முழுவதும் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. இதுதான் ஹிந்து பாசிச பாரதீய ஜனதா.

No comments: