Jun 28, 2010

பயங்கரவாத பி.ஜே.பி-யின் ஒருதலைபட்சக் கொள்கை: கர்நாடக லோகயுக்தா நீதிபதி ராஜினாமா.


பெங்களூர்:கர்நாடகா லோகயுக்தா பதவியிலிருந்து நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தீடீர் ராஜினாமா செய்துள்ளார். பெருகிவரும் ஊழல்களுக்கெதிராக பயங்கரவாத பி.ஜே.பி. அரசின் ஒருதலைபட்சமான கொள்கையை காரணம் காட்டி, தன் பதவி ஆயுள் இன்னும் ஓர் ஆண்டு இருக்கும் நிலையில், ஹெக்டே ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகா ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் மாற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஹெக்டே தன் ராஜினாமாவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும், இவ்வேண்டுகோளை ஹெக்டே நிராகரித்து விட்டதாக தெரிகிறது.

கடந்த 2006ம் ஆண்டு ஹெக்டே லோகயுக்தா தலைவராக நியமிக்கப்பட்டார். சுரங்க தொழிலில் ஈடுபட்டுள்ள பயங்கரவாத இரண்டு பி.ஜே.பி. அமைச்சர்களான ரெட்டி சகோதரர்களின் ஊழல்களை நிரூபித்தும், ஆளும் பயங்கரவாத பி.ஜே.பி. அரசு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல அமைச்சர்களின் அலுவலகத்தை ரெய்டுகள் செய்துள்ள ஹெக்டே, பயங்கரவாத பி.ஜே.பி. எம்.எல்.ஏ. சம்பங்கிவிற்கு எதிராக வழக்கையும் தொடர்ந்துள்ளார். ஆனால் ஹெக்டேவின் அனுமதி இல்லாமலேயே இவர்கள் அனைவரும் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் சிலருக்கு பதவிகளும் , பரிசுகளும் கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் விரக்தியடைந்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே லோகயுக்தா பதிவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.இதனிடையே, பயங்கரவாத பி.ஜே.பி. அரசின் ஒருதலைபட்ச கொள்கைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊழல்கள், பொய் வழக்குகள், பாலியல் குற்றச்சாட்டுக்கள், விவசாயிகளை கொல்லுதல், மதக்கலவரத்தை தூண்டுதல், மதக்கலவரத்தை தூண்டும் சமூக விரோதிகளின் மேல் நடவடிக்கை எடுக்காமை, லோகயுக்தா பதவிகளை பறித்தல் என நீண்ட ஒருதலைபட்ச பட்டியல் நிறைந்த கர்நாடக அரசை மத்திய அரசு உடனே தூக்கி எறியவேண்டும் என்றும் பி.எஃப்.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது

No comments: