Sep 12, 2017

மாதவிடாய் உதிரப்போக்கை நிறுத்த!

பெண்களுக்கு ஏற்படும் மிகவும் தொல்லைத் தரக்கூடிய நோய்களுள் முதன்மையானது மாதவிடாய் நோய் என்று சொல்லலாம். காலம்தவறி மாதவிடாய் வருவதும், மாதவிடாய் காலங்களில் அதிகமாக உத்திரம் போகுதலும் உடனே கவனிக்க பட வேண்டிய ஒன்றாகும். மாதவிடாய் பிரச்சனை சரி செய்யப்படவில்லை என்றால் அதுவே பல நோய்களை உண்டாக்கும். பிற்காலங்களில் மலட்டு தன்மையை உண்டாக்கிவிடும்.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கை தடுக்க: 1). கரிய பகலித்தைச் சிறிது நீரில் நனைத்து கரைத்து பின்னர் கல் மண் இல்லாது சுத்தப்படுத்தி காய வைத்து பொடித்து வைத்துக் கொண்டு ஒரு சிட்டிகை எடுத்து வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டு வர 6 – 7 நாட்களில் பெரும்பாடு முழுவதுமாக நீங்கும்.

2). அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்

3). வில்வ இலையுடன் வெங்காயத்தை சேர்த்து இடித்து சாறு எடுத்து சம அளவு விளக்கெண்ணெயில் சேர்த்து லேசாக காய்ச்சி வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வர இரத்தப் போக்கு நிற்கும்.

4). ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

5). அதிமதுரம் 20 கிராம் எடுத்து, இடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கஷாயம் இறக்கி காலை மாலை தொடர்ந்து உள்ளுக்குச் சாப்பிட்டு வரவும் பெரும்பாடு நீங்கும்.

6). அத்திப்பட்டை நாவல் பட்டை, கருவேலம் பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடித்து சூரணமாக வைத்துக் கொண்டு நாள் ஒன்றிற்கு மூன்று வேளை ஒரு ஸ்பூன் வீதம் உட்கொண்டு வர பெரும்பாடு நீங்கும்.

7). அசோக மரப்பட்டை 3 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். இதனை தினமும் மூன்று வேளையும் ஒரு  ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் மாத விலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.

8). சீரகம், வெங்காயம், கேரட், பச்சைக்கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து ஒரு எலுமிச்சை அளவு காலை மாலை இரு வேளை சாப்பிட்டு வர பெரும்பாடு நீங்கும்.

9). தரைப்பசலை இலை, வெங்காயம், சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து காலை மாலை சாப்பிட்டு வர பெரும்பாடு நீங்கும்.

10). கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இவற்றை பொடியாக அரைத்து வைத் துக் கொள்ளவும். இதில் 5 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் தடைபட்ட மாதவிலக்கு  சரியாகும். அதிக ரத்தப் போக்கும் கட்டுப்படும்.

11). செம்பருத்திப் பூக்களை அரைத்து அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு ஒழுங்காகும்.

12). சோம்பு, மாவிலங்கப்பட்டை, மிளகு மூன்றையும் சம அளவுக்குக் காய்ச்சி 100 மில்லி அளவுக்குக் குடித்தால் மாதவிலக்கு பிரச்னைகள் சரியாகும்.

No comments: